ஆற்றுப்படை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆற்றுப்படை நூலுக்குத் தொல்காப்பியம் இலக்கணம் கூறுகிறது. சங்ககால எட்டுத்தொகை நூல்களில் ஆற்றுப்படைப் பாடல்கள் உள்ளன. சங்கநூல் பத்துப்பாட்டில் ஐந்து பாட்டுகள் ஆற்றுப்படை நூல்கள்.

பிற்காலத்தில் ஆற்றுப்படை நூலைத் தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கலாயினர். இதனைப் பாட்டியல் வகைகளுள் ஒன்றாக்கினர். ஆற்றுப்படுத்துதல் என்பது வழிப்படுத்துதல் என்னும் பொருள் உடையது. விறலியர், பாணர், கூத்தர், பொருநர் என்போர் தமது வறுமையைப் போக்க வள்ளல்களிடம் சென்று பொருள் பெறுவது அக்கால வழக்கம். அவ்வாறு பரிசு பெற்றுச் செல்லும் மேற்கூறிய நால்வகைப் பிரிவினருள் ஒருவன், பரிசு பெறச் செல்லும் இன்னொருவனை வழிப்படுத்தும் முறையில் அமைவதே ஆற்றுப்படை ஆகும். அகவற்பாக்களாக அமையும் இப் பாடல்கள் தலைவனின் புகழ், கொடை, கொற்றம் ஆகியவை பற்றி எடுத்துக் கூறுவதாக அமையும்.[1].

  1. திருமுருகாற்றுப்படை
  2. பொருநராற்றுப்படை
  3. சிறுபாணாற்றுப்படை
  4. பெரும்பாணாற்றுப்படை
  5. கூத்தராற்றுப்படை

குறிப்புகள்

  1. முத்துவீரியம், பாடல் 113

உசாத்துணை

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=ஆற்றுப்படை&oldid=14420" இருந்து மீள்விக்கப்பட்டது