ஆற்றுப்படை இலக்கணம்
தொல்காப்பியம் ஆற்றுப்படை நூலுக்கு இலக்கணம் கூறுகிறது. வள்ளல் ஒருவரிடம் தன் வறுமையைப் போக்கும் வளங்களைப் பெற்றுவந்த ஒருவர். கூத்தர், பாணர், பொருநர், விறலி முதலானோரை அவரிடம் செல்லுமாறு வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை.[1]
புறப்பொருளின் இலக்கணம் கூறும் புறப்பொருள் வெண்பாமாலை இவர்கள் நால்வருக்கும் தனித்தனியே இலக்கண நூற்பாவும், பொருள் விளக்கப் பாடலும் கூறுகிறது. [2]
பாட்டியல் நூல்களில் காலத்தால் முந்திய பன்னிரு பாட்டியல் என்னும் தொகுப்பு நூலில் ஆற்றுப்படைக்குப் பொதுவகையில் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. [3]
அடிக்குறிப்பு
- ↑
புறத்திணையின் 7 திணைகளில் ஒன்றான பாடாண் திணையின் துறைகளில் ஒன்றாகத் தொல்காப்பியர் ஆற்றுப்படையைக் குறிப்பிடுகிறார்.
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கம் – தொல்காப்பியம், புறத்திணையியல் 88 - ↑ புறத்திணையை 12 எனப் பகுத்துக்கொண்ட புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூல் கூத்தர், பொருநர், பாணர், விறலி ஆகியோரின் ஆற்றுப்படைகளுக்குத் தனித்தனியே இலக்கணம் கூறுகிறது. புறப்பொருள் வெண்பாமாலை, பாடாண் படலம் 28 முதல் 31
- ↑ பன்னிரு பாட்டியல் 22