நற்றாய்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அகத்திணை மாந்தர்களில் தாய் என இருவரைக் குறிப்பிடுவது வழக்கம். ஒருவர் பெற்றெடுத்த தாய். இவரை அக இலக்கியங்கள் நற்றாய் (நல்+தாய்) எனக் குறிப்பிடுகின்றன. பொதுவாகத் தாய் எனக் குறிப்பிட்டால் அது பெற்ற தாயையும், சிறப்பு வகையால் தலைவியை வளர்த்த செவிலியையும் குறிக்கும். [1]

நற்றாய்

இவரை யாய் (என் தாய்), ஞாய் (உன் தாய்) என்று பாகுபடுத்தி அழைப்பது வழக்கம். குறுந்தொகை 40 அக வாழ்க்கையில் பெற்ற தாயின் பங்கு பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

  • தலைவன் தலைவியைக் கொண்டுதலைக்கழிந்தபோது நற்றாய் புலம்புவாள். [2]
  • களவு வாழ்க்கை பற்றி நற்றாய் தன் மகளோடும், மகளின் கிழவோனோடும் நேருக்கு நேர் பேசும் வழக்கம் இல்லை. [3]

அடிக்குறிப்புகள்

  1. ஆய் பெருஞ் சிறப்பின் அரு மறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும். தொல்காப்பியம், களவியல் 34
  2. தொல்காப்பியம் அகத்திணையியல் 39
  3. கிழவன் தன்னொடும் கிழத்தி தன்னொடும் நற்றாய் கூறல் முற்றத் தோன்றாது. – தொல்காப்பியம் செய்யுளியல் 184

காண்க

தொகு அகத்திணை மாந்தர்
அகத்திணைத் தலைவர்கள் தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
அகத்திணை வாயில்கள் தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர்
"https://tamilar.wiki/index.php?title=நற்றாய்&oldid=20464" இருந்து மீள்விக்கப்பட்டது