விருந்தினர்
Jump to navigation
Jump to search
விருந்தினர் என்போர் விருந்தாளிகள். இவர்களை வடநூலார் ‘அதிதி’ என்பர். [1] தமிழ்நெறி வாழ்க்கையில் விருந்தினர் வெறுமனே விருந்துண்டு செல்பவர்கள் அல்லர். கற்பியல் வாழ்க்கையில் தலைவன், தலைவியர் கூடி வாழ உதவி புரியும் வாயில்களாகவும் விளங்கினர்.
- சொல்விளக்கம்
- விருந்து என்னும் சொல்லே விருந்தினரைக் குறிக்கும். [2]
- நூலுக்கு உரிய வனப்புகள் எட்டில் ஒன்று விருந்து (புதுமை) என்னும் வனப்பு
- அகவாழ்வில் விருந்தினர்
தலைவியின் ஊடலைத் தணிக்கும் வாயில்களில் ஒருவர் விருந்தினர். [3] விருந்து வந்தால் களவு ஒழுக்கமும் தடைபடும். [4] தலைவி ஊடாமல் இருந்தால் தலைவன் விருந்தினரோடு வருவது வழக்கம். [5] தலைவியின் மாண்புகளில் ஒன்று விருந்தோம்பல். [6]
- புறவாழ்வில் விருந்தினர்
இல்லறத்தார் பேணவேண்டிய ஐவருள் ஒருசாரார் விருந்தினர். [7] விருந்தோம்பல் பற்றித் திருக்குறள் சிறப்பாக எடுத்துரைக்கிறது.[8]
அடிக்குறிப்புகள்
- ↑ Atithi devo bhava Sanskrit: अतिथि देवो भवः; English: 'The guest is God' or 'Guest become God'
- ↑ தொல்காப்பியம் கிளவியாக்கம் 57
- ↑ தொல்காப்பியம் கற்பியல் 52
- ↑ தொல்காப்பியம் களவியல் 17
- ↑ தொல்காப்பியம் கற்பியல் 5-54
- ↑ தொல்காப்பியம் கற்பியல் 11
- ↑ தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்தார் ஓம்பல் தலை – திருக்குறள் 43
- ↑
திருக்குறள் விருந்தோம்பல் அதிகாரம் 9
- பயிர் வளர்க்கும் வேளாண்மை போல விருந்தோம்பல் மக்களை வளர்க்கும் வேளாண்மை
- விருந்தினரை வைத்துக்கொண்டு தனித்துண்ணும் பழக்கம் விரும்பத் தகாதது.
- விருந்தினரை நாள்தோறும் பேணவேண்டும்.
- விருந்தினரை முக மலர்ச்சியுடன் பேணவேண்டும்.
- விருந்தினர் உண்டபின் எஞ்சிய உணவை உண்ணவேண்டும்.
- வந்த விருந்தினர் போய்விட்டால் புதிய விருந்தினர் வரவை எதிர்நோக்க வேண்டும்.
- விருந்தோம்பல் என்பது ஒருவகை வேள்வி
- இது துறவி செய்யும் வேள்வியை விட மேலானது.
- விருந்தோம்புதல் ஒரு செல்வம்.
- முகம் மலர்ந்து பேணாவிட்டால் விருந்தினர் குழைந்து போவர்.
- பயிர் வளர்க்கும் வேளாண்மை போல விருந்தோம்பல் மக்களை வளர்க்கும் வேளாண்மை
காண்க
தொகு | அகத்திணை மாந்தர் |
---|---|
அகத்திணைத் தலைவர்கள் | தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
|
அகத்திணை வாயில்கள் | தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர்
|