செவிலி
செவிலி என்பவள் வளர்ப்புத் தாய். தமிழ் இலக்கணங்களும், இலக்கியங்களும் பெண்மகளை வளர்த்தவளை மட்டுமே செவிலி எனக் காட்டுகின்றன. ஆண்மகனுக்கு பாங்கன், இளையர் என்னும் ஆண்மக்கள் மட்டுமே துணையிருப்பர். எனவே செவிலி என்னும் பெண்மகள் தலைவிக்குத் துணையிருப்பவளாகக் காட்டப்படுகிறாள்.
- செவிலி தன் மகளைத் தன் வளர்ப்பு மகளுக்குத் தோழியாக இருக்கச் செய்வாள்.
அகத்திணை மாந்தர்களில் ஒருவரான இவரது பங்கைத் தொல்காப்பியம் தொகுத்தும், விரித்தும் காட்டுகிறது.
காதல் வாழ்க்கையில்[1]
செவிலி தலைவியிடம் உரையாடும் இடங்கள் 13 எனச் சுட்டிக்காட்டி பிறவும் உண்டு எனத் தொல்காப்பியம் கூறுகிறது.
- தலைவியின் காதல் ஒழுக்கத்தை ஊர் தூற்றும்போது
- (பெதும்பைப் பருவத்து முலை புணர்ச்சிக்குப் பின் பருமனாகும்) இந்த மாற்றத்தைத் தலைவியிடம் காணும்போது
- காதலனுடன் காணும்போது
- ஊர் காதலைக் கட்டி விடும்போது
- வேலன் கழங்கை உருட்டிக் குறி சொல்லும்போது
- வெறியாட முடிவெடுக்கும்போது
- வெறியாட்டு மடத்தனம் என்னும்போது
- காதலி, காதலனை எண்ணிக் கனவில் அரற்றும்போது முதலில் தோழியை வினவுவாள்.
- மகளின் காதலைக் கூறி நற்றாய், தந்தை ஆகிய தெய்வங்களை வாழ்த்தும்போது
- காதலி, காதலனுடன் சென்றதை அறியும்போது
- ஓடிப்போன காதலர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் வாழும்போது
- தலைவன் குடிக்கும், தலைவி குடிக்கும் ஒப்புமை காணும்போது
- தலைவன் தலைவியரின் குண ஒற்றுமையை ஆராயும்போது
செவிலி தலைவியிடமும், அவளது தோழியிடமும் உரையாடுவாள்.
மற்றும் தலைவன் தலைவியைக் கொண்டுசென்றபோது தேடிச் சென்று வினாவுவாள்.
கற்பு வாழ்க்கையில்
நிகழ்ந்ததையும், நிகழ்வதையும் நிகழப்போவதையும் சொல்லி, இனிச் செய்யவேண்டிய நல்லன இவை, செய்யாதிருக்க வேண்டிய நல்லவை அல்லாதன இவை எனத் தன் வளர்ப்பு மகளுக்கு எடுத்துக் காட்டி நல்வழிப் படுத்துவாள்.[2]
செவிலி நல்வழிப் படுத்துவான.[3]
அடிக்குறிப்புகள்
காண்க
தொகு | அகத்திணை மாந்தர் |
---|---|
அகத்திணைத் தலைவர்கள் | தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
|
அகத்திணை வாயில்கள் | தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர்
|