இளையர் (உடற்கூற்றியல்)
Jump to navigation
Jump to search
இளையர் என்னும் சொல் புறவாழ்வில் வயதில் இளையவரையும்,[1] உடல் இளமைத் தன்மை உடைய படைவீரர்களையும்,[2] அகவாழ்வில் தலைவனுக்குத் துணையாக உடன் செல்பவர்களையும் குறிக்கும்.
அகத்திணை மாந்தர்களில் இடம் பெற்றுள்ள வாயில்களில் ‘இளையர்’ என்போரும் ஒருவர்.[3]
அகநானூற்றுப் பாடல்கள் தலைவனுடன் சென்ற இளையர் பற்றிச் சில செய்திகளைத் தருகின்றன.[4]
அடிக்குறிப்பு
- ↑ இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி - அகம் 30
- ↑
- வென்வேல் இளையர் வீங்குபரி முடுக - அகம் 64
- இளையர் ஏகுவனர் பரிய - அகம் 354
- கழற்கால் இளையர் - அகம் 269
- கல்லா இளையர் பெருமகன் புல்லி - அகம் 83
- வல்வில் இளையர் பெருமகன் நள்ளி - அகம் 152
- இளையர் பெருமகன் தொகுபோர்ச் சோழன் - அகம் 338
- ஏவல் இளையர் தலைவன் ... தென்னன் - அகம் 342
- இரவில், துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர், இலங்கு வேல் இளையர் துஞ்சின், ... ஞாளி மகிழும் – அகம் 122
- குறவர் வீளை அம்பின் இளையரொடு வேட்டைக்குச் செல்வர். - அகம் 182
- ↑ தொல்காப்பியம் கற்பியல் 52
- ↑
- கடுந்தேர் இளையர் நீங்கி நின்ற நெடுந்தகை - அகம் 310
- வல்வில் இளையரோடு எல்லிச் செல்லாது சேந்தனை செலினே சிதைகுவது உண்டோ - அகம் 120
- திண் தேர் ... இளையரொடு அரவச் சீறூர் காணப் பகல் வந்தன்றால் பாய்பரி – அகம் 160
- கொடிஞ்சி நெடுந்தேர் இளையரொடு நீங்கி தாரன் கண்ணியன் சேர வந்து ஒருவன் வரிமனை புகழ்ந்த கிளவியன் யாவதும் மறுமொழி பெறாஅன் பெயர்ந்தனன் - அகம் 250
- இளையரும் புவியும் இன்புற, நீயும் இல் உறை நல் விருந்து அயர்தல் ஒல்லுதும் பெரும நீ நல்குனை பெறினே - அகம் 300
- வேங்கை அன்றைக்கு முதல்நாளில் தலைவியும் தோழியும் சூட மலர்ந்ததாம். அன்றைக்கு இளையர் சூட மலர்ந்திருக்கிறதாம் - அகம் 345
காண்க
தொகு | அகத்திணை மாந்தர் |
---|---|
அகத்திணைத் தலைவர்கள் | தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
|
அகத்திணை வாயில்கள் | தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர்
|