விரோதவணி
Jump to navigation
Jump to search
விரோதவணி அல்லது விரோத அணி என்பது யாப்பிலக்கணத்தில் காணப்படும் முரண் தொடையின் அணியிலக்கண உருப்பாகும். யாப்பிலக்கணமும் அணியிலக்கணமும் ஒன்றிற்கொன்று கலந்திருப்பதனையும் இவ்வுதாரணம் காட்டுகின்றது.
குறிப்பு
- "மாறுபடு சொல், பொருள், மாறுபாட்டு இயற்கை,
- 'விளைவு தர உரைப்பது விரோதம் ஆகும்." என்கிறது தண்டியலங்காரம் 82-ம் பாடல்.
விளக்கம்
ஒரே செய்யுளுக்குள் மாறுபட்ட சொற்களையோ, பொருளையோ கொண்டிருப்பது
அணியின் வகைகள்
- சொல் விரோதம்
- பொருள் விரோதம்
- சிலேடை விரோதம்
எடுத்துக்காட்டு
- கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
- எடுப்பதூஉம் எல்லாம் மழை. - திருக்குறள், வான் சிறப்பு, அறத்துப்பால்
மேற்கண்ட குறளில் கெடுப்பதூஉம், எடுப்பதூஉம் என்பது விரோத சொற்கள் என்பதால் இது சொல் விரோத அணியாகும்.
- பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
- நன்மை பயக்கு மெனின். - திருக்குறள், வாய்மை, துறவறவியல், அறத்துப்பால்
மேற்கண்ட குறளில் என்பது பொய்ம்மையும் வாய்மை விரோத பொருள்கள் என்பதால் இது பொருள் விரோத அணியாகும்.