தன்மேம்பாட்டுரை அணி
Jump to navigation
Jump to search
ஒருவன் தன்னைத் தானே மேம்படுத்தி (புகழ்ந்து) உரைப்பது தன்மேம்பாட்டுரை அணி ஆகும்[1][2].
தன்மேம்பாட்டுரை அணியின் இலக்கணம்
12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் தன்மேம்பாட்டுரை அணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:
நூற்பா
தான்தற் புகழ்வது தன்மேம் பாட்டுரை. --(தண்டியலங்காரம், 71)
(எ.கா.)
எஞ்சினார் இல்லை எனக்கெதிரா இன்னுயிர்கொண்டு அஞ்சினார் அஞ்சாது போயகல்க - வெஞ்சமத்துப் பேராதவர் ஆகத் தன்றிப் பிறர்முதுகில் சாராஎன் கையில் சரம். --(தண்டியலங்கார மேற்கோள்)
பாடலின்பொருள்:
வீரன் ஒருவன் தன் ஆற்றலையும் வீரப்பண்பையும் வெளிப்படுத்தி உரைக்கிறான்.
போரில் எனக்கெதிராக நின்று போரிட்டு உயிருடன் திரும்பியோர் எவருமில்லை; ஆகவே எனக்கு அஞ்சியவர்கள் அச்சமில்லாமல் திரும்பிப் போய்விடலாம். நான் எய்யும் அம்புகள் போரில் எதிர்த்து நிற்பவர்கள் மார்பில் பாயுமே தவிரப் புறங்காட்டிச் செல்வோர் முதுகுகளில் பாயமாட்டா.
இப்பாடலில் தன்னைத்தானே வீரன் புகழ்ந்து கொள்வது வெளிப்படுகிறது.