வல்சாடு
வல்சாடு பல்சர் | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாநிலம் | குஜராத் |
| மாவட்டம் | வால்சாட் |
| ஏற்றம் | 13 m (43 ft) |
| மக்கள்தொகை (2011)[1] | |
| • மொத்தம் | 1,14,636 |
| மொழிகள் | |
| • அலுவல் மொழிகள் | குஜராத்தி, இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| PIN | 396001 |
| தொலைபேசி குறியீடு எண் | 912632 |
| வாகனப் பதிவு | GJ-15 |
| பாலின விகிதம் | 926/1000 ♂/♀ |
| எழுத்தறிவு | 80.94 % |
வல்சாடு (Valsad) நகரத்தின் உண்மையான பெயர் பல்சர் ஆகும். இந்நகரம் வல்சாட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 13 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் அரபுக் கடலின் காம்பே வளைகுடாவிற்கு 4 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது.[2].அல்போன்சா மாம்பழங்களுக்கு பெயர் பெற்ற நகரம். வல்சத் நகரம், மும்பையிலிருந்து 150 கி. மீ., தொலைவிலும், சூரத்திலிருந்து 100 கி. மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. முன்னாள் இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்த ஊர் இது.
பெயர்க் காரணம்
குஜராத்தி மொழியில் வல்சாட் என்ற கூட்டுச் சொல் வட-சாட் என்று பிரித்தால் ஆலமரம் என்று பொருள் தருகிறது. வட என்பதற்கு ஆல் என்றும், சாட் என்பதற்கு மரம் என்று பொருள். இந்நகரத்தில் இயற்கையாக ஆலமரங்கள் அதிகம் காணப்படுகிறது.
மக்கள் வகைப்பாடு
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, வல்சத் நகர மக்கள் தொகை 1,45,592 ஆகும்.[3]. அதில் ஆண்கள் 51% மற்றும் பெண்கள் 49%ஆக உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 80%ஆக உள்ளது.
போக்குவரத்து வசதிகள்
தொடருந்து நிலையம், மும்பை, அகமதாபாத், தில்லி, கொல்கத்தா நகரங்களை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 8 மும்பை, அகதாபாத் நகரங்களை இணைக்கிறது.
பார்க்க வேண்டிய இடங்கள்
- தீத்தல் கடற்கரை
- சுவாமி நாராயணன் கோயில்
- சாய்பாபா கோயில்
படக்காட்சியகம்
-
தீத்தல் கடற்கரை
-
சுவாமி நாராயணன் கோயில், தீத்தல்
-
சுவாமி நாராயணன் கோயில், வல்சத்
-
சாய்பாபா கோயில் தீத்தல்
-
வல்சாட் இரயில் நிலையம்
மேற்கோள்கள்
- ↑ http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=555577
- ↑ https://maps.google.com/maps?q=Bulsar,+India&hl=en&ll=20.604266,72.921066&spn=0.066602,0.132093&sll=37.274322,-79.957542&sspn=0.22648,0.528374&hnear=Valsad,+Gujarat,+India&t=m&z=14
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
வெளி இணைப்புகள்
- Valsad Weather
- Official Website பரணிடப்பட்டது 2008-05-13 at the வந்தவழி இயந்திரம் of the Valsad Collectorate (in Gujarati).
- Official Website பரணிடப்பட்டது 2015-10-11 at the வந்தவழி இயந்திரம் of the Valsad Nagarpalika.