ராஜலட்சுமி (பாடகி)
ராஜலட்சுமி | |
---|---|
பிறப்பு | 13 அக்டோபர் 1983 |
இருப்பிடம் | திருவனந்தபுரம், கேரளம் |
பணி | பாடுதல் |
செயற்பாட்டுக் காலம் | 1994 – இன்று வரை |
வாழ்க்கைத் துணை | அபிராம் கிருஷ்ணன் (2004–இன்று வரை) |
பிள்ளைகள் | ஆர்யன் |
உறவினர்கள் | ரஜனி நாயர் |
ராஜலட்சுமி என்பவர் 13 அக்டோபர் 1983 இல் பிறந்த மலையாளப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் 1994 இல் இருந்து தென் இந்திய மொழிகளான தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பாடுகிறார். இவர் 2009 ஆம் ஆண்டில் ஷாஜி என். கருண் இயக்கிய குட்டிஸ்ராங்க் என்ற திரைபபடத்தில் பாடியதற்காக சிறந்த பாடகிக்கான தேசிய விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 2011 இல் கேரளா மாநில திரைப்பட விருது,[1] 2004 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சிறந்த பின்னணி பாடகருக்கான கேரள மாநில சங்கீதா நாடக அகாடமி விருது, 2017 இல் மழவில் மங்கோ இசை விருது மற்றும் 2018 இல் பிளவர்ஸ் இசை விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
ராஜலட்சுமி அக்டோபர் 13 ஆம் தேதி எரானகுளத்தில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயார் பார்வதி 60களின் ஒரு பாடகி ஆவார். இதனால் இவரின் திறைமைக்கு சிறுவயதிலே அங்கீகாரம் கிடைத்தது. இவர் தனது பள்ளிப்படிப்பை எலூரில் உள்ள செயின்ட் ஆன் ஆங்கில நடுத்தர மேல்நிலைப்பள்ளி மற்றும் எர்ணாகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். எர்ணாகுளம் புனித தெரசா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். நவம்பர் 24, 2004 ஆம் ஆண்டில் அபிராம் கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற ஒரு மகன் உண்டு.
தொழில் வாழ்க்கை
ராஜலட்சுமி தனது ஒன்பது வயதில் மேடை இசை நிகழ்ச்சியான டான்சன் மியூசிக், கொச்சின் கலாபவன், கொச்சின் மெலடிஸ், சி.ஏ.சி. போன்ற நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கான குழந்தை நட்சத்திரங்களில் ஒருவராக தோன்றினார். இவர் கே. ராகவன், ரவீந்திரன், ஜான்சன், ஜெர்ரி அமல்தேவ், சியாம், உசெப்பச்சன், மோகன் சீதார ஜெயா (விஜயா), வித்தியாசாகர், ஷரெட், எம். தேவ், கோபி சுந்தர், ஜாசி கிஃப்ட், அப்சல் யூசாஃப், ஸ்டீபன் தேவசி, ரோனி ரபேல் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் 1000க்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களில் பாடியுள்ளார்.
முதல் மலையாளத் தொலைக்காட்சி இசைப் போட்டியான தூர்தர்ஷனின் ஹம்சத்வானி என்ற நிகழ்ச்சியின் மூலம் இவர் மிகப்பவும் பிரபலமானர். 2006 இல் இயக்குனர் ஜெயராஜ் இயக்கிய அஷ்வாரூடன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஜாசி கிஃப்ட் என்பவரால் திரைப்படத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால் 2009 இல் வெளியான ஓர்குகா வல்லப்பொஜம் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் புகழ் பெற்றார். இந்த திரைபபடத்திற்கு இசையமைப்பாளர் எம்.ஜெயச்சந்திரன் என்பவர் இசை அமைத்துள்ளார். இவர் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற பல நாடுகளின் மேடை நிகழ்ச்சிகளில் கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம், எம். ஜி. ஸ்ரீகுமார், ஹரிஹரன், உதித் நாராயண், சித்ரா, எம்.ஜெயச்சந்திரன், சுஜாதா மோகன், போன்ற பல பிரபல பாடகர்களுடன் சேர்ந்து பல பாடல்கள் பாடியுள்ளார்.
தமிழில்
இவர் 2005 இல் வெளியான சந்திரமுகி என்ற திரைப்படத்தில் கொக்கு பறபற என்ற பாடலை திப்பு, மாணிக்க விநாயகம் ஆகியோருடன் இணைத்து பாடினார். இதன் தெலுங்கு பதிப்பிலும் இவரே பாடியுள்ளார்.
விருதுகள்
- கேரள மாநில திரைப்பட விருது 2010 - சிறந்த பாடகி
- முதல் வெல்லினக்ஷத்திரம் விருது 2010
- கேரள மாநில சங்கீதா நாடக அகாடமி விருது 2014
- மழவில் மங்கோ இசை 2017
- பிளவர்ஸ் இசை விருது 2018
மேற்கோள்கள்
- ↑ "Debutant directors sweep Kerala state awards". www.newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 16th May 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)