ரத்னம் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரத்னம்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ஹரி
தயாரிப்புகார்த்திகேயன் சந்தானம்
அலங்கார் பாண்டியன்
கதைஹரி
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்பு
ஒளிப்பதிவுசுகுமார்
படத்தொகுப்புடி. எஸ். ஜே
கலையகம்ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்
ஜீ ஸ்டுடியோஸ்
இன்வெனியோ ஆரிஜன்
வெளியீடுஏப்ரல் 26, 2024 (2024-04-26)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரத்னம் ( Rathnam ) என்பது இயக்குநர் ஹரி எழுதி இயக்கிய இந்திய தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இதை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் இன்வெனியோ ஆரிஜின் ஆகியவற்றின் கீழ் கார்த்திகேயன் சந்தானம், அலங்கார் பாண்டியன் இணைந்து தயாரித்தனர். விஷால் படத்தின் தலைப்பு வேடத்தில் நடிக்கும்[1] இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர்[2][3], ராமச்சந்திர ராஜு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர்.

விஷாலின் 34வது திரைப்படமாக விஷால் 34 என்ற தற்காலிகப் பெயரின் கீழ் ஏப்ரல் 2023 இல் இந்தப் படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.[4] பின்னர் ரத்னம் என அதிகாரப்பூர்வப் பெயர் டிசம்பர் 2023 இல் அறிவிக்கப்பட்டது. முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி சூலை 2023 இல் தொடங்கியது. தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, 2024 சனவரி பிற்பகுதியில் முடிக்கப்பட்டது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவும், டி. எஸ். ஜே படத்தொகுப்பும் மேற்கொண்டுள்ளனர். பீட்டர் ஹீன், கனல் கண்ணன், சூப்பர் சுப்பராயனின்ன் மகன் திலீப் சுப்பராயன், விக்கி ஆகியோர் சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளனர்.

ரத்னம் 26 ஏப்ரல் 2024 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. [5]

நடிகர்கள்

இசை.

ஆறு (2005), சிங்கம் (2010), வேங்கை ( 2011), சிங்கம் 2 (2013) போன்ற படங்களுக்குப் பிறகு ஹரியுடன் இணைந்து ஆறாவது முறையாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.[8] தனிப்பாடலான "வாரி ரத்னம்" 1 ஜனவரி 2024 அன்று வெளியிடப்பட்டது.[9] படத்தின் இசைத் தட்டு உரிமையை ஆதித்யா மியூசிக் நிறுவனம் வாங்கியதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

ஏப்ரல் 26 அன்று திரையரங்குகளில் ரத்னம் வெளியிட திட்டமிடப்பட்டது. [10] படத்தின் முன்னோட்டம் 2023 திசம்பரில் வெளியிடப்பட்டது.[11]

வீட்டு ஊடகங்கள்

படத்தின் திரையரங்கத்திற்குப் பிந்தைய ஒளிபரப்பும் உரிமையை ஓடிடி தளமான ஜீ5 வாங்கியது. படத்தின் செயற்கைக்கோள் உரிமத்தை ஜீ தமிழ், ஜீ திரை வாங்கியுள்ளது.

மேற்கோள்கள்

  1. "It's official! 'Poojai' duo Vishal and director Hari reunite for the third time". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 April 2023 இம் மூலத்தில் இருந்து 13 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230813125008/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/its-official-poojai-duo-vishal-and-director-hari-reunite-for-the-third-time/articleshow/99705991.cms?from=mdr. 
  2. "Priya Bhavani Shankar is likely to play the female lead in Vishal's film with director Hari". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 June 2023 இம் மூலத்தில் இருந்து 13 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230813125007/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/priya-bhavani-shankar-is-likely-to-play-the-female-lead-in-vishals-film-with-director-hari/articleshow/101012012.cms?from=mdr. 
  3. "Priya Bhavani Shankar to play the female lead in #Vishal34". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 18 July 2023 இம் மூலத்தில் இருந்து 13 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230813125005/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/priya-bhavani-shankar-to-play-the-female-lead-in-vishal34/articleshow/101848482.cms?from=mdr. 
  4. "'Vishal 34': Actor Vishal reunites with director Hari for his next". தி இந்து. 23 April 2023 இம் மூலத்தில் இருந்து 13 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230813133048/https://www.thehindu.com/entertainment/movies/vishal-34-actor-vishal-reunites-with-director-hari-for-his-next/article66769724.ece. 
  5. "Vishal's Rathnam seals its release date". 123Telugu. 25 January 2024.
  6. "Vishal 34: Gautham Menon and Samuthirakani join forces with Vishal". OTTPlay. 15 October 2023. Archived from the original on 15 October 2023. பார்க்கப்பட்ட நாள் 15 October 2023.
  7. "Yogi Babu presents a wonderful gift for Vishal". 13 October 2023. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/yogi-babu-presents-a-wonderful-gift-for-vishal/articleshow/104390426.cms?from=mdr. 
  8. "Devi Sri Prasad to compose music for Vishal's film with Hari". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 July 2023 இம் மூலத்தில் இருந்து 13 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230813133048/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/devi-sri-prasad-to-compose-music-for-vishals-film-with-hari/articleshow/101774397.cms?from=mdr. 
  9. "Vaarai Rathnam - the action-packed song from Vishal's 'Rathnam'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 January 2024.
  10. Kollywood, Only (2024-01-23). "Rathnam: Vishal starrer gets wrapped up, to release in May!". Only Kollywood (in English). பார்க்கப்பட்ட நாள் 2024-01-23.
  11. "Vishal film with director Hari titled 'Rathnam'". The Times of India. 2023-12-01 இம் மூலத்தில் இருந்து 1 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231201170001/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vishal-film-with-director-hari-titled-rathnam/articleshow/105658276.cms?shem=ssusba. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ரத்னம்_(திரைப்படம்)&oldid=36985" இருந்து மீள்விக்கப்பட்டது