திலீப் சுப்பராயன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திலீப் சுப்பராயன்
பணிசண்டைப் பயிற்சியாளர்
செயற்பாட்டுக்
காலம்
2005–தற்போது வரை

திலிப் சுப்பராயன் ( Dhilip Subbarayan ) தமிழ் மொழி படங்களில் பணியாற்றும் ஒரு இந்திய சண்டை இயக்குனர் ஆவார். சண்டை பயிற்சியாளரான சூப்பர் சுப்பராயனின் மகனான திலீப், அஞ்சல (2016) படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளராக அறிமுகமானார். மேலும் சங்கு சக்கரம் (2017) படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

தொழில் வாழ்க்கை

சண்டைப் பய்ற்சி இயக்குனர் சூப்பர் சுப்பராயனின் மகனான திலீப் ஆரண்ய காண்டம் (2011) திரைப்படம் மூலம் தனது பணிக்காக முதலில் கவனத்தை ஈர்த்தார்.[1] இது இவரது முதல் படமாக இருந்தாலும் சி. எஸ். அமுதன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் படம் முதலில் வெளிவந்தது. பின்னர், ஓரம் போ படத்தில் இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி என்பவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் தான் அறிமுகமான “ஆரண்ய காண்டம்” திரைப்படத்தில் இணை இயக்குநராகவும் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பெரிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுடன் தொடர்ந்து இணைந்த இவர் அரிமா நம்பி (2014), புலி (2015), நானும் ரௌடி தான் (2015) மற்றும் தெறி (2016) உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.[2] 2013 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இவர் அஞ்சல என்ற தனது முதல் திரைப்படத் தயாரிப்பைத் தொடங்கினார். இருப்பினும் தாமதங்கள் காரணமாக இந்த திட்டம் பிப்ரவரி 2016 இல் வெளியிடப்பட்டது.

பிப்ரவரி 2016 இல், விஷால் சந்திரசேகரின் இசையில், புதுமுக இயக்குனர் மாரீசன் இயக்கியிருந்த சங்கு சக்கரம் திரைப்படத்தின் மூலம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார்.[3] பாண்டிராஜ் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பசங்க 2 படத்தின் மாஸ்டர் நிஷேஷுடன் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=திலீப்_சுப்பராயன்&oldid=21868" இருந்து மீள்விக்கப்பட்டது