பெற்ற மனம்
பெற்ற மனம் | |
---|---|
1956 திராவிட நாடு இதழில் வெளிவந்த விளம்பரம் | |
இயக்கம் | ஏ. பீம்சிங் |
கதை | மு. வரதராசன் |
இசை | எஸ். ராஜேஸ்வர ராவ் |
நடிப்பு | சிவாஜி கணேசன் புஷ்பவல்லி எஸ். எஸ். ராஜேந்திரன் பத்மினி |
ஒளிப்பதிவு | ஜி. விட்டல்ராவ் |
கலையகம் | நேஷனல் பிக்சர்ஸ் பி. ஏ. பெருமாள் முதலியார் |
வெளியீடு | அக்டோபர் 19, 1960 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பெற்ற மனம் 1960 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் நேசனல் பிக்சர்சு நிறுவனத்தினர் இதனைத் தயாரித்திருந்தனர்.[1] சிவாஜி கணேசன், புஷ்பவல்லி, எஸ். எஸ். ராஜேந்திரன், பத்மினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.[2] இது 1953 இல் வெளிவந்த பெம்புடு கொடுக்கு என்ற தெலுங்குத் திரைப்படத்தின் தழுவல் ஆகும்.
நடிப்பு
- சிவாஜி கணேசன்
- புஷ்பவல்லி
- எஸ். எஸ். ராஜேந்திரன்
- பத்மினி
- எம். என். ராஜம்
- எஸ். வி. சுப்பையா
- எல். விஜயலட்சுமி
- ஜே. பி. சந்திரபாபு
- பத்மினி பிரியதர்சினி
தயாரிப்பு
பெற்ற மனம் திரைப்படத்தின் கதையை மு. வரதராசன் எழுதினார். நடனங்களை கே. என். தண்டாயுதபாணி, பிள்ளை தங்கப்பன், முத்துசாமிப் பிள்ளை ஆகியோர் அமைத்திருந்தனர்.[2] பெற்ற மனமும், பெம்புடு கொடுக்கு என்ற தெலுங்குத் திரைப்படமும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டிருந்தாலும்,[3] தெலுங்குத் திரைப்படம் 1953 இலேயே வெளியிடப்பட்டு விட்டது. ஏழாண்டுகளின் பின்னரேயே தமிழ்த் திரைப்படம் வெளியானது.[2]
பாடல்கள்
எஸ். ராஜேஸ்வர ராவ் இசையமைத்திருந்த பாடல்களை,[4][5] கு. மு. அண்ணல்தங்கோ, எம். கே. ஆத்மநாதன், பாரதிதாசன், கண்ணதாசன், கே. பி. காமாட்சிசுந்தரம் ஆகியோர் எழுதியிருந்தனர். ஜே. பி. சந்திரபாபு, சீர்காழி கோவிந்தராஜன், சி. எஸ். ஜெயராமன், டி. எம். சௌந்தரராஜன், ஏ. பி. கோமளா, சூலமங்கலம் ராஜலட்சுமி, எம். எல். வசந்தகுமாரி, ஜிக்கி, கே. ஜமுனா ராணி ஆகியோர் பாடியிருந்தனர்.[6]
எண். | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் |
---|---|---|---|---|
1 | "அன்புத் தோழா ஓடி வா" | சீர்காழி கோவிந்தராஜன் | கு. மு. அண்ணல்தங்கோ | |
2 | "புதியதோர் உலகம் செய்வோம்" | பாரதிதாசன் | 03:14 | |
3 | "பாடிப் பாடிப் பாடி" | ஜே. பி. சந்திரபாபு, சூலமங்கலம் ராஜலட்சுமி | 06:27 | |
4 | "மனதிற்குகந்த மயிலே" | ஜே. பி. சந்திரபாபு | ||
5 | "ஒரே ஒரு பைசா" | சூலமங்கலம் ராஜலட்சுமி | 03:29 | |
6 | "தெற்குப் பொதிகை மலை" | டி. எம். சௌந்தரராஜன், கே. ஜமுனா ராணி | ||
7 | "சிந்தனை செய்யடா" | எம். எல். வசந்தகுமாரி, சிவாஜி கணேசன் (வசனம்) | கண்ணதாசன் | 06:05 |
8 | "காதல் கரும்பு கண்டேன்" | சி. எஸ். ஜெயராமன், ஜிக்கி | 03:28 | |
9 | "துள்ளித் துள்ளி ஓடும் என்" | சிக்கி | கே. பி. காமாட்சிசுந்தரம் | 02:53 |
10 | "சினிமா கினிமா டிராமா" | சீர்காழி கோவிந்தராஜன் | எம். கே. ஆத்மநாதன் | |
11 | "கண்ணே நீ சென்று வாடா" | ஏ. பி. கோமளா | 03:06 |
வெளியீடு
பெற்ற மனம் 1960 அக்டோபர் 19 இல் வெளியிடப்பட்டது.[7] வணிக அளவில் இது தோல்வி கண்டது.[3]
மேற்கோள்கள்
- ↑ Baskaran, S. Theodore (2013). Sivaji Ganesan: Profile of An Icon. Wisdom Tree. p. 88.
- ↑ 2.0 2.1 2.2 "filmography p7". nadigarthilagam.com. Archived from the original on 9 December 2016. பார்க்கப்பட்ட நாள் 9 December 2016.
- ↑ 3.0 3.1 Narasimhan, M. L. (24 September 2015). "Blast from the past: Illarikam (1959)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 9 December 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161209140112/http://www.thehindu.com/features/cinema/cinema-columns/starring-a-nageswara-rao-jamuna-girja-hemalatha-relangi-gummadi-ramana-reddy-csr-allu-ramalingaiah-r-nageswara-rao/article7685387.ece.
- ↑ "Petra Manam (1960)". MusicIndiaOnline. Archived from the original on 9 December 2016. பார்க்கப்பட்ட நாள் 9 December 2016.
- ↑ "Petra Manam". Saavn. Archived from the original on 9 December 2016. பார்க்கப்பட்ட நாள் 9 December 2016.
- ↑ Neelamegam, G. (December 2014). Thiraikalanjiyam — Part 1. Chennai: Manivasagar Publishers. pp. 206–207.
- ↑ Film News Anandan (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [Tamil film history and its achievements] (in Tamil). Chennai: Sivagami Publishers. Archived from the original on 16 October 2017. பார்க்கப்பட்ட நாள் 24 செப்டம்பர் 2021.
{{cite book}}
: More than one of|archivedate=
and|archive-date=
specified (help); More than one of|archiveurl=
and|archive-url=
specified (help)CS1 maint: unrecognized language (link)
வெளி இணைப்புகள்
- 1960 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இந்திய நாடகத் திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- எஸ். எஸ். ராஜேந்திரன் நடித்த திரைப்படங்கள்
- ஏ. பீம்சிங் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்
- சந்திரபாபு நடித்த திரைப்படங்கள்
- எம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்
- தமிழ்ப் புதினங்களை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள்