புரூஸ் லீ - தி ஃபைட்டர்
புரூஸ் லீ - தி ஃபைட்டர் | |
---|---|
இயக்கம் | ஸ்ரீனு வைத்திலா |
தயாரிப்பு | டிவிவி தனய்யா |
கதை |
|
இசை | தமன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | மனோஜ் பரமஹம்சா |
படத்தொகுப்பு | எம். ஆர். வர்மா |
கலையகம் | டிவிவி எண்டர்டெயின்மெண்ட்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 16, 2015 |
ஓட்டம் | 151 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
புரூஸ் லீ - தி ஃபைட்டர் (Bruce Lee - The Fighter (புரூஸ் லீ என்றும் அறியப்படுகிறது) என்பது 2015 ஆண்டைய இந்திய தெலுங்கு அதிரடி நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தை ஸ்ரீனு வைதிலா இயக்கியுள்ளார். படத்தில் ராம் சரண் மற்றும் ராகுல் பிரீத்தீ சிங் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை டிவிவி தனய்யா தனது டிவிவி எண்டர்டெயின்மெண்ட் பதாகையின்கீழ் தயாரித்துள்ளார். கோனா வெங்கட் மற்றும் கோபிமோகன் ஆகியோர் படத்தின் திரைக்கதை மற்றும் உரையாடல்களை எழுத, வேட்லா திரைக்கதையை எழுதியுள்ளார். தமன் படத்திற்கான பின்னணி இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொண்டார். இப்படம் இந்தி, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது தமிழில் புரூஸ்லீ 2 என்ற பெயரில் வெளியிடப்பட்டது.[1]
கதை
புரூஸ் லீ யை முன்மாதிரியாகக் கொண்டு திரைப்படங்களில் கதாநாயகர்களுக்கு மாற்றாக ஆபத்தான காட்சிகளில் நடிக்கும் கார்த்திக் ( ராம் சரண் தேஜா) தன் குடும்பத்துக்காக உழைப்பவர். அவரது அக்காவுக்காக அவரது படிப்பை தியாகம் செய்தவர். அவளை மாவட்ட ஆட்சியர் ஆக்க வேண்டுமென்பது அவரது லட்சியம். அதற்காக கடுமையாக உழைக்கிறார்.
அதே நேரம், காவல்துறை அதிகாரி வேடத்தில் இருக்கும் கார்த்திக்கை, உண்மையான காவலர் என தவறாக கருதும் ரியா ( ராகுல் ப்ரீத்தீசிங்), போலி மது, போலி மருந்து, கருப்பு பணக் கிடங்கு உள்ளிட்ட குற்றங்கள் நடக்கும் இடங்களுக்கு கார்த்திக்கை வரவழைக்கிறார் அங்கு கார்திக்கும் அதிரடிகளை செய்கிறார். அதனால், தீபக் ராஜ் (அருண் விஜய்) அவரது தந்தை தொழில் அதிபர் சம்பத்த் (ஜெயராஜ்) ஆகியோரின் பகையை சம்பாதிக்கிறார்.
இதற்கிடையில் கார்திக்கின் முதலாளி மகனுக்கும் கார்திக்கின் அக்காவுக்கும் நிச்சயம் நடந்து முடிகிறது. ரியாவின் தந்தை காவல்துறையில் உயர் அதிகாரியாக இருப்பவர் ஆவார். அவர் கார்திக் காவலர் இல்லை என்றாலும் அவரின் அத்தனை நடவடிக்கையையும் பார்த்து, அவர்களின் காதலுக்கு ஒப்புதல் அளிக்கிறார். மேலும் மிகப்பெரிய இரகசிய நடவடிக்கை ஒன்றை அவரிடம் ஒப்படைக்கிறார். அது என்ன அதை ஏன் கார்திக்கிடம் ஒப்படைத்தார்? என்பதே கதையின் இறுதிப் பகுதி.
நடிகர்கள்
- ராம் சரண் - கார்த்திக் என்னும் புரூஸ் லீ / ஐபி அலுவலர் விக்ரம் குமார்
- அருண் விஜய் - தீபக்ராஜ்
- ராகுல் பிரீத்தீ சிங் - ரியா பரத்வாஜ்
- கிரிதி கர்பந்தா - காவியா
- நதியா - வசுந்திரா (ஜெயராஜின் இரண்டாவத் மனைவி)
- சம்பத் ராஜ் - ஜெயராஜ்
- பிரம்மானந்தம் - சுசுகி சுப்பிரமணியம் என்கிற பீட்டர் என்கிற பகோடி என்கிற துகாராம்
- அலி - பிகே
- ஜெயபிரகாஷ் ரெட்டி - டேஞ்சரஸ் டேவிட் மற்றும் காவல் ஆய்வாளர் ஜி. ராம்ஜி (இரட்டை வேடம்)
- பவித்ரா லோகேஷ் - கார்த்திக் மற்றும் காவியாவின் தாயார்
- திஸ்கா சோப்ரா - மாளினி (ஜெயராஜின் முதல் மனைவி)
- முகேஷ் ரிசி - ஐபி தலைவர் பரத்வாஜ்
- ராவ் ரமேஷ் - ராமச்சந்திர ராவ் (புரூஸ்லீயின் தந்தை)
- தனிகில்லா பரணி - ரவியின் தந்தை மற்றும் ராமச்சந்திர ராவின் அண்ணன்
- சாயாஜி சிண்டே - ஆணையர் மார்தாண்ட்
- பிராம்ஜி - 'பிளாக்பஸ்டர்' பிராம்ஜி
- ரவி பிரகாஷ் - ரவி (புரூஸ்லீயின் பெரியப்பா மகன்)
- கிருஷ்ண முரளி - ஜெயராஜின் தனி உதவியாளர்
- சப்தகிரி - புரூஸ்லீயின் நண்பர்
- வெண்ணிலா கிஷோர் - உகாண்டா யுகேந்திரா, மாளினியின் தம்பி
- பிருதிவிராஜ் - ரத்னம், வசுந்திராவின் தனி உதவியாளர்
- அமிதாஷ் பிரதான் - ராகுல்
- அஜாஸ் கான் - (சிறப்புத் தோற்றம்)
- நாகேந்திரபாபு - நீதிபதி ராம்கோபால் (சிறப்புத் தோற்றம்)
- சிரஞ்சீவி அவராகவே சிறப்புத் தோற்றத்தில்
வெளியீடு
படத்தை வெளியிட தயாரிப்பாளர் தனய்யா 2015 அக்டோபர் 15 அன்று தசராவுக்கு ஒரு வாரம் முன்னதாக வெளியிட திட்டமிட்டார்,[2] அதேசமயம் வெளியாக இருந்த மகேஷ் பாபுவின் பிரம்மோர்சவம்[3] மற்றும் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த 99வது படமான டிக்டாடோர்[4] ஆகிய படங்களுடன் மோதும் விதத்தில் இது இருந்தது. கிரேட் இந்தியா பிலிம்சுக்கு 2015 சூலை நடுப்பகுதியில் வெளிநாட்டு விநியோக உரிமைகள் வழங்கப்பட்டன.[5] அசல்படம் மற்றும் இந்தி மொழிமாற்றுப் படம் ஆகியவற்றின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமங்களை ஜீ தொலைக்காட்சியால் வாங்கப்பட்டன. ஜீ மியூசிக் திரைப்படத்தின் இசை உரிமைகளை வாங்கியது.[6] 2015 செப்டம்பர் 8 அன்று தனய்யா படத்தின் வெளியீட்டு தேதியை 2015 அக்டோபர் 16 என உறுதிப்படுத்தினார் உறுதிப்படுத்தினார்.[7] ஒரு சில சண்டைக் காட்சிகளின் காரணமாக, இந்த திரைப்படத்துக்கு "யு / ஏ" சான்றிதழை பிராந்திய திரைப்பட தணிக்கைத் துறையால் அளிக்கப்பட, பின்னர் இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவால் அதற்கு பதிலாக "யு" சான்றிதழ் வழங்கப்பட்டது.[8]
வரவேற்பு
இந்தப் படம் விமர்சகர்களிடமிருந்து சராசரி விமர்சனங்களைப் பெற்றது.[9]
மேற்கோள்கள்
- ↑ "Bruce Lee The Fighter: review roundup". International Business Times. http://www.ibtimes.co.in/bruce-lee-fighter-bltf-review-roundup-srinu-vaitla-fails-impress-critics-again-after-aagadu-650920. பார்த்த நாள்: 23 October 2015.
- ↑ Anjuri, Pravallika (5 March 2015). "FINALLY! Ram Charan-Sreenu Vaitla Movie Launched". Oneindia Entertainment இம் மூலத்தில் இருந்து 16 March 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150316073944/http://www.filmibeat.com/telugu/news/2015/ram-charan-sreenu-vaitla-new-movie-launched-rakul-kona-gopi-chiranjeevi-175767.html. பார்த்த நாள்: 16 March 2015.
- ↑ Anjuri, Pravallika (6 March 2015). "OMG ! Ram Charan-Mahesh Babu's Fight Continues". Oneindia Entertainment இம் மூலத்தில் இருந்து 16 March 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150316073943/http://www.filmibeat.com/telugu/news/2015/ram-charan-mahesh-babu-fight-continues-dusshera-175927.html. பார்த்த நாள்: 16 March 2015.
- ↑ "Balakrishna's clash with Ram Charan". IndiaGlitz. 9 March 2015 இம் மூலத்தில் இருந்து 16 March 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150316074021/http://www.indiaglitz.com/Balakrishnas-Clash-With-Ram-Charan-telugu-news-127417. பார்த்த நாள்: 16 March 2015.
- ↑ "Ram Charan-Srinu Vytla film by GIF". IndiaGlitz. 16 July 2015 இம் மூலத்தில் இருந்து 16 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150716072817/http://www.indiaglitz.com/ram-charan-srinu-vytla-film-by-gif-telugu-news-137666.html. பார்த்த நாள்: 16 July 2015.
- ↑ "Ram Charan - Sreenu Vaitla movie satellite rights for Zee Telugu". IndiaGlitz. 23 July 2015 இம் மூலத்தில் இருந்து 23 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150723084556/http://www.indiaglitz.com/ram-charan-sreenu-vaitla-movie-satellite-rights-for-zee-telugu-telugu-news-138188.html. பார்த்த நாள்: 23 July 2015.
- ↑ "'Bruce Lee' on October 16". Sify. 8 September 2015 இம் மூலத்தில் இருந்து 9 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150909092546/http://www.sify.com/movies/bruce-lee-on-october-16-news-telugu-pjioNybefhiig.html. பார்த்த நாள்: 9 September 2015.
- ↑ "Charan's 'Bruce Lee' gets U/A". Sify. 12 October 2015 இம் மூலத்தில் இருந்து 13 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151013143207/http://www.sify.com/movies/charans-bruce-lee-gets-ua-news-telugu-pkmvcebageade.html. பார்த்த நாள்: 13 October 2015.
- ↑ "Bruce Lee The Fighter movie review: Ram Charan's actioner half-justifies its name". India Today. http://indiatoday.intoday.in/story/bruce-lee-the-fighter-movie-review-ram-charans-actioner-half-justifies-its-name/1/501054.html. பார்த்த நாள்: 23 October 2015.