பிருந்தா பரேக்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பிருந்தா பரேக்
Brinda Parekh graces Indian Music Academy – Marathi Music Awards (03) (cropped).jpg
2013 இல் மராத்தி இசை விருதுகளில் பரேக்
பிறப்புபிருந்தா பரேக்
3 நவம்பர் 1982 (1982-11-03) (அகவை 42)
மும்பை, இந்தியா
மற்ற பெயர்கள்பிருந்தா பரிக்
செயற்பாட்டுக்
காலம்
2002-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
இல்லை

பிருந்தா பரேக் 3 நவம்பர் 1982 என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையும், வடிவழகியும் ஆவார். [1] இவர் பெரும்பாலும் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் குத்தாட்டப் பாடல்களுக்கு ஆடியுள்ளார். இவர் தமிழில் 4 திரைப்படங்களிலும், தெலுங்கு கன்னட மொழிகளில் பல திரைப்படங்களிலும், 3 இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தொழில்

மும்பையில் பிறந்து வளர்ந்த இவர், விமல் சூட்டிங்ஸ், மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி, ஆங்கர் சுவிட்சுகள், விஐபி பிரஞ்சு, கிட் கேட், தம்ப்ஸ் அப், போலோ மிண்ட், ராயல் சேலஞ்ச் பீர், அமுல் மச்சோ வெஸ்ட்ஸ் போன்றவற்றிற்கான தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றி தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்., மேலும் பிற அச்சு ஊடகங்களில் நூற்றுக்கணக்கான பொருட்களின் விளம்பரங்களில் தோன்றியுள்ளார். திரைப்படங்களில் நுழைவதற்கு முன்பு இவர் இசை கானொளிகளில் தோன்றியுள்ளார். [2]

திரைப்படவியல்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2002 சொந்தம் தெலுங்கு
2004 மன்மதன் ரேணுகா மேனன் தமிழ்
2005 நம்மண்ணா கன்னடம் சிறப்பு தோற்றம்
திருடிய இதயத்தை தமிழ் சிறப்பு தோற்றம் [3]
2006 சுதேசி தமிழ் சிறப்பு தோற்றம்
கார்பரேட் இந்தி
2007 போக்கிரி மோனா தமிழ்
வியலவாரி கயலு தெலுங்கு சிறப்பு தோற்றம்
பொல்லாதவன் தமிழ் சிறப்பு தோற்றம்
2008 புத்தவந்தா ரேகா விஜய் மிடல் கன்னடம்
2009 குரு என் ஆளு ஷீலா கிருஷ்ணா தமிழ்
லண்டன் ட்ரீம்ஸ் இந்தி
ஏக் சே புரே டூ இந்தி
திப்பரஹள்ளி தர்லேகலு கன்னடம்
2011 சஞ்சு வெட்ஸ் கீதா கன்னடம் பாடலில் சிறப்புத் தோற்றம்
2013 சில்லுனு ஒரு சந்திப்பு தமிழ் பாடலில் சிறப்புத் தோற்றம்
பிங்கி - ஏக் சத்தியகாதா ரிது மராத்தி இணை முன்னணி
ஜந்தா வி / எஸ் ஜனார்தன் - பெச்சாரா ஆம் ஆத்மி இந்தி [4]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பிருந்தா_பரேக்&oldid=23097" இருந்து மீள்விக்கப்பட்டது