மன்மதன் (2004 திரைப்படம்)
மன்மதன் (Manmadhan) ஏ. ஜே. முருகன் இயக்கத்தில், 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சிலம்பரசன் (முதல் முறை இரட்டை வேடம்), ஜோதிகா, கவுண்டமணி, சந்தானம் (நடிகர்), சிந்து துலானி மற்றும் பலர் நடித்துள்ளனர். எஸ். கே. கிருஷ்ணகாந்த் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பில், 12 நவம்பர் 2004 ஆம் தேதி வெளியானது.
365 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்டு ஒரு வெற்றிப் படமாக அமைந்தது.[1] தெலுங்கு மொழியில் "மன்மதா" என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டும்[2], கன்னட மொழியில் "மதனா" என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டும் வெளியானது.
நடிகர்கள்
சிலம்பரசன் - மொட்டை, மன்மதன் (இரட்டை வேடம்)
ஜோதிகா - மைதிலி (இரட்டை வேடம்)
கதைச்சுருக்கம்
மதன் குமார், நன்கு படித்து பட்டய கணக்காளராக பணி புரிந்து வருகிறான். சென்னையில் வசிக்கும் அவன், பகுதி நேரமாக இசை பயின்று வருகிறான். மைதிலியும் அதே கல்லூரியில் இசை பயில்கிறாள். துவக்கத்தில் இருவருக்கும் மோதல் இருந்தாலும், நாளடைவில் நட்பு மலர்ந்தது.
மறுபுறம், மதன் மன்மதன்' என்ற புனைப்பெயருடன், தவறாக நடக்கும் இளம் பெண்களை தேடிக் கொன்று எரித்து, சாம்பலை சேகரித்து வைக்கும் பழக்கம் கொண்டவன். அதில் காணாமல் போகும் பெண்களை கண்டுபிடிக்கும் பொறுப்பை சென்னை போலீஸ் அதிகாரி தேவா (அதுல் குல்கர்னி) எடுத்துக்கொண்டார்.
அவ்வாறாக ஒரு நாள், மைதிலி மதன் ஒரு பெண்ணுடன் பார்க்க, மறுநாள் செய்தியில் அப்பெண் காணவில்லை என்று தெரியவர, அந்த பெண்ணின் மறைவிற்கு மதன் குமார் தான் காரணம் என்று நினைத்து, தேவாவிற்கு தகவல் சொல்கிறாள் மைதிலி. மதன் குமார் போலீசில் பிடிபட, அவனுக்கு ஒரு தம்பி இருப்பது தெரியவருகிறது. பின்னர், அந்தக் கொலையாளியை கண்டுபிடிப்பதே மீதிக் கதையாகும்.
ஒலிப்பதிவு
6 பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 1 ஜூலை 2004 அன்று வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். பா. விஜய், வாலி, ஸ்நேஹன் மற்றும் நா. முத்துக்குமார் ஆகியோர் பாடல் ஆசிரியர்கள் ஆவர்.
பாடல் பட்டியல்[3]
- தத்தை தத்தை
- மன்மதனே நீ
- ஓ மாஹீரே
- வானமென்ன
- என் ஆசை மைதிலியே
- காதல் வளர்த்தேன்
வெளியீடு
ரூபாய் ஐந்து கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 140 ஒளிப்பதிவுகளுடன் வெளியானது.[4] இந்திய தணிக்கைக் குழு இப்படத்திற்கு "ஏ" சான்றிதழ் வழங்கியது.[5]
மேற்கோள்கள்
- ↑ "https://www.indiaglitz.com". https://www.indiaglitz.com/a-look-back-to-the-last-10-diwali-tamil-news-116681.
- ↑ "https://www.youtube.com". https://www.youtube.com/watch?v=UhRrq8RUZgg.
- ↑ "https://www.raaga.com". https://www.raaga.com/tamil/movie/Manmadhan-songs-T0000630.
- ↑ "http://www.sify.com" இம் மூலத்தில் இருந்து 2017-09-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170902184255/http://www.sify.com/movies/diwali-pre-release-trade-buzz-news-tamil-kkfvEEbegjfsi.html.
- ↑ "http://www.sify.com/" இம் மூலத்தில் இருந்து 2017-09-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170902180334/http://www.sify.com/movies/diwali-films-censored-news-tamil-kkfvEFdedeasi.html.