நினைக்க தெரிந்த மனமே (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நினைக்கத் தெரிந்த மனமே
தலைப்பு அட்டை
இயக்கம்சுரேசு
தயாரிப்புசிவானந்தன்
திரைக்கதைகே. தினகர்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
சந்திரசேகர்
ரூபினி (நடிகை)
ஒளிப்பதிவுஇராஜராஜன்
படத்தொகுப்புஆர். ஜி. கோபி
கலையகம்சிவதாரணி மூவிசு
வெளியீடு14 ஆகத்து 1987 (1987-08-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நினைக்க தெரிந்த மனமே (Ninaikka Therintha Maname) என்பது 1987 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் காதல் திரைப்படமாகும். கே. தினகர் எழுதிய இப்படத்தை சுரேஷ் இயக்கியிருந்தார். மணியன் எழுதிய வாழ்த்தும் நெஞ்சங்கள் நாவலை அடிப்படையாகக் கொண்ட,[1] இத்திரைப்படத்தில் மோகன், சந்திரசேகர், ரூபினி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1987 ஆகத்து 14 அன்று வெளியிடப்பட்டது.  

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை காமகோடியன் எழுதியிருந்தார்.[2][3] இப்படத்தில் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா, 13 வயதில், "கண்ணுக்கும் கண்ணுக்கும்" பாடலுக்கு இசைப்பலகை வாசித்தார்.[4]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்"  கே. ஜே. யேசுதாஸ் 4:37
2. "இளமை ரதத்தில்"  கே. எஸ். சித்ரா 4:22
3. "எங்கெங்கு நீ சென்ற"  கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா 5:14
4. "சின்ன சின்ன முத்து நீரிலே"  கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி 4:37
5. "எங்கெங்கு நீ சென்ற" (தனிப்பாடல்)கே. ஜே. யேசுதாஸ் 5:13
மொத்த நீளம்:
24:03

வெளியீடும் வரவேற்பும்

நினைக்க தெரிந்த மனமே 1987 ஆகத்து 14 அன்று வெளியானது.[5] இந்தியன் எக்ஸ்பிரஸ் "இந்நாவல் திரைப்படத்தைச் சுருங்கச் சொன்னால் பாடல்களாலும் சண்டைகளாலும் நிறைந்துள்ளது. படம் சிறிதாகவும், அழகானதாகவும் இருந்திருந்தால் அது உதவியிருக்கலாம்". என்று எழுதியது.[6] கல்கியின் ஜெயமன்மதன், "இளையராஜாவின் இசையை மட்டுமே படத்தைக் காப்பாற்றும் கருணையாகக் கண்டேன்" என்று எழுதினார்.[7]

மேற்கோள்கள்

  1. Manian, Aranthai (2020). Thiraipadangalana Ilakkiyangalum Naadgangalum. Pustaka Digital Media. p. 1917.
  2. "Ninaikka Therindha Maname Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 18 January 2023. பார்க்கப்பட்ட நாள் 18 January 2023.
  3. "Ninaikka Therintha Maname (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. Archived from the original on 19 January 2023. பார்க்கப்பட்ட நாள் 19 January 2023.
  4. ஜெயச்சந்திரன், காயத்திரி (29 June 2021). "சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும் - கார்த்திக் ராஜா க்ளிக்ஸ்..!". ABP Live. Archived from the original on 18 January 2023. பார்க்கப்பட்ட நாள் 18 January 2023.
  5. "Ninaikka Therintha Manamey / நினைக்க தெரிந்த மனமே". Screen4Screen (in English and தமிழ்). Archived from the original on 12 December 2022. பார்க்கப்பட்ட நாள் 18 January 2023.
  6. "Threesome". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 21 August 1987. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19870821&printsec=frontpage&hl=en. 

வெளி இணைப்புகள்