தென்னவன் (நடிகர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தென்னவன்
பிறப்புஇரமேஷ் துரைசாமி
16 நவம்பர் 1966 (1966-11-16) (அகவை 58)
தமிழ்நாடு, கோயம்புத்தூர்
மற்ற பெயர்கள்கை தென்னவன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1990 - தற்போது வரை

தென்னவன் என்பவர் இந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் திரைப்படங்களில் துணை வேடங்களில் தோன்றியுள்ளார். இவர் பாரதிராஜாவின் என் உயிர்த் தோழன் (1990) படத்தில் அறிமுகமான பிறகு , ஜெமினி (2002) விருமாண்டி (2004) ஜே ஜே (2003) ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார்.

தொழில்

1984 ஆம் ஆண்டில் கோவையில் சர்வஜனா உயர்நிலைப் பள்ளியில் படித்த பிறகு, தென்னவன் திரைப்படத்தில் நடிப்பதற்காக சென்னை சென்றார். பாரதிராஜாவின் 1990 ஆம் ஆண்டு வெளியான என் உயிர்த் தோழன் திரைப்படத்தில் தென்னவன் அறிமுகமானார். அதில் இவர் இரண்டாவது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.[1] சரணின் ஜெமினி (2002) படத்தில் கை என்ற பாத்திரத்தில் நடித்தார். இதில் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார், அதன் பின்னர் கை தென்னவன் என்று படங்களில் இவரது பெயர் குறிப்பிடப்பட்டது. கமல்ஹாசன் விருமாண்டியில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இவரைத் தேர்ந்தெடுத்தார், இதில் இவருக்கு நேர்மறையான விமர்சனங்களும் கிடைத்தன.[2]

தென்னவன் பின்னர் ஒரு சோதனை திரைப்படமான ஆயுள் ரேகை (2005) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மனச்சோர்வின் விளிம்பில் உள்ள ஒரு மனிதனை சித்தரித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.[3] பின்னர் இவர் சுந்தரபாண்டியன் (2012) மற்றும் நான் தான் பாலா (2014) உள்ளிட்ட படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.

திரைப்படவியல்

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1990 என் உயிர்த் தோழன்
1992 முதல் குரல்
1995 வேலுசாமி
2002 ஜெமினி கை
2003 ஜே ஜே
2003 காலாட்படை பிரியாவின் மாமா
2003 திவான்
2004 எதிரி காவல் ஆய்வாளர் தனபதி
2004 ஜோர்
2004 விருமாண்டி கொண்டராசு
2004 7ஜி ரெயின்போ காலனி வக்கிடங்கு ஊழியர்
2005 ஆயுள் ரேகை கரிகாலன்
2005 சண்டக்கோழி
2006 புதுப்பேட்டை செல்வம்
2006 ஆச்சார்யா கூறுமதி
2007 அம்முவாகிய நான் மோகன்
2007 கூடல் நகர்
2007 மணிகண்டா
2008 கத்திக் கப்பல்
2009 வைகை
2009 ஞாபகங்கள்
2011 இளைஞன்
2011 வாகை சூட வா
2011 சதுரங்கம்
2012 கிருஷ்ணவேணி பஞ்சாலை
2012 சுந்தர பாண்டியன் பாண்டி தேவர்
2014 நான் தான் பாலா காட்டூரான்
2014 ஜிகர்தண்டா சங்கர்
2015 கிருமி கிளப் உரிமையாளர்
2015 மாங்கா
2016 கத்தி சண்டை ச.ம.உ. சிவஞானம்
2016 யோக்கியன் வர்ரான் சொம்பை எடுத்து வை
2016 உன்னோடு கை
2017 உறுதிகொள்
2018 ஏகாந்தம்
2018 சண்டக்கோழி 2 துரை அய்யாவின் மைத்துனன்
2019 பேட்ட அமைச்சர் தங்கம்
2019 என் காதலி சீன் போடுறா
2021 இது விபத்து பகுதி

தொலைக்காட்சி

ஆண்டு தலைப்பு பாத்திரம் அலைவரிசை
2018 ஒவியா முன்னுசாமி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
2019 ராசாத்தி ரசப்பன் சன் தொலைக்காட்சி

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தென்னவன்_(நடிகர்)&oldid=21878" இருந்து மீள்விக்கப்பட்டது