உறுதிகொள்
Jump to navigation
Jump to search
உறுதிகொள் (Uruthikol) என்பது கிஷோர், மேகனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஆர். அய்யனார் எழுதி இயக்கி 2017ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி அதிரடித் திரைப்படமாகும். பள்ளியை விட்டு வெளியேறிய ஒரு பள்ளி மாணவன், சில குற்றவாளிகளால் கடத்தப்பட்ட தன் சகோதரியைக் கண்டுபிடித்து அவளை எப்படி மீட்க முற்படுகிறான் என்பதைச் சுற்றியே திரைக்கதை அமைந்துள்ளது.
நடிகர்கள்
- சசியாக கிஷோர்
- பிரியங்காவாக மேகனா எலன்
- காளி வெங்கட்
- தென்னவன்
- அகிலேஷ்
- கண்ணன் பொன்னையா
- மாஸ்டர் சிவசங்கர்
தயாரிப்பு
குழந்தை நடிகராக நடித்ததற்காக அறியப்பட்ட கிஷோர் டிஎஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். [1]
விமர்சனம்
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் இரண்டரை நட்சத்திரங்களைக் கொடுத்து, "எழுத்து , செயலாக்கம் இரண்டும் நாடகத்தனமாக இருக்கிறது. திரைப்படம் ஒருபோதும் நம் ஆர்வத்தை ஈர்க்கவில்லை" என எழுதியது. [2]
சான்றுகள்
- ↑ "It is a challenge to play a solo lead: Kishore - Times of India". The Times of India.
- ↑ "Uruthikol Movie Review {2/5}: Critic Review of Uruthikol by Times of India". பார்க்கப்பட்ட நாள் 2018-10-06.