கத்தி சண்டை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கத்தி சண்டை
இயக்கம்சுராஜ்
தயாரிப்புஎஸ். நந்தகோபால்
கதைசுராஜ்
இசைஹிப் ஹாப் தமிழா
நடிப்புவிஷால்
தமன்னா
வடிவேலு
சூரி
ஒளிப்பதிவுரிச்சார்டு எம்.நாதன்
படத்தொகுப்புஆர் கே செல்வா
விநியோகம்கேமியோ பிலிம்ஸ்
வெளியீடுடிசம்பர் 23, 2016
நாடுஇந்தியா
மொழிதமிழ்

23 டிசம்பர் 2016ல் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் வெளிவந்த கத்தி சண்டை என்கிற திரைப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார்[1]. இப்படத்தில் நடிகர் விஷால் மற்றும் நடிகை தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர்கள் வடிவேலு, சூரி, ஜெகபதி பாபு ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

நடிகர்கள்

  • விஷால் - அர்ஜுன் ராமகிருஷ்ணன்/சீனு
  • தமன்னா - திவ்யா/பானு
  • வடிவேலு - மருத்துவர் பூத்திரி
  • சூரி - தேவா/சித்ரா மாஸ்டர்
  • ஜெகபதி பாபு - டிசிபி தமிழ்ச்செல்வன்
  • மதன் பாபு - மருத்துவர்
  • ஆர்த்தி - பூத்திரியின் துணை

கதைச்சுருக்கம்

அர்ஜுன் ராமகிருஷ்ணன்(விஷால்) பூர்வ ஜென்ம காதல் என்று கூறி திவ்யாவை(தமன்னா) பின் தொடர்கிறார். பெருங் கொள்ளையர்களான எம்.எல்.ஏவும், சென்ட்ரல் மினிஸ்டரும், கூட்டு சேர்ந்து தங்கள் ஊருக்கு வரவேண்டிய அரசு வசதிகள் அனைத்தையும் செய்யாமல் செய்ததாக அரசாங்கத்திடம் கணக்கு காட்டி பணத்தை பதுக்கிவைக்கிறார்கள். 250 கோடி ரூபாய் நோட்டுக்களுடன் செக்போஸ்ட்கள், போலீஸ் வாகனங்களையெல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு வரும் ஒரு கண்டெய்னரை மடக்கிப் பிடிக்கிறார் டெபுடி கமிஷ்னர் தமிழ் செல்வன்(ஜெகபதிபாபு). இந்தப் பணத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறார். அவரது தங்கை திவ்யா. ரவுடி தேவா(சூரி) துணையுடன் திவ்யாவை காதலிக்கிறார் அர்ஜுன். அவர்கள் காதலை ஏற்கிறார் தமிழ் செல்வம். திருமணம் நிச்சயமாகிறது. தமிழ் செல்வனை சில பேர் கடத்தி விடுகின்றனர், அவரை அர்ஜுன் காப்பாற்றுகிறார். பணத்தை பற்றி அவரிடம் சி.பி.ஐ. என்று கூறி விசாரிக்கிறார். பணத்தை கண்டு பிடித்து தமிழ் செல்வனை சரணடைய கூறுகிறார் அர்ஜுன். ஒரு ரவுடி மூலம் அர்ஜுன் ஏமாற்றியதை அரிந்த தமிழ் செல்வன், அர்ஜுனை சுட்டு விடுகிறார். பணத்தை கொள்ளை அடித்து பதுக்கி நினைவு இழந்தது போல் நடிக்கிறார் அர்ஜுன். ஸ்பெஷல் டாக்டர பூத்திரியாக வடிவேலு வருகிறார், மதன் பாபு, ஆர்த்தி ஆகியோர் அவருக்கு உதவியாக வருகின்றனர். கொள்ளை அடித்து தடைபட்ட வசதிகளை தன் ஊருக்கு நண்பர்களுடன் சேர்ந்து செய்து தருகிறார் அர்ஜுன்.

ஒலிப்பதிவு

இப்படத்திற்கு பிண்ணணி இசையும் பாடல்களும் ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் நா. முத்துக்குமார் பாடல்களை இயற்றியுள்ளார்[2]. அக்டோபர் 26, 2016ல் பாடல்களை வெளியிடப்பட்டது.

சான்றுகள்

  1. "'Kaththi Sandai' confirms December 23 release".
  2. "Kaththi sandai songs".

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கத்தி_சண்டை&oldid=31808" இருந்து மீள்விக்கப்பட்டது