திருவெழுகூற்றிருக்கை
திருவெழுகூற்றிருக்கை என்னும் பெயரில்
ஆகியோர் பாடிய பாடல்கள் உள்ளன.
நக்கீரதேவ நாயனார் பாடல்
திருஎழுகூற்றிருக்கை பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று.
ஏழு படிக்கட்டுகளில் ஒவ்வொன்றாக ஏறிநின்று அப்படிக்கட்டில் உள்ள எண்களால் தொகையிட்டுப் பாடி ஏறுவதும், இறங்குவதுமாகப் பாடுவது எழுகூற்றிருக்கை.
இது திரு என்னும் அடைமொழியுடன் ‘திருவெழுகூற்றிருக்கை’ போற்றப்படுகிறது.
இது சொல்லணிப் பாடல்.
பத்தாம் நூற்றாண்டு நக்கீரதேவ நாயனார் பாடிய நூல் நூல் இது.
- பாடல் அமைந்துள்ள முறைமையைக் காட்டும் விளக்கம்
- ஓருடம்பு ஈருரு ஆயினை (1, 2)
- ஒன்று புரிந்து ஒன்றி ஈரிதழ்க் கொன்றை சூடினை. மூவிலைச் சூலம் ஏந்தினை (1, 2, 3)
- இருகோட்டு ஒருமதில் மூவெயில் நாற்றிசை முரண் அரண் செகுத்தனை (1, 2, 3, 4)
- ஒன்று நினைவோர்க்கு உறுதி, இரண்டு நினைவோர்க்கு முந்நெறி உலகம் காட்டினை. நான்கென ஊழி தோற்றினை. ஐந்தலை அரவம் அசைத்தனை (1, 2, 3, 4, 5)
இப்படி ஏழுவரை அடுக்கிக் காட்டிக்கொண்டே செல்லும் இந்தப் பாடல் பின்னர் ஏழின் முகட்டிலிருந்து (7, 6, 5, 4, 3, 2, 1) இறங்கித் தொகுத்தும், பின்னர் முறையே (6, 5, 4, 3, 2, 1) என்கிற முறைப்படி (2, 1) என முடியும் வரையில் செல்கிறது.
கடைசியில் ‘இருகண் மொந்தை [1] ஒருகண் கொட்ட’ நடனமாடினான் என முடிகிறது.
அருணகிரிநாதர் பாடல்
- அருணகிரிநாதர் பாடிய திரு எழுகூற்று இருக்கை 27 வரிகள் கொண்டது.
- இதில் 'ஏரகத்து இறைவன்' என்று சுவாமிமலை முருகனைப் புலவர் வாழ்த்துகிறார்.
அடிக்குறிப்பு
- ↑ உடுக்கை
காலம் கணித்த கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005