பெரிய திருவந்தாதி
Jump to navigation
Jump to search
பெரிய திருவந்தாதி என்பது நம்மாழ்வார் இயற்றிய சிற்றிலக்கியங்களில் ஒன்று. திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி என்பன இவரது பிற சிற்றிலக்கியங்கள். இந்த நூல்களின் பாட்டுடைத் தலைவர் திருமால்.
நம்மாழ்வார் 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர். இவர் திருமாலைத் தெய்வமாகக் கொண்டு பாடல்களைப் பாடினாலும் பிற சமயக் கோட்பாடுகளையும் மதித்துப் போற்றியவர்.
பெரிய திருவந்தாதி வெண்பாச் செய்யுளால் ஆனது. இந்த நூலில் 87 வெண்பாக்கள் அந்தாதியாகத் தொடுக்கப்பட்டுள்ளன. முதலும் இறுதியும் கூட மாலை போல் தொடுக்கப்பட்டுள்ளன.
பாடல் நலம்
- இவையன்றே நல்ல இவையன்றே தீய
- இவையென் றிவையறிவ னேலும் – இவையெல்லாம்
- என்னால் அடைப்புநீக் கொண்ணா திறைவனே
- என்னால் செயற்பால தென்? (3) [1]
- சீரால் பிறந்து சிறப்பால் வளராது
- பேர்வாமன் ஆகாக்கால் பேராளா! – மார்பாரப்
- புல்கிநீ உண்டுமிழ்ந்த பூமிநீர் ஏற்பரிதே
- சொல்லுநீ யாமறியச் சூழ்ந்து. (16) [2]
- அவனாம் இவனாம் உவனாம் மற்றும்பர்
- அவனாம் அவனென் றிராதே – அவனாம்
- அவனே எனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
- அவனே எவனேலும் ஆம். (36) [3]
அடிக்குறிப்பு
- ↑ இவை நல்லவை, இவை தீயவை என என்னால் அறியமுடியும். என்றாலும் அவை நான் எண்ணியவாறே நல்லனவாகவும், தீயனவாகவும் முடிவது என் கையில் இல்லை. இந்த அடைப்புக்கு என்ன செய்வேன்?
- ↑ நீ வாமணனாகப் பிறக்காமல் சீராகப் பிறந்து சீராக வளர்ந்திருந்தால், நீயே உண்டு நீயே உமிழ்ந்த பூமியிலுள்ள நீரை நீயே கையேந்திப் பெறமுடியுமா?
- ↑ கண்ணன் இங்கு இருப்பவன், கண்ணுக்குத் தெரியும் தூரத்தில் இருப்பவன், கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் இருப்பவன், மேலுலகில் இருப்பவன் என்று இருக்காமல், கண்ணனுக்கே உன்னை ஆளாக்கிவிட்டால் அவன் எவனாகவும் உன்னிடம் இருக்கமுடியும்.