திருக்குறளில் மரபும் திறனும் (நூல்)
திருக்குறளில் மரபும் திறனும் என்னும் திருக்குறள் ஆய்வுநூல் கருவை பழனிசாமியால் ஆக்கப்பட்டு 2004இல் வெளியிடப்பட்டுள்ளது.[1]
நூலின் உள்ளடக்கம்
இந்நூலில் ஆசிரியர் திருக்குறளின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணம் எவ்வாறு எழிலுற அமைக்கப்பட்டுள்ளது என்பதை விளக்குகிறார்.
பல தமிழ் இதழ்களில் வெளியான கட்டுரைகளைத் தொகுத்து இந்நூலில் வழங்குகிறார் ஆசிரியர். இந்நூலின் உள்ளடக்கம் கீழ்வருமாறு:
- தோற்றுவாய்
- மரபியல் ஆய்வு
- உள்ளடக்க பகுப்பாய்வு
- ஒப்பாய்வு
இவற்றுள் மரபியல் ஆய்வின் கீழ் "திருக்குறளில் கோடிகள்", "திருக்குறளில் தலைகள்", "திருக்குறளில் நோய்கள்", "திருக்குறளில் உடல் உறுப்புகள்", திருக்குறளில் இயற்கை", "திருக்குறளில் எதிர்காலவியல்", "திருக்குறளில் பெரியார் - யார்?" போன்ற சிறு கட்டுரைகள் உள்ளன.
அதுபோலவே, ஒப்பாய்வின் கீழ் "திருக்குறளும் திருவாசகமும்", "வள்ளுவர் வழியில் பாரதி" போன்ற சிறு கட்டுரைகள் உள்ளன. நூலின் இறுதியில் திருவள்ளுவமாலை பதிக்கப்பெற்றுள்ளது.
குறிப்பு
- ↑ கருவை பழனிசாமி, திருக்குறளில் மரபும் திறனும்: ஒரு செயல்முறை ஆய்வு, திருமொழிப் பதிப்பகம், சென்னை, 2004, பக்கங்கள்: 276.