தமிழக முன்னேற்ற முன்னணி
தமிழக முன்னேற்ற முன்னணி (Thamizhaga Munnetra Munnani) என்பது நடிகர் சிவாஜி கணேசன் தலைமையில் தொடங்கப்பட்ட ஒரு தமிழக உள்நாட்டு அரசியல் கட்சியாகும்.இக்கட்சியின் சின்னம் ஏணி ஆகும். (1988–1989) ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கட்சி ஒரே ஆண்டில் ஜனதா தளம் கட்சியுடன் இணைக்கப்பட்டது.[1][2][3][4][5][6] சிவாஜி கணேசன் பல அரசியல் கட்சிகளுடன் நீண்டகால உறவைக் கொண்டிருந்தார், அவருடைய முதல் படமே திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரச்சாரத் திரைப்படமாகும்.
இந்திய தேசிய காங்கிரஸின் தமிழ்நாடு பிரிவில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு கட்சி பிறந்தது. மற்றொரு கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வி.என்.ஜானகி ராமச்சந்திரன் தலைமையில், ஜெ.ஜெயலலிதா தலைமையில் இரண்டாக உடைந்த பின்னரே பிளவு ஏற்பட்டது. கணேசனும் அவரது ஆதரவாளர்களும் 1989 மாநிலத் தேர்தலில் அதிமுகவின் எந்தப் பகுதியுடன் கூட்டணி வைப்பது என்பதில் கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசை விட்டு வெளியேறினர்.
தமிழக முன்னேற்ற முன்னணி ஜானகி ராமச்சந்திரனின் துண்டு துண்டான கட்சியை ஆதரித்து, போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. கணேசன் கடைசியில் தனது சொந்தக் கட்சியை மிதக்க முடிவெடுத்ததற்கு வருத்தம் தெரிவித்து கட்சியை ஜனதா தளத்துடன் இணைத்து அதன் மாநில தலைவரனார்.சிவாஜி கணேசன் தனது வாழ்வின் பிற்பகுதியில் எப்போதாவது தனது சொந்தக் கட்சியைத் தொடங்கியதற்காக வருந்தியதாகக் கூறப்படுகிறது
"என்னுடன் இருந்தவர்களில் பலர் தொழில்முறை அரசியல்வாதிகள். அவர்கள் வாழ்வாதாரத்திற்காக அரசியலில் தொடர்ந்து இருக்க வேண்டும். அவர்கள் நலனுக்காக நான் ஒரு கட்சியைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன், இருப்பினும் எனக்கு அது தேவையில்லை."
மற்றொரு சந்தர்ப்பத்தில் அவர் மேலும் கூறியதாவது:
"நான் பெற்ற வாக்குகள் வேறொரு கட்சியினரின் வாக்குகள். நான் தோற்றுப் போனது உண்மைதான். இது ஒரு பெரிய ஏமாற்றம் மற்றும் நான் எதிர்கொண்ட மிகவும் கடினமான சூழ்நிலை. ஒருவர் என்ன செய்ய முடியும்? நாம் தவறான முடிவுகளை எடுக்கும்போது, ஏமாற்றங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்."
சிவாஜி கணேசனின் அரசியல் வாழ்க்கை
- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மேடை நாடகங்களில் நடிக்கும் ஆரம்ப காலகட்டத்திலே மு. கருணாநிதி, அறிஞர் அண்ணா ஆகியோருடன் இணக்கமாக இருந்து வந்த நிலையில் 1946 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் உருவாகிய சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் வீர சிவாஜியாக வேடம் ஏற்று நடித்த போது அந்த நாடகத்தை பார்த்து ரசித்த தந்தை பெரியார் அவர்கள் வி.சி.கணேசனை சிவாஜி கணேசன் என்று அழைத்தார். பின்பு 1946 ஆம் ஆண்டு முதல் பெரியாரின் திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்பட்டார்.
- அதன் பிறகு திராவிடர் கழகத்தில் பெரியார்–அண்ணாவிற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அறிஞர் அண்ணா ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1949 ஆம் ஆண்டு இணைந்து அக்கட்சிக்கு பல வழிகளில் பணியாற்றினார்.
- 1952 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் முதல் முதலாக நடித்த பராசக்தி திரைப்படத்தின் வாயிலாக மு. கருணாநிதி வசனத்தில் பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற திராவிட சித்தாந்த கொள்கைகளை பிரதிபலிக்கும் விதமாக பின்னாளில் திமுக வெற்றி பெறுவதற்கு சிவாஜி கணேசன் பங்கு இருந்ததாக கூறப்படுகிறது.
- 1953 முதல் திமுகவில் எம். ஜி. ஆர் வருகை மற்றும் பலமான கட்சியாக திமுக மாறி வந்த நிலையில் சிவாஜிகணேசனுக்கும் அவரது நண்பர் கருணாநிதிக்கும் திரைப்படம் சார்ந்த சிறிய கருத்து வேறுபாடுகள் முட்டல், மோதல்கள் காரணமாகவும் திமுகவில் கருணாநிதி ஆதரவு எம். ஜி. ஆர் பக்கமே இருந்ததாகவும். எம். ஜி. ஆர் அரசியல் களபணிகள் அன்றைய திமுக தலைவர் அறிஞர் அண்ணாவுக்கு பிடித்து போக எம்ஜிஆரே திமுகவின் நட்சத்திர பேச்சாளராக அறிவித்த நிலையில் சிவாஜி கணேசன் 1956 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து பல சித்தாந்த கொள்கை வேறுபாடு காரணங்களை வைத்து வெளியேறினார்.
- 1956–1961 வரை சிவாஜி கணேசன் எந்த கட்சியிலும் சேராமல் அரசியலில் இருந்து முற்றிலும் விலகி திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார்.
- அதன் பிறகு 1960 ஆம் ஆண்டு திமுகவில் மு. கருணாநிதி மற்றும் கண்ணதாசன் இடையே ஏற்பட்ட பெரும் அரசியல் அதிகார போட்டி பிரச்சனையால் கண்ணதாசன் அவமதிக்கபட்டதை தாங்க முடியாமல் அவரது ஆருயிர் நண்பர் ஈ. வி. கே. சம்பத் சுயமரியாதை சிங்கமாக திமுகவிலிருந்து வெளியேறி தமிழ் தேசிய கட்சியை தனது தலைமையில் ஆரம்பித்தபோது அதில் ஈ. வி. கே. சம்பத் அவரது அன்பு இறவல் கண்ணதாசன், பழ. நெடுமாறன் போன்றோருடன் இணைந்து சிவாஜி கணேசன் செயல்பட்டார்.
- பின்பு அக்கட்சி நால்வர் அணி என்று அழைக்கப்பட்டது 1962 சட்டமன்ற தேர்தலில் பெரும் தோல்வியை தழுவினாலும் தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் காமராஜருக்கு ஆதரவாக செயல்பட்டனர்.
- பிறகு ஈ. வி. கே. சம்பத் நால்வருடன் சிவாஜி கணேசன் சேர்ந்து 1964 ஆம் ஆண்டு அப்போது தமிழகம் வந்த அன்றைய இந்திய பிரதமரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜவஹர்லால் நேரு மற்றும் காமராஜர் முன்னணியில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டனர்.
- பின்பு அன்றைய முதல்வர் காமராஜரின் அனுதாபியாக இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து முக்கியத் தலைவர்களில் ஒருவராக சிவாஜி கணேசன் இருந்தார்.
- பின்பு 1969ல் காங்கிரஸ் கட்சியில் பிரதமர் இந்திரா காந்தியின் சர்வதிகார போக்கு, வாரிசு அரசியலை எதிர்த்து காமராஜர் பல மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் வெளியேறி தனது தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்த போது சிவாஜி கணேசன் அவர்களும் அதில் இணைந்து செயல்பட்டார்.
- பின்பு 1975ல் காமராஜரின் இறப்பிற்கு பிறகு அவரது ஸ்தாபன காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்தார் அப்போது பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் கொண்டு வந்த சர்வாதிகார முறையான நெருக்கடி நிலையை பல ஸ்தாபன காங்கிரஸ் முன்னணி தலைவர்களுடன் இணைந்து போராடினார்.
- பின்பு 1977ல் நெருக்கடி நிலையை எதிர்த்து போராடிய ஜனதா கட்சி உடன் ஸ்தாபன காங்கிரஸ் ஒன்றினைந்து விட்டதால். சிவாஜி கணேசன் அதிலிருந்து விலகினார்.
- பின்பு மீண்டும் 1976ல் இந்திரா காந்தியின் தலைமையில் செயல்பட்டு வந்த இந்திரா காங்கிரஸ்ல் இணைந்தார்.
- பின்பு 1977 நாடாளுமன்றத் தேர்தலில் தனது ஆருயிர் நண்பரும் நடிகருமான எம். ஜி. ஆர் அவர்களின் அதிமுக–காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து பிரச்சாரம் செய்து பின்னாளில் 1977 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டாலும் எம். ஜி. ஆர் வெற்றி பெற்று முதல் முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
- ஆனால் இந்த தமிழக நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் வெற்றி பெற்றாலும் இந்திய அளவில் நெருக்கடி நிலை எதிர்ப்பினால் இந்திரா காந்தி தோற்று போனார்.
- 1980 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக–காங்கிரஸ் கூட்டணிக்கு சிவாஜி கணேசன் நட்சத்திர பேச்சாளராக பிரச்சாரம் செய்து திமுக–காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் இந்திரா காந்தி மூன்றாவது முறையாக பிரதமரானார்.
- இக்காலகட்டத்தில் பிரதமர் இந்திரா காந்தி அமைச்சரவையில் 1983–1984 ஆம் ஆண்டு காலத்தில் சிவாஜி கணேசன் ராஜ்யசபா உறுப்பினர் ஆனார்.
- அதே காலகட்டத்தில் மத்தியில் பல காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் மற்றும் பிற கட்சி தலைவர்களிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு சிவாஜிகணேசனுக்கு கிடைத்தது.
- அன்னை இந்திரா காந்தி மரணத்திற்கு பிறகு நடந்த 1984 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 1984 சட்டமன்ற தேர்தலில் அதிமுக–காங்கிரஸ் கூட்டணிக்கு சிவாஜி கணேசன் அப்போது இந்திரா காந்தி மரணம் மற்றும் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் உடல்நல குறைவு ஆகிய அனுதாப அலையால் பலமான ஆதரவு நிலை பிரச்சாரத்தை மேற்கொண்டு அதிமுக–காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெற வைத்து காங்கிரஸ் கட்சியில் சிவாஜி கணேசன் ஆதரவாளராக ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் உட்பட நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக சட்டமன்றத்திற்கு சென்றனர்.
- பின்பு மத்தியில் ராஜீவ் காந்தி பிரதமரான பிறகு சிவாஜி கணேசன் நெருக்கம் காட்டிய போதிலும் சில தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்களால் சிவாஜி கணேசன் ஒதுக்கப்பட்டார்.
- அதற்கு காரணங்களாக சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சியில் எவ்வித பதவி பிரதிநிதிதுவத்தையும் ஏற்காமல் தன்னை ஒரு அரசியல் ஆதரவாளனாக மட்டுமே காட்டி கொண்டதால் அவ்வாறு ஒதுக்கபட்டதற்கு காரணமாக சொல்லபடுகிறது.
- பின்பு 1987ல் அதிமுகவில் தமிழக முதல்வர் எம். ஜி. ஆர் இறப்பிற்கு பிறகு அக்கட்சி இரண்டாக பிளவுபட்டது.
- அக்கட்சியில் ஜெயலலிதா அவர்களின் தலைமையில் ஜெ அணியும் எம். ஜி. ஆர் மனைவி வி. என். ஜானகி தலைமையில் ஜா அணி என்று இரண்டாக பிளவுபட்டது.
- அதனால் அப்போது அதிமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களின் தவறான தலையீட்டால் பிரதமர் ராஜீவ் காந்தி அதிமுகவுக்கு ஆதரவளிக்காமல் விலக்கி கொண்டதால்.
- அதை எதிர்த்து சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
- பின்பு நடந்த 1989 சட்டமன்றத் தேர்தலில் சிவாஜி கணேசன் தனது தலைமையில் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்து தனது நண்பர் எம். ஜி. ஆரின் மனைவி வி. என். ஜானகியின் ஜா அணியில் இணைந்து கூட்டணி ஆதரவுடன் தேர்தலை சந்தித்தார்.
- இத்தேர்தலில் வி. என். ஜானகி ஆதரவாக என் அன்னையின் ஆணையை நிறைவேற்றுவேன் என்று கூறி ஜானகி ராமச்சந்திரன் முதல்வராக பிரச்சாரம் செய்தார் சிவாஜி கணேசன் மற்றும் அவரது கட்சியினர்கள்.
- அப்போது தமிழக அளவிலும், இந்திய அளவிலும் பெரும் பிரச்சனைகளை எதிர்த்தும் குறிப்பாக இலங்கை வாழ் ஈழத்தமிழ்ற்கள் மீதான தவறான கருத்துகளை எதிர்த்தும் மீண்டும் இலங்கையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி ஈழத்தமிழ் மக்களுக்கு தனிநாடு சுதந்திரம் பெற்று தரவேண்டியும் பல ஈழ போராளி அமைப்புகளுக்கும் குறிப்பாக விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன் குற்றமற்றவர் என்று கூறி எம்ஜிஆரின் ஆதரவு நிலைப்பாட்டை சிவாஜி கணேசன் எடுத்தார்.
- இதனால் திமுகவில் கருணாநிதி, அதிமுக (ஜெ) அணியில் ஜெயலலிதா மற்றும் காங்கிரஸ் கட்சியில் ஜி. கே. மூப்பனார் முதல் ராஜீவ் காந்தி வரை சிவாஜி கணேசன் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்தார்.
- பின்பு அத்தேர்தலில் தமிழக முன்னேற்ற முன்னணி 50 தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
- சிவாஜி கணேசன் திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரிடம் தோல்வியடைந்தார்.
- இத்தேர்தல் முடிந்த சிறிது காலத்திற்குள் கட்சியை கலைத்துவிட்டு அரசியலில் இருந்து விலக நினைத்த சிவாஜி கணேசன் தனது முன்னாள் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரும், நண்பருமான அன்றைய பிரதமர் வி. பி. சிங்கின் வேண்டுகோளை ஏற்று அவரது ஜனதா தளம் கட்சியில் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து தமிழக முன்னேற்ற முன்னணியை இணைத்துவிட்டார்.
- பின்பு 1990 ஆம் ஆண்டு முதல் ஜனதா தளம் கட்சியின் தமிழக தலைவர் ஆனார் சிவாஜி கணேசன். பிறகு 1991ல் மத்தியிலும், தமிழகத்திலும் நடந்த ஆட்சி கலைப்பிற்கு பின் நடந்த தமிழக நாடாளுமன்ற/சட்டமன்ற தேர்தலில் ஜனதா தளம் கட்சி சார்பில் திமுகவுடன் தொகுதி பங்கீடு செய்துகொண்டார்.
- இத்தேர்தலில் கடந்த 1989 சட்டமன்ற தேர்தலில் சிவாஜி கணேசன் தோல்விக்கு காரணமாக இருந்த முதலமைச்சர் மு. கருணாநிதியின் திமுக–ஜனதா தளம் கூட்டணி கடந்த ஆட்சியில் இருந்து தொடர்ந்தது.
- அதில் கடந்த காலத்தில் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து திமுக எதிர்ப்பை கையில் எடுத்த சிவாஜி கணேசன் தற்போது திமுகவில் கருணாநிதியுடன் கூட்டணியில் இணைந்தது சிவாஜி கணேசன் அரசியல் வாழ்க்கையில் பெரும் சறுக்கலாகவும், பின்னடைவாகவும் அமைந்தது என்று அவரது ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது.
- பின்பு 1991 நாடாளுமன்ற/சட்டமன்ற தேர்தலில் அதிமுக–காங்கிரஸ் கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய தமிழகம் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் துன்பியல் மரணத்திற்கு பிறகு நடந்த அத்தேர்தலில் எதிரணியில் திமுக–ஜனதா தளம் கூட்டணி கட்சி பெரும் தோல்வி அடைந்ததால் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று சிவாஜி கணேசன் அக்கட்சியிலிருந்தும், அரசியலில் இருந்தும் முழுமையாக விலகினார்.[1][2][3][6][7][8]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1
Thakurta, Paranjoy Guha (2004). A Time of Coalitions. SAGE. pp. 235–236. ISBN 0761932372.
{{cite book}}: Unknown parameter|coauthors=ignored (help) பிழை காட்டு: Invalid<ref>tag; name "Divided" defined multiple times with different content - ↑ 2.0 2.1 Subramaniamn, TS (2004-07-30). "Celluloid connections". Frontline இம் மூலத்தில் இருந்து 2007-11-14 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20071114203713/http://www.hinduonnet.com/fline/fl2115/stories/20040730003803600.htm. பார்த்த நாள்: 2009-01-21. பிழை காட்டு: Invalid
<ref>tag; name "cell" defined multiple times with different content - ↑ 3.0 3.1 Kantha, Sachi Sri (2008-11-09). "Book Review: Autobiography of Actor-Politician Sivaji Ganesan". Sangam. http://www.sangam.org/2008/11/Sivaji_Ganesan.php?uid=3155&print=true. பார்த்த நாள்: 2009-01-21.
பிழை காட்டு: Invalid
<ref>tag; name "Sachi" defined multiple times with different content - ↑ Kumar, Ashok (2006-04-05). "From MGR to Vijaykant, the film-politics nexus continues". The Hindu இம் மூலத்தில் இருந்து 2006-04-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060409053933/http://www.hindu.com/2006/04/05/stories/2006040518720200.htm. பார்த்த நாள்: 2009-01-21.
- ↑ Ramachandran, K (2001-07-22). "He strode Kollywood like a colossus". The Hindu இம் மூலத்தில் இருந்து 2003-07-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030704115342/http://www.hindu.com/thehindu/2001/07/22/stories/0222000f.htm. பார்த்த நாள்: 2009-01-21.
- ↑ 6.0 6.1 1989 election results
- ↑ Kumar, Ashok (2006-04-05). "From MGR to Vijaykant, the film-politics nexus continues". The Hindu இம் மூலத்தில் இருந்து 2006-04-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060409053933/http://www.hindu.com/2006/04/05/stories/2006040518720200.htm. பார்த்த நாள்: 2009-01-21.
- ↑ Ramachandran, K (2001-07-22). "He strode Kollywood like a colossus". The Hindu இம் மூலத்தில் இருந்து 2003-07-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030704115342/http://www.hindu.com/thehindu/2001/07/22/stories/0222000f.htm. பார்த்த நாள்: 2009-01-21.