ஜேம்ஸ் இரத்தினம்
ஜேம்ஸ் ரி. இரத்தினம் James T. Rutnam | |
---|---|
பிறப்பு | இணுவில், யாழ்ப்பாணம் | சூன் 13, 1905
இறப்பு | நவம்பர் 4, 1988 கொழும்பு, இலங்கை | (அகவை 83)
தேசியம் | இலங்கையர் |
பணி | வரலாற்றாளர், கல்வி, எழுத்தாளர், அரசியல்வாதி |
வாழ்க்கைத் துணை | ஈவ்லின் விஜயரத்தின இரத்தினம் |
பிள்ளைகள் | ராஜா, சந்திரன், இந்திராணி, ஜெயம், ஈசுவரி, டெனிசு, பத்மினி, ஜோர்ஜ் |
ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் (James Thevathasan Rutnam, 13 சூன் 1905 - 4 நவம்பர் 1988) இலங்கை வரலாற்றாளரும், எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார்.[1] ஈவ்லின் ரத்தினம் பண்பாடுகளிடை ஆய்வுகளுக்கான நிறுவனத்தை ஆரம்பித்தவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
யாழ்ப்பாண மாவட்டம், மானிப்பாயைச் சேர்ந்த ஜேம்ஸ் இரத்தினம் இணுவிலில் பிறந்தவர்.[2] தந்தை பண்டத்தரிப்பைச் சேர்ந்தவர், தாயார் (டுவைட்) மானிப்பாயைச் சேர்ந்தவர். ஆரம்பக் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு புனித யோசேப்பு கல்லூரி, புனித தோமையர் கல்லூரிகளில் கல்வி கற்றார். 1924 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்தார். சில காலம் அங்கு கல்வி பயின்ற பின்னர் கொழும்பு சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், ஓர் ஆண்டிலேயே இடதுசாரி அரசியல் ஆர்வத்தினால் படிப்பை முடிக்காமல் வெளியேறினார்.[1]
பின்னர் பதுளை ஊவா கல்லூரியிலும், பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் மூன்று ஆன்டுகள் நுவரெலியா சென்று அங்குள்ள புனித சேவியர் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றினார்.[1][3] அங்கு ஏ. ஈ. குணசிங்க போன்றவர்களுடன் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கினார்.[2] தேசிய உணர்வை வளர்த்தெடுப்பதற்கும், அரசியல் போராட்டத்தௌ வலுப்படுத்தவும் என முற்போக்கு தேசியவாதிகள் கட்சி (Progressive Nationalist Party) என்ற அமைப்பை எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுடன் இணைந்து ஆரம்பித்தார்.[3] பண்டாரநாயக்கா இதன் தலைவராக இருந்தார்.[2][4] ஆனாலும் இப்போராட்டம் தோல்வியடையவே, அவர்கள் இருவரும் இலங்கை தேசியக் காங்கிரசில் இணைந்தார்கள்.[3]
இலங்கை சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் நுவரெலியா தேர்தல் தொகுதியில் ஐந்து தடவைகள் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[2] 1960 மார்ச் தேர்தலில் கொழும்பு தெற்குத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார்.[5]
ஈவ்லின் இரத்தினம் ஆய்வு நிறுவனம்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "James T. Rutnam - a versatile servant". பேராசிரியர் பேட்ரம் பஸ்தியாம்பிள்ளை (டெய்லி நியூஸ்). 2 டிசம்பர் 2005. http://archives.dailynews.lk/2005/12/02/fea03.htm. பார்த்த நாள்: 2 ஆகத்து 2015.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "JAMES THEVATHASAN RUTNAM". சீலன் கதிர்காமர். 15 பெப்ரவரி 2013. http://silankadirgamar.blogspot.com.au/2013/02/james-thevathasan-rutnam-centenarary.html. பார்த்த நாள்: 2 ஆகத்து 2015.
- ↑ 3.0 3.1 3.2 "Dr. James T. Rutnam - a scholar and writer". டெய்லி நியூஸ். 13 சூன் 1975. http://www.rootsweb.ancestry.com/~lkawgw/jtrutnam.htm. பார்த்த நாள்: 2 ஆகத்து 2015.
- ↑ "When Sinhalese supported and Tamils opposed federalism". சி. வி. விவேகானந்தன் (சண்டே டைம்சு). http://www.sundaytimes.lk/030119/columns/cv.html. பார்த்த நாள்: 2 ஆகத்து 2015.
- ↑ "Result of Parliamentary General Election 1960-03-19". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2009-12-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091209231748/http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF.
வெளி இணைப்புகள்
- Alimankada –Behind the scenes பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம்
- First Lankan immigrant to USA dies பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம்
- A BIOGRAPHICAL INTRODUCTION by James T. Rutnam பரணிடப்பட்டது 2011-06-28 at the வந்தவழி இயந்திரம்
- Dr. James T. Rutnam - A true scholar By Prof. K. Indrapala பரணிடப்பட்டது 2017-03-31 at the வந்தவழி இயந்திரம்
- The Leading Characters in the Political Turmoil of Sinhalese-Muslim Riots of 1915 by Sachi Sri Kantha
- Rajah Rutnam — Sri Lanka’s first immigrant to US பரணிடப்பட்டது 2010-11-22 at the வந்தவழி இயந்திரம்
- Dr. James T. Rutnam - a scholar and writer பரணிடப்பட்டது 2012-10-19 at the வந்தவழி இயந்திரம்
- A Century of Tamil Poetry in Sri Lanka
- WHO WAS JAMES T RUTNAM? பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- In Memory of James Rutnam பரணிடப்பட்டது 2012-03-14 at the வந்தவழி இயந்திரம்
- MEETING THIRU ARUMUGAM IN TORONTO
- "The House of Nilaperumal" பரணிடப்பட்டது 2014-03-05 at the வந்தவழி இயந்திரம் by James T.Rutnam