சிப்பிக்குள் முத்து
சிப்பிக்குள் முத்து | |
---|---|
திரைப்பட விளம்பர சுவரொட்டி | |
இயக்கம் | கே. விஸ்வநாத் |
தயாரிப்பு | ஏடித. நாகேஸ்வர ராவ் |
கதை | கே. விஸ்வநாத் |
திரைக்கதை | கே. விஸ்வநாத் |
வசனம் | தேவ நாராயணன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல்ஹாசன் ராதிகா |
ஒளிப்பதிவு | எம். வி. ரகு |
படத்தொகுப்பு | ஜி. ஜி. கிருஷ்ணா ராவ் |
நடனம் | சேஷு |
கலையகம் | பூர்ணோதயா மூவி கிரியேஷன்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 2, 1986 (தமிழ்) மார்ச் 13, 1986 (தெலுங்கு) |
ஓட்டம் | 160 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் தெலுங்கு |
சிப்பிக்குள் முத்து (Sippikkul Muthu), கே. விஸ்வநாத் இயக்கி 1986-ஆம் ஆண்டில் வெளியான இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், இராதிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தெலுக்கில் சுவாதிமுத்யம் (Swati Mutyam) என்ற பெயரில் முதலில் எடுக்கப்பட்டு பின்னர் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தின் இசை அமைப்பாளர் இளையராஜா ஆவர்.[1] இத்திரைப்படத்தின் பாடல்களைப் பாடியவர்கள் எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா, எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. சைலஜா ஆவர்.
இத்திரைப்படமானது பெங்களூர் பல்லவி திரையரங்கில் தெலுங்கு மொழியில் அதிகபட்சமாக 450 நாட்கள் வரை ஓடியது. இத்திரைப்படம் 1989 ஆம் ஆண்டு இந்தி மொழியில் அனில் கபூர் நடிப்பில் ஈஸ்வர் எனும் பெயரில் இயக்குநர் கே. விஸ்வநாத் மீண்டும் படமாக்கினார். 2003 ஆம் ஆண்டு கன்னட மொழியில் இக்கதை சுவாதி முத்து எனும் பெயரில் படமாக்கப்பட்டது. கன்னட மொழியில் ராஜேந்திர பாபு இயக்கத்தில் நடிகர் சுதீப் மற்றும் மீனா நடித்திருந்தனர்.
நடிப்பு
- கமல்ஹாசன்
- ராதிகா
- கோலபுடி மாருதி ராவ்
- ஜெ. வி. சோமயாஜுலு
- நிர்மலம்மா
- சரத் பாபு (சிறப்பு தோற்றம்)
- ஒய். விஜயா
- மேஜர் சுந்தரராஜன்
- உன்னி மேரி (தீபா)
- டப்பிங் ஜானகி
- அல்லு அர்ஜுன் (குழந்தை நட்சத்திரம்)
தயாரிப்பு
இத்தமிழ் மொழி பெயர்ப்பு படத்தில் கமல்ஹாசன் நடித்த கதாபாத்திரத்திற்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் பின்னணி குரல் கொடுத்தார்.[2]
பாடல்கள்
இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். தமிழ் பாடல் வரிகள் அனைத்தும் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார்.[3]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | துள்ளி துள்ளி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வைரமுத்து | 5:38 |
2 | வரம் தந்த | பி. சுசீலா | வைரமுத்து | 4:38 |
3 | ராமன் கதை | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | வைரமுத்து | 6:22 |
4 | மனசு மயங்கும் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வைரமுத்து | 5:23 |
5 | கண்ணோடு கண்ணான | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வைரமுத்து | 4:49 |
6 | தர்மம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | வைரமுத்து | 2:52 |
7 | பட்டுச் சேல | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | வைரமுத்து | 1:22 |
8 | வரம் தந்த (சோகம்) | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | வைரமுத்து | 3:02 |
விருதுகள்
- சிறந்த தெலுங்கு திரைப்படம்
- சிறந்த நடிகர் - கமல்ஹாசன்
- சிறந்த திரைப்படம்
- சிறந்த இயக்குநர் - கே. விஸ்வநாத்
மேற்கோள்கள்
வெளியிணைப்பு
- 1986 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- ராதிகா நடித்த திரைப்படங்கள்
- தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டத் திரைப்படங்கள்
- 1986 தெலுங்குத் திரைப்படங்கள்
- சரத் பாபு நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்