கோவலன் பொட்டல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கோவலன் பொட்டல் எனும் இடம் மதுரையின் பழங்காநத்தம் பகுதியில் மாடக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் 1980ம் ஆண்டில் அகழ்வாய்வு நடத்தியது.[1] அகழ்வாராய்ச்சியில் முதுமக்கள் தாழிகள், சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மனித எலும்புக்கூடுகள், சங்க காலச் செப்புக்காசுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன[2]. தமிழ்நாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் கோவலன் பொட்டலும் ஒன்றாகும்.[3][4]

பெயர்க் காரணம்

சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகியின் கணவன் கோவலன் மீது, பாண்டிய மன்னனின் பட்டத்தரசி கோப்பெருந்தேவியின் கால் சிலம்பினை திருடியதாக வீண் பழி சுமத்தப்பட்டதை தீர விசாரணை செய்யாத பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், கோவலனின் தலையை வெட்ட ஆணையிட்டான். மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைந்த பொட்டலில் கோவலனின் தலை வெட்டப்பட்டதால், பிற்காலத்தில் அவ்விடம் கோவலன் பொட்டல் என்றாயிற்று என்று கூறப்படுகிறது.[2].

மேற்கோள்கள்

வார்ப்புரு:மதுரை

"https://tamilar.wiki/index.php?title=கோவலன்_பொட்டல்&oldid=10024" இருந்து மீள்விக்கப்பட்டது