கோவலன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கோவலன், தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் வரும் முக்கியமான கதைமாந்தன் ஆவார்.

குடும்பம் வான்

மனைவி : கண்ணகி

காதலி : மாதவி

மகள் : மணிமேகலை

கோவலனின் பயணம்

புகார்க் காண்டம்

கோவலன், காவிரிப்பட்டிணத்தில் வாழ்ந்து வந்த மாசாத்துவான் என்னும் வணிகனின் மகன் ஆவார். இவர் மற்றொரு வணிகரின் மகளான கண்ணகியை மணந்துக் கொண்டார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அப்பொழுது கோவலனுக்கு 16 வயதே ஆகிறது. சிலகாலத்திற்குப் பின் கோவலனுக்கு மாதவி என்னும் நாட்டியக்காரியின் அறிமுகம் கிடைத்தது. பின்னர் கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்தான். இதற்கிடையே, சிறிது காலத்தில் அவன் செல்வம் அனைத்தும் கரைந்து போனது. இந்திரவிழாவின் போது, இருவர்க்குமிடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்தனர். பின்னர் கோவலன் மீண்டும் கண்ணகியிடம் வந்தான். செல்வம் ஏதும் இல்லாத போதிலும், கண்ணகி தன்னிடம் காட்டிய அன்பின் காரணமாக மனம் திருந்திய கோவலன், கண்ணகியுடன் மதுரை நகரத்திற்குச் சென்று புது வாழ்க்கை வாழ முற்பட்டான்.

மதுரைக் காண்டம்

புகாரை விட்டு வெளியேறிய கோவலனும் கண்ணகியும், கவிந்தியடிகளுடன் மதுரையை நோக்கி நடந்ததனர். நீண்ட நாட்கள் பயணத்திற்கு பின்பு, மதுரை மாநகரத்தைச் சென்றடைந்தனர். அவர்களிடம் ஓரிணை சிலம்புகளைத் தவிர வேறேதும் இல்லை. அங்கு அச்சிலம்பினை விற்பதற்காக கடை வீதிக்குச் சென்றான். ஆனால் அங்கு, அரசியின் சிலம்புகளைத் திருடிய பொற்கொல்லன் என்று அறியாமல், அந்த பொற்கொல்லனிடமே அச்சிலம்பை விற்க உதவி கோறினான். அச்சிலம்பு அரசியின் சிலம்பைப் போலவே இருந்தமையால், அப்பொற்கொல்லன்நெடுஞ்செழியன் இவனை மாட்டிவிட்டு நாம் தப்பித்து கொள்ளலாம் என்று எண்ணி மன்னன் நெடுஞ்செழியனிடம் பொய்யுரைகள் கூறுகிறான்.மன்னனும் அதை கேட்டு எதையும் விசாரணையின்றி கோவலனைக் கொல்லுமாறு ஆணையிட்டான். கோவலனும் கொல்லப்பட்டான்.

துணை நூற்கள்

  • 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம். வசந்தா பதிப்பகம். 2001. பக். 446. 

மேற்கோள்கள்


"https://tamilar.wiki/index.php?title=கோவலன்&oldid=9790" இருந்து மீள்விக்கப்பட்டது