கே. எஸ். ஜெயலட்சுமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கே. எஸ். ஜெயலட்சுமி
இயற்பெயர்/
அறியும் பெயர்
கே.எஸ்.ஜெயலட்சுமி
பணி திரைப்பட, தொலைக்காட்சி நடிகை
தேசியம் இந்தியர்
செயற்பட்ட ஆண்டுகள் 1976 ம் ஆண்டு முதல்
செயற்பட்ட ஆண்டுகள் 1976 ம் ஆண்டு முதல்

கே.எஸ்.ஜெயலட்சுமி, தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் துறையில் பல ஆண்டுகளாக நடித்துவரும் ஒரு இந்திய நடிகை ஆவார். திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் மட்டுமல்லாது குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள ஜெயலட்சுமி 1976 ஆம் ஆண்டு வெளியான எதற்கும் துணிந்தவன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

திரைப்பட வாழ்க்கை

அக்னி சாட்சி, பொய்க்கால் குதிரை, மனத்தில் உறுதி வேண்டும், குரு சிஷ்யன், புது புது அர்த்தங்கள், காதலே நிம்மதி உள்ளிட்ட நூற்றி இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகையாகவும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார்.[1]

இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரின், கவிதாலயா நிறுவனத்தின் தயாரிப்பில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி

தொடர்கள்
ஆண்டு தலைப்பு பங்கு சேனல்
1999 காசளவு நேசம் மாதவி தேவி சன் டி.வி
2000–2001 சித்தி
2001–2002 அலைகள் சகுந்தலா
2003–2004 அண்ணாமலை பார்கவி
2005–2006 மனைவி மாலாஸ்ரீயின் அம்மா
2006–2008 லட்சுமி சாமுண்டேஸ்வரி
2008–2010 அத்திப்பூக்கள்
2009–2010 கருணாமஞ்சரி ராஜ் டி.வி
2010–2012 உறவுகள் மீனாட்சி சன் டி.வி
2011–2015 தென்றல் தமிழின் தாய்
2013-2015 வள்ளி சாந்தி
பொன்னுஞ்சல் கிருஷ்ணவேணி
2013-2016 பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் பாம்பே மாமி
2014 மன்னன் மகள் ஜெயா டி.வி
2015–2016 சந்திரலேகா தமிழரசி சன் டி.வி
2015–2017 வம்சம் சோலையம்மா
2019–தற்போது பாண்டவர் இல்லம் வள்ளி
2021–தற்போது புது புது அர்த்தங்கள் பரிமளம் ஜீ தமிழ்
2020–2021 நீதானே எந்தன் பொன்வசந்தம் சாமியாடி ஜீ தமிழ்
யதார்த்த நிகழ்ச்சிகள்
  • வானம் வசப்படும்
  • சூப்பர் குடும்பம் சீசன் 1
  • சூரிய வணக்கம்
  • சொல்லத்தான் நினைக்கிறேன்
  • சாகர சங்கமம்
  • புதிய பாடல்கள்
  • பொய் சொல்ல போறோம்

திரைப்படங்கள்

Year Film Role Notes
1976 எதற்கும் துணிந்தவன் கதாநாயகியாக அறிமுகம்
1978 அதிஷ்டக்காரன்
1980 மூடு பனி விபச்சாரி
1981 எல்லாம் இன்பமயம்
1983 அக்னி சாட்சி
1983 பொய்க்கால் குதிரை
1986 புன்னகை மன்னன் மாலினியின் தாய்
1987 மனதில் உறுதி வேண்டும்
1988 குரு சிஷ்யன் விலை மாது
1988 உன்னால் முடியும் தம்பி
1988 பூந்தோட்ட காவல்காரன்
1989 புதுப்புது அர்த்தங்கள்
1990 புலன் விசாரணை பார்வதி
1990 உலகம் பிறந்தது எனக்காக
1991 என் ராசாவின் மனசிலே பண்ணையாரின் மனைவி
1991 நீ பாதி நான் பாதி
1991 குறும்புக்காரன்
1991 அழகன் ஸ்வப்னாவின் ஆசிரியை
1991 ஒரு வீடு இரு வாசல் சிவப்பு ருக்மணி
1992 இதுதாண்டா சட்டம்
1992 நாளைய தீர்ப்பு அம்பிகா
1992 ஊர் மரியாதை
1993 பொறந்த வீடா புகுந்த வீடா லில்லி
1994 இளைஞர் அணி புதினா
1994 வனஜா கிரிஜா மேரி
1995 என் பொண்டாட்டி நல்லவ
1995 விட்னஸ் அசோக்கின் அம்மா
1996 சிவசக்தி காமேஸ்வரி
1997 லவ் டுடே ப்ரீத்தியின் அம்மா
1997 ஆஹா என்ன பொருள் ஜாக்-ஆன்-ஜிலின் தாய்
1998 காதலே நிம்மதி
1999 கும்மிப்பாட்டு அமராவதி அம்மா
1999 ஒருவன்
1999 அன்புள்ள காதலுக்கு
2000 கண்ணன் வருவான்
2002 பம்மல் கே. சம்பந்தம்
2015 நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்
2017 சரவணன் இருக்க பயமேன் நாகலட்சுமி

மேற்கோள்கள்

  1. "KS Jayalakshmi". Onenov (in English). 2018-07-06. Archived from the original on 2019-11-28. பார்க்கப்பட்ட நாள் 2020-02-22.
"https://tamilar.wiki/index.php?title=கே._எஸ்._ஜெயலட்சுமி&oldid=22611" இருந்து மீள்விக்கப்பட்டது