நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் சுவரொட்டி

நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் 2015-ஆம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும்.  அருள்நிதி, ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த இத்திரைப்படத்தை சிறீக்கிருட்டினா இயக்கியுள்ளார். இத்திரைப்படம், நல்ல கதையையும், திரைக்கதையையும் கொண்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டது. 

நடிப்பு

தயாரிப்பு

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய வெற்றிப்படங்களை வழங்கிய நிறுவனங்களான ஜெ. கே. எஸ். பிலிம் கார்ப்பரேசன் நிறுவனமும் லியோ விசன்சு நிறுவனமும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளன. [1]

தொலைக்காட்சி உரிமம்

இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை விஜய் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. 

வரவேற்பு

இப்படம் திரைப்படத் திறனாய்வாளர்களிடையே பெரிய வரவேற்பைப் பெறவில்லை. தி இந்துவில் வெளியான திறனாய்வு "இயக்குநர் காட்சிகளை வலு வாகவும் நம்பகத்தன்மையோடும் அமைக்கத் தவறிவிட்டது தான் பெரும் கோளாறு. எனினும் காட்சிகளில் இருக்கும் கலகலப்பு படத்தை ஓரளவு காப்பாற்றுகிறது" என்கிறது.[2] ".... இடைவேளைக்கு முந்திய பகுதி மாதிரி வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பின்பாதியும் இல்லாதது குறை. ஆனாலும் நாலு பொலீசும் நல்லா இருந்த ஊரும் திரைப்படம் கலர்புல், காமெடி, கமர்ஷியல் படமாகும்" என்பது தினமலரின் திறனாய்வுக் கணிப்பு.[3] தனித்துவமான கருப்பொருளைக் கொண்ட இப்படத்தை இன்னும் சிறப்பாக ஆக்கியிருக்கலாம் எனக் கருதும் "பில்மிபீட்" இணையத்தளத்தின் திறனாய்வின்படி இப்படத்திற்கு 2.5/5 குறியீடு கிடைத்தது.[4]

குறிப்புகளும் மேற்கோள்களும்