முண்டீச்சரம் சிவலோகநாதர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
(கிராமம் சிவலோகநாதர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
முண்டீச்சரம் சிவலோகநாதர் கோயில்
பாடல்
பாடல் வகை:தேவாரம்

முண்டீச்சரம் சிவலோகநாதர் கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அப்பர் பாடல் பெற்ற தலமாகும். இறைவனின் காவலர்களான திண்டி, முண்டி வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். [1]

அமைவிடம்

இக்கோயில் தென் பெண்ணை (மலட்டார்) கரையில் திருவெண்ணெய் நல்லூர் அருகில் 3 கி.மீ கிழக்கில் திருமுண்டீச்சரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. கடலூர்- திருக்கோவிலூர் திருவண்ணாமலை SH 68 நெடுஞ்சாலையில், விழுப்புரத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் சென்னை திருச்சிராப்பள்ளி NH 45 தேசிய நெடுஞ்சாலையில் மிக அருகில் இத்தலம் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி

இக்கோயிலில் உள்ள மூலவர் சிவலோகநாதசாமி என்றழைக்கப்படுகிறார். இறைவி சௌந்தர்யநாயகி ஆவார்.[2]

அமைப்பு

இக்கோயிலின் தல மரம் வன்னி ஆகும்.[2] ராஜ கோபுரம், பலி பீடம், கொடி மரத்தைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. கோபுரத்தினைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் இடது புறத்தில் பைரவர், சூரியன் மூன்று லிங்கங்கள், இரண்டு நந்திகள், ஒரு பாணம் ஆகியவை காணப்படுகின்றன. முன் மண்டபத்தில் கருவறைக்கு முன்பாக உள்ள மண்டபத்தில் இடப்புறம் நடராஜர் உள்ளார். கருவறைக்கு நுழையும் முன்புறம் திண்டி, முண்டி உள்ளனர். திருச்சுற்றில் சித்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், நவக்கிரகம், நாகேந்திரன், துர்க்கை, யோக குரு, பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வராகி, வைஷ்ணவி, பிராமி, சாமுண்டி ஆகியோரும், கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பெருமாள், பிரம்மா, துர்க்கை ஆகியோரும் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதியும், இடப்புறம் அம்மன் சன்னதியும் உள்ளன.

மேற்கோள்கள்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. 2.0 2.1 அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்

இவற்றையும் பார்க்க