காஞ்சிபுரம் ஆனந்த ருத்ரேசர் கோயில்
காஞ்சிபுரம் ஆனந்த ருத்ரேசம். | |
---|---|
பெயர் | |
பெயர்: | காஞ்சிபுரம் ஆனந்த ருத்ரேசம். |
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஆனந்த ருத்ரேஸ்வரர். |
காஞ்சிபுரம் மகா ஆனந்த ருத்ரேசர் கோயில் (ஆனந்த ருத்ரேசம்) என்று அறியப்படும் இக்கோயில் காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் இறைவன் ருத்ரேசரின் மீது சிவஞான யோகிகள் பாடிய நூல் கச்சிஆனந்தருத்திரேசர் பதிகமாகும்.[1] கவிராட்சசர் கச்சியப்ப முனிவர் இத்தல இறைவன் மீது வண்டுவிடு தூது, ஆனந்த ருத்திரேசர் கழிநெடில், ஆனந்த ருத்திரேசர் பதிற்றுப்பத்தந்தாதி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
தல வரலாறு - வரலாற்று சுருக்கம்
- இக்கோயில் காஞ்சி சிவக்கொயில்களில் ஒன்றாகும்.
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்படவில்லை. ஆனால் காஞ்சிபுராண சுருக்கம் என அழைக்கப்படும் வண்டுவிடு தூது இத்தல இறைவன் மீது பாடப்பட்டது.
- நூற்றுபதினென் ருத்திரர்களுள் முதல்வரான ஆனந்த ருத்திரர் வழிபட்டு பேறு பெற்ற தலம்.இவ்விறைவர் ஆனந்த ருத்ரேசர் எனும் திருமூர்த்தியாவார்.
- மூலவர் சிவலிங்க மூர்த்தம்.
- இக்கோயிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், வீரபாகு, பைரவர் முதலிய சந்நிதிகளும் உள்ளன. சனி பகவானின் தனி சன்னதியில் அருள்பாலிப்பது இக்கோவிலின் மற்றொரு சிறப்பு.
அமைவிடம்
இந்தியாவின் தென்கடை மாநிலமான தமிழ்நாட்டின் வடக்கோடி மாவட்டங்களில் ஒன்றான மாவட்டத்தின் தலைநகரான சிவகாஞ்சி என்றழைக்கப்படும் பெரிய காஞ்சிபுரத்தின் மேற்கு பிராந்தியமான பிள்ளையார் பாளையம் எனும் பகுதியில் சேர்மேன் சாமிநாத முதலியார் வீதியில் இக்கோயில் அமைந்துள்ளது. இது, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து மேற்கே 1½ கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]
மேற்கோள்கள்
- ↑ "சிவஞான யோகிகள் அருளிய பிரபந்தத் திரட்டு - பாகம் 5: 5.2 கச்சிஆனந்தருத்திரேசர் பதிகம்". Archived from the original on 2016-08-08. பார்க்கப்பட்ட நாள் 2016-02-08.
- ↑ "shaivam.org | காஞ்சி சிவத் தலங்கள்". Archived from the original on 2016-08-07. பார்க்கப்பட்ட நாள் 2016-02-06.