காஞ்சிபுரம் தேவசேனாபதீசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
காஞ்சிபுரம் தேவசேனாபதீசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் தேவசேனாபதீசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:தேவசேனாபதீஸ்வரர்.

காஞ்சிபுரம் தேவசேனாபதீசுவரர் கோயில் (தேவசேனாபதீசம் (குமர கோட்டம்) என்றழைக்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மேலும், காஞ்சி குமரக் கோட்டத்தினுள் (ஈசுவரர்) கிழக்கு பார்த்த சன்னதியாக உள்ள இக்கோயில் குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

இறைவர், வழிபட்டோர்

  • இறைவர்: தேவசேனாபதீஸ்வரர்.
  • வழிபட்டோர்: முருகன்.

தல வரலாறு

முருகக் கடவுள் - பிரணவத்திற்கு பொருள் தெரியாத பிரம்மனை சிறையிலடைத்துவிட்டு, அவன் தொழிலை தான் மேற்கொண்டார். இறைவனின் ஆணைப்படி பிரம்மனை விடுதலை செய்த முருகன், தன் தந்தையாகிய சிவபெருமானின் கட்டளையை முதற்கண் மறுத்தமையால், பரிகாரமாக காஞ்சிக்கு வந்து, தான் தேவசேனாபதியாதலின், தேவசேனாபதீசுவரர் என்ற பெயரில் சிவலிங்கம் தாபித்து தவத்தை மேற்கொண்டார். இதுவே "தேவசேனாபதீசம்" எனப்படுகிறது.[2]

அமைவிடம்

இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் நடுப் பகுதியான மேற்கு ராச வீதியில் உள்ள காஞ்சி சுப்பிரமணியர் கோயிலின் (குமரக் கோட்டத்தின்) அகத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ கிலோமீட்டர் தொலைவிலுள்ள காஞ்சி கச்சபேசத்தின் வடக்கில் சிறிது தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.[3]

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. projectmadurai.org | காஞ்சிப் புராணம் | 56. குமரேகாட்டப் படலம் (1787-1831) | 1792 பிரமன் சிைறப்படல்
  2. tamilvu.org | குமரகோட்டப் படலம் | பிரமன் சிறைப்படல்| பக்கம்: 529
  3. "shaivam.org | தேவசேனாபதீசம் (குமர கோட்டம்)". Archived from the original on 2018-02-06. பார்க்கப்பட்ட நாள் 2016-04-04.

புற இணைப்புகள்