காஞ்சிபுரம் இராமேசுவரர், இலட்சுமீசுவரர் கோயில்
காஞ்சிபுரம் இராமேசம் / இலட்சுமீசம். | |
---|---|
பெயர் | |
பெயர்: | காஞ்சிபுரம் இராமேசம் / இலட்சுமீசம். |
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | இராமேஸ்வரர், இலட்சுமீஸ்வரர். |
காஞ்சிபுரம் இராமேசுவரர், இலட்சுமீசுவரர் கோயில் (இராமேசம் - இலட்சுமீசம்) என்றழைக்கப் பெற்ற இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். இது, சர்வ தீர்த்தம் (குளத்தின்) தெங்கரையில் தாபிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]
இறைவர், வழிபட்டோர்
தல வரலாறு
இராமர் வழிபட்டதாக சொல்லப்படுவது இராமேசம் கோயில் என்றும், இலட்சுமி வழிபட்டதாக சொல்லப்படுவது லட்சுமீசம் என்றும் வழங்குகிறது.[2]
தல பதிகம்
- பாடல்: (1) (இராமேச்சரம் - பரமாநந்த மண்டபம்)
- உருவமென் கமலம் பூத்த உயர்சிவ கங்கைத் தென்பால்
- திருவிரா மேச்ச ரத்துச் சிவபிரான் திருமுன் னாக
- இருவினைப் பிறவிக் கஞ்சி எய்தினோர்க் குறுபே ரின்பம்
- மருவுறும் பரமா நந்த மண்டபம் ஒன்று மாதோ.
- பொழிப்புரை: (1)
- வடிவுடைய மெல்லிய தாமரை மலர்கள் கெழுமிய உயர்ந்த சிவ
- கங்கையின் தென் திசையில் உள்ள திருவிராமேச்சரத்தில் சிவபிரான்
- திருமுன்னாக இருவகையாய வினையால்வரும் பிறவியை அஞ்சி
- அடைந்தவர்க்கு உறுகின்ற பேரின்பம் பொருந்தும் பரமானந்த மண்டபம்
- ஒன்று;
- பாடல்: (2)
- மண்டபம் இனைய மூன்றும் வைகறை எழுந்து நேசங்
- கொண்டுளம் நினையப் பெற்றோர் உணர்வெலாங் கொள்ளை கொண்ட
- பண்டைவல் வினையின் வீறும் பற்றிய மலங்கள் மூன்றும்
- விண்டுபே ரின்ப வெள்ள வேலையில் திளைத்து வாழ்வார்.
- பொழிப்புரை: (2)
- இம் மூன்று மண்டபங்களையும் வைகறையில் எழுந்து விருப்பம்
- வைத்து உள்ளத்தில் எண்ணப் பெற்றோர் தம் அறிவு முழுதினையும்
- அகப்படுத்த பழைய வலிய வினையினுடைய செருக்கையும், பற்றிய மலங்கள்
- மூன்றனையும் நீங்கிப் பேரின்பக் கடலில் துளைந்து வாழ்வார்.[3]
அமைவிடம்
தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் வேலூர் செல்லும் சாலையிலுள்ள சர்வதீர்த்தத்தின் (குளத்தின்) தென்கரையில் மல்லிகார்சூனர் கோயிலையடுத்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் தென்மேற்கு திசையில், சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. மற்றும் காஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து, காஞ்சி கச்சபேசுவரர் கோயிலின் வழியாக காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் இந்த மண்டபத்தை அடையலாம்.[4]
மேற்கோள்கள்
- ↑ projectmadurai.org | காஞ்சிப் புராணம் | 46. சர்வ தீர்த்தப்படலம் (1619 - 1644) | 1643 இராேமச்சரம் - பரமாநந்த மண்டபம்
- ↑ "shaivam.org | காஞ்சி சிவத்தலங்கள் | இராமேசம் - இலட்சுமீசம்". Archived from the original on 2015-03-23. பார்க்கப்பட்ட நாள் 2016-03-25.
- ↑ tamilvu.org | காஞ்சிப் புராணம் | சருவதீர்த்தப் படலம் | பாடல் 25 - 26| பக்கம்: 486
- ↑ "shaivam.org | சர்வ தீர்த்தக் இராமேசம் - இலட்சுமீசம்". Archived from the original on 2015-03-23. பார்க்கப்பட்ட நாள் 2016-03-25.