ஐசரி வேலன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஐசரி ஆர். வேலன்
பதவியில்
15 மே 1977 – 27 செப்டம்பர் 1980
தொகுதி இராமகிருஷ்ணன் நகர்
தனிநபர் தகவல்
பிறப்பு தெற்கு ஆர்க்காடு, சென்னை மாகாணம்.
இறப்பு சென்னை
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) புஷ்பா (இ. 14 சூலை 2022)[1]
பிள்ளைகள் 3
தொழில் நடிகர், மேடை நடிகர், அரசியல்வாதி, சமூக சேவகர்

ஐசரி வேலன் (Isari Velan) தமிழ்நாட்டு திரைப்பட நடிகர், அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

அரசியல் வாழ்க்கை

ஐசரி வேலன் 1970 ஆம் ஆண்டில் எங்க மாமா என்ற சிவாஜி படம் மூலம் அறிமுகமானாலும் எம்ஜிஆருடன் அதிக படங்களில் நடித்திருக்கிறார். எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தபோது கட்சியில் இணைந்து தீவிர விசுவாசியாக செயற்பட்டார். இதனால், 1977 ஆம் ஆண்டு அதிமுக சந்தித்த முதல் பொதுத் தேர்தலிலேயே ஐசரிவேலனுக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியிலிருந்து 1977 தேர்தலில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]

தமிழ்த் திரைப்படங்கள்

ஐசரி வேலன் தமிழ்த் திரைப்படங்களில், பெரும்பாலும் எம்.ஜி.யார் நடித்த திரைப்படங்களில், துணை வேடங்களில் நடித்துள்ளார்.[3]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1970 எங்க மாமா
1970 சிநேகிதி
1971 ரிக்சாக்காரன்
1972 நான் ஏன் பிறந்தேன்
1972 இதய வீணை
1973 உலகம் சுற்றும் வாலிபன்
1973 வீட்டுக்கு வந்த மருமகள்
1974 நேற்று இன்று நாளை
1974 சிரித்து வாழ வேண்டும்
1975 இதயக்கனி
1975 பல்லாண்டு வாழ்க
1975 ஹோட்டல் சொர்க்கம்
1976 உழைக்கும் கரங்கள்
1976 நீதிக்கு தலைவணங்கு
1977 நவரத்தினம்
1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
1978 மாங்குடி மைனர்
1979 கந்தர் அலங்காரம்
1979 மல்லிகை மேனி
1979 நான் நன்றி சொல்வேன்
1979 பாப்பாத்தி
1979 ஸ்ரீ ஸ்ரீ மாமா
1979 ஸ்ரீராம ஜெயம்
1979 அன்பின் அலைகள்
1979 அலங்காரி
1980 ஒத்தையடி பாதையிலே
1981 கன்னித்தீவு
1981 சொர்க்கத்தின் திறப்பு விழா
1981 இராணுவ வீரன்
1982 சிம்லா ஸ்பெஷல்
1982 காற்றுக்கென்ன வேலி
1982 தனிக்காட்டு ராஜா
1982 அஸ்திவாரம்
1983 சட்டம் சிரிக்கிறது
1983 பிரம்மச்சாரிகள்
1983 தங்க மகன்
1984 இது எங்க பூமி
1985 அடுத்தாத்து ஆல்பர்ட்
1985 பகல் நிலவு முதலியார்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஐசரி_வேலன்&oldid=21588" இருந்து மீள்விக்கப்பட்டது