இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1924
| ||
இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு 34 இடங்கள் | ||
---|---|---|
|
இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கான நான்காவது தேர்தல் (election to the Legislative Council of Ceylon) 1924 ஆம் ஆண்டில் இடம்பெற்றது.
பின்னணி
இலங்கையின் சட்டவாக்கப் பேரவை 1833 ஆம் ஆண்டில் கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கேற்ப அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிருந்த்தானிய ஆளுநர் உட்பட 16 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். இவர்களில் இலங்கை நிறைவேற்றுப் பேரவையின் ஐவர், நான்கு அரசாங்க அதிகாரிகள், மேலும் ஆறு பேர் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்கள் (மூன்று ஐரோப்பியர், ஒரு சிங்களவர், ஒரு தமிழர், ஒரு பரங்கியர்) நியமிக்கப்பட்டனர்.
1889 இல் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரிக்கப்பட்டது (மூன்று ஐரோப்பியர், ஒரு கீழைத்தேய சிங்களவர், ஒரு கண்டியச் சிங்களவர், ஒரு தமிழர், ஒரு சோனகர், ஒரு பரங்கியர்)[1]. 1910 ஆம் ஆண்டில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டது. இவர்களில் 11 பேர் அதிகாரபூர்வ உறுப்பினர்களும் 10 அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களும் (இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பியர், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பரங்கியர், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கைக் கல்விமான், இரண்டு நியமனம் பெற்ற கீழைத்தேய சிங்களவர், இரண்டு நியமனம் பெற்ற தமிழர், ஒரு நியமனம் பெற்ற கண்டிச் சிங்களவர், ஒரு நியமனம் பெற்ற சோனகர்) ஆவர்[2] மூவாயிரத்துக்கும் குறைவான இலங்கையர்கள் நான்கு அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களுக்காக வாக்களிக்கத் தகுதி பெற்றனர்[2].
1920 ஆம் ஆண்டில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 37 (14 பேர் அதிகாரபூர்வ உறுப்பினர்கள், 23 பேர் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்கள்) ஆகவும்[3], 1923 ஆம் ஆண்டில் 49 ஆகவும் (12 + 37)[3][4] அதிகரிக்கப்பட்டது.
ஆகத்து 1924 இல் சட்டவாக்கப் பேரவை கலைக்கப்பட்டு தேர்தல்கள் இடம்பெற்றன[4]. 34 உறுப்பினர்களுக்காக 205,000 இலங்கையர்கள் (4%) வாக்களிக்கத் தகுதி பெற்றனர்[4]. புதிய சட்டவாக்கப் பேரவை 1924 அக்டோபர் 15 இல் கூடியது[4].
தேர்தெடுக்கப்பட்ட அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்கள்
தொகுதி வாரியாக தேர்தெடுக்கப்பட்ட சில உறுப்பினர்கள்:
- கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு - ஈ. ஆர். தம்பிமுத்து
- கிழக்கு மாகாணம் திருகோணமலை - எம். எம். சுப்பிரமணியம்
- வடக்கு மாகாணம் மத்தி - சு. இராசரத்தினம்
- வடக்கு மாகாணம் கிழக்கு - ரி. எம். சபாரத்தினம்
- வடக்கு மாகாணம் வடக்கு (வலிகாமம் வடக்கு) - சேர் பொன்னம்பலம் இராமநாதன்
- வடக்கு மாகாணம் தெற்கு - ஆறுமுகம் கனகரத்தினம்
- வடக்கு மாகாணம் மேற்கு - வைத்திலிங்கம் துரைசுவாமி
- தெற்கு மாகாணம் மத்தி (மாத்தறை) - எஃப். ஏ. ஒபயசேகர[5]
- தெற்கு மாகாணம் கிழக்கு (அம்பாந்தோட்டை) - வி. எஸ். டி எஸ். விக்கிரமநாயக்க[1]
- தெற்கு மாகாணம் மேற்கு (காலி) - சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, (4,177 வாக்குகள்).[6]
- மேற்கு மாகாணம் நீர்கொழும்பு - டி. எஸ். சேனநாயக்க, போட்டியின்றித் தெரிவு.[7]
- மேற்கு மாகாணம் களுத்துறை - ஈ. டபிள்யூ. பெரேரா.[8]
- இலங்கைத் தமிழர் (மேற்கு மாகாணம்) - அருணாசலம் மகாதேவா
- இந்தியத் தமிழர் 1 - ஐ. எக்ஸ். பெரைரா[4]
- இந்தியத் தமிழர் 2 - கோ. நடேசையர்[4]
- சோனகர் 1 - முகம்மது மாக்கான் மாக்கார்[4]
- சோனகர் 2 - என். எச். எம். அப்துல் காதர்.[4]
- சோனகர் 3 - டி. பி. ஜாயா.[4]
(இது முழுமையான பட்டியல் அல்ல)
நியமிக்கப்பட்ட அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்கள்
ஆளுநரால் நியமனம் பெற்ற உறுப்பினர்கள்:
- கே. பாலசிங்கம்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Wijesinghe, Sam (25 டிசம்பர் 2005). "People and State Power". சண்டே ஒப்சேர்வர் இம் மூலத்தில் இருந்து 2011-06-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110605111144/http://www.sundayobserver.lk/2005/12/25/fea104.html. பார்த்த நாள்: 7 பெப்ரவரி 2010.
- ↑ 2.0 2.1 கே. ரி. ராஜசிங்கம் (18 ஆகத்து 2001). "Chapter 2: Beginning of British Rule". SRI LANKA: THE UNTOLD STORY. ஏசியா டைம்ஸ். Archived from the original on 2009-02-17. பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2010.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ 3.0 3.1 K T Rajasingham (1 செப்டம்பர் 2001). "Chapter 4: The Ceylon National Congress and its intrigues". SRI LANKA: THE UNTOLD STORY. Asia Times. Archived from the original on 2001-09-09. பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2010.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 4.8 K T Rajasingham (8 செப்டம்பர் 2001). "Chapter 5: Political polarization on communal lines". SRI LANKA: THE UNTOLD STORY. Asia Times. Archived from the original on 25 அக்டோபர் 2001. பார்க்கப்பட்ட நாள் 7 February 2010.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Wijesinha, Sam (8 நவம்பர் 1998). "Reflections on DA Rajapakse". சண்டே டைம்ஸ். http://sundaytimes.lk/981108/plus10.html. பார்த்த நாள்: 7 February 2010.
- ↑ "How C W W Kannangara resisted the Bastions of Reaction". டெய்லி நியூஸ். 15 October 2004 இம் மூலத்தில் இருந்து 25 ஆகஸ்ட் 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050825141141/http://www.dailynews.lk/2004/10/15/fea01.html. பார்த்த நாள்: 7 February 2010.
- ↑ "First results". சண்டே டைம்ஸ். 19 August 2007. http://sundaytimes.lk/070819/FunDay/heritage.html. பார்த்த நாள்: 7 பெப்ரவரி 2010.
- ↑ "Vital document hidden in a shoe". சண்டே டைம்ஸ். 25 January 2004. http://sundaytimes.lk/040125/funday/2.html. பார்த்த நாள்: 7 February 2010.