ம. மு. சுப்பிரமணியம்
எம். எம். சுப்பிரமணியம் M. M. Subramaniam இலங்கை சட்டப்பேரவை, அரசாங்க சபை உறுப்பினர் | |
---|---|
திருகோணமலைக்கான சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1924–1930 | |
திருகோணமலை-மட்டக்களப்பு அரசாங்க சபை உறுப்பினர் | |
பதவியில் 1931–1936 | |
பின்வந்தவர் | இ. இரா. தம்பிமுத்து |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | அண். 1870 |
இறப்பு | 1945 |
பிள்ளைகள் | அழகராஜா, தர்மராஜா, மாணிக்கராஜா |
தொழில் | வழக்கறிஞர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
மயில்வாகனம் முதலியார் சுப்பிரமணியம் (Mylvaganam Mudaliyar Subramaniam, (1870 – 1945) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், இலங்கை சட்டவாக்கப் பேரவை, இலங்கை அரசாங்க சபை உறுப்பினரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
சுப்பிரமணியம் ஏறத்தாழ 1870 அளவில் பிறந்தார்.[1] இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் சம்பத்தீவு என்ற இடத்தில் தென்னந்தோட்டங்களுக்கு உரிமையாளராகவிருந்த மயில்வாகனம் முதலியாருக்குப் பிறந்தார்.[1] சுப்பிரமணியத்திற்கு மூன்று மகன்கள்: அழகராஜா, தர்மராஜா, மாணிக்கராஜா ஆகியோர் ஆவர்.[1]
பணி
சுப்பிரமணியம் அரச வழக்கறிஞராகப் பணியாற்றியவர். திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபையில் உறுப்பினராக இருந்தவர்.[1] 1924 இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குத் தெரிவானார்.[1][2][3] 1931 இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் திருகோணமலை-மட்டக்களப்புத் தொகுதியில் போட்டியிட்டு இலங்கை அரசாங்க சபைக்குத் தெரிவானார்.[1][4] 1931 சூலையில் புதிய அரசாங்க சபை கூடிய போது இவர் குழுக்களுக்கான துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] 1936 அரசாங்க சபைத் தேர்தலில் திருகோணமலை-மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிட்டு ஈ. ஆர். தம்பிமுத்துவிடம் 7,429 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.[6]
சுப்பிரமணியம் 1945 இல் காலமானார்.[1] இவரது மகன் எஸ். எம். மாணிக்கராசா திருகோணமலைத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
தேர்தல் வரலாறு
தேர்தல் | தொகுதி | கட்சி | வாக்குகள் | முடிவு |
---|---|---|---|---|
1924 சட்டவாக்கப் பேரவை | திருகோணமலை | தெரிவு | ||
1931 அரசாங்க சபை | திருகோணமலை-மட்டக்களப்பு | தெரிவு | ||
1936 அரசாங்க சபை | திருகோணமலை-மட்டக்களப்பு | 4,348 வெற்றி பெற்றவர்: ஈ. ஆர். தம்பிமுத்து[6] |
தோல்வி |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon (PDF). pp. 212–213.
- ↑ Rajasingham, K. T. "Chapter 5: Political polarization on communal lines". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2001-10-25. பார்க்கப்பட்ட நாள் 2020-03-20.
- ↑ Sabaratnam, T. T. "Chapter 19: The Birth and Death of the Jaffna Youth Congress". Sri Lankan Tamil Struggle.
- ↑ Rajasingham, K. T. "Chapter 7: State Councils - elections and boycotts". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2009-06-24. பார்க்கப்பட்ட நாள் 2020-03-20.
- ↑ "First State Council begins". சண்டே டைம்சு]]. 8 July 2007. http://www.sundaytimes.lk/070708/FunDay/heritage.html.
- ↑ 6.0 6.1 "இலங்கைப் பொதுத்தேர்தல் பெறுபேறு". ஈழகேசரி. 1 மார்ச் 1936.