இ. இரா. தம்பிமுத்து
ஈ. ஆர். தம்பிமுத்து E. R. Tambimuttu இலங்கை சட்டப்பேரவை, அரசாங்க சபை உறுப்பினர் | |
---|---|
கிழக்குமாகாணத்திற்கான சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1921–1924 | |
மட்டக்களப்பு சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1924–1930 | |
திருகோணமலை-மட்டக்களப்பு அரசாங்க சபை உறுப்பினர் | |
பதவியில் 1936–1943 | |
முன்னவர் | எம். எம். சுப்பிரமணியம் |
பின்வந்தவர் | வ. நல்லையா |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | அண். 1890 |
வாழ்க்கை துணைவர்(கள்) | லோரா சித்தி |
பிள்ளைகள் | லோரெல் |
தொழில் | வழக்கறிஞர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
இம்மானுவேல் இராசநாயகம் தம்பிமுத்து (Emmanuel Rasanayagam Tambimuttu, பிறப்பு: ~1890) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், இலங்கை சட்டவாக்கப் பேரவை, இலங்கை அரசாங்க சபை உறுப்பினரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
தம்பிமுத்து 1890களில் பிறந்தவர்.[1] இவரது முன்னோர்கள் வட மாகாணம் நல்லூரைச் சேர்ந்தவர்கள். பின்னர் மட்டக்களப்பில் குடியேறினார்.[1]
பணி
தம்பிமுத்து ஒரு வழக்கறிஞர் ஆவார்.[1] இவர் 1921 சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் கிழக்கு மாகாணத் தொகுதியில் போட்டியின்றி இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டார்.[1][2] 1924 சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் மட்டக்களப்புத் தொகுதியில் போட்ட்டியிட்டு சட்டவாகக்ப் பேரவைக்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.[1][2][3][4]
1931 அரசாங்க சபைத் தேர்தலைப் புறக்கணிக்க யாழ்ப்பாணம் இளைஞர் பேரவை கேட்டுக் கொண்டதற்கிணங்க தம்பிமுத்து இத்தேர்தலில் போட்டியிடவில்லை.[5] 1936 அரசாங்க சபைத் தேர்தலில் திருகோணமலை-மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிட்டு இலங்கை அரசாங்க சபைக்குத் தெரிவானார்.[1][6] இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, 1943 சூன் மாதத்தில் இவர் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் அவர் தனது பதவியைத் துறக்க மறுத்ததால், அரசாங்க சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.[6]
தேர்தல் வரலாறு
தேர்தல் | தொகுதி | கட்சி | வாக்குகள் | முடிவு |
---|---|---|---|---|
1921 சட்டவாக்கப் பேரவை | கிழக்கு மாகாணம் | போட்டியில்லை | தெரிவு | |
1924 சட்டவாக்கப் பேரவை | மட்டக்களப்பு | தெரிவு | ||
1936 அரசாங்க சபை | திருகோணமலை-மட்டக்களப்பு | 11,775 கூடுதல்: 7,429 எதிர்த்துப் போட்டியிட்டவர்: ம. மு. சுப்பிரமணியம்[7] |
தெரிவு |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon (PDF). p. 218.
- ↑ 2.0 2.1 Hennayake, Shantha K. (5 April 2004). "Geography is thicker than blood: Prabhakaran (North) - Karuna (East) feud in context". தி ஐலண்டு (இலங்கை) இம் மூலத்தில் இருந்து 17 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617045838/http://www.island.lk/2004/04/05/featur03.html.
- ↑ Rajasingham, K. T. "Chapter 5: Political polarization on communal lines". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2001-10-25. பார்க்கப்பட்ட நாள் 2020-03-20.
- ↑ Sabaratnam, T. T. "Chapter 19: The Birth and Death of the Jaffna Youth Congress". Sri Lankan Tamil Struggle.
- ↑ Rajasingham, K. T. "Chapter 7: State Councils - elections and boycotts". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2009-06-24. பார்க்கப்பட்ட நாள் 2020-03-20.
- ↑ 6.0 6.1 Rajasingham, K. T. "Chapter 8: Pan Sinhalese board of ministers - A Sinhalese ploy". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2001-12-24. பார்க்கப்பட்ட நாள் 2020-03-20.
- ↑ "இலங்கைப் பொதுத்தேர்தல் பெறுபேறு". ஈழகேசரி. 1 மார்ச் 1936.