சு. ம. மாணிக்கராஜா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எஸ். எம். மாணிக்கராஜா
S. M. Manickarajah
S. M. Manickarasa MP.JPG
இலங்கை நாடாளுமன்றம்
for திருகோணமலை
பதவியில்
1963–1970
முன்னையவர்என். ஆர். இராசவரோதயம்
பின்னவர்பா. நேமிநாதன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1908-05-15)15 மே 1908
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பெற்றோர்ம. மு. சுப்பிரமணியம்
இனம்இலங்கைத் தமிழர்

சுப்பிரமணியன் மயில்வாகனம் மாணிக்கராஜா (Supramanian Mylvaganam Manickarajah, மே 15, 1908 - ) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்

மாணிக்கராஜா 1908 மே 15 இல் முன்னாள் அரசாங்க சபை உறுப்பினர் எம். எம். சுப்பிரமணியத்திற்குப் பிறந்தவர்.[1] திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் என். ஆர். இராசவரோதயத்தின் இறப்பை அடுத்து 1963 நவம்பரில் இடம்பெற்ற இடைத்தேர்தலில் இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு அல்விஸ் என்பவரை 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று நாடாளுமன்றம் சென்றார்.[2] இவர் 1965 தேர்தலில் மீண்டும் தெரிவானார்.[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சு._ம._மாணிக்கராஜா&oldid=24350" இருந்து மீள்விக்கப்பட்டது