என். ஆர். இராசவரோதயம்
என். ஆர். இராசவரோதயம் N. R. Rajavarothiam | |
|---|---|
| இலங்கை நாடாளுமன்றம் திருகோணமலை | |
| பதவியில் 1952–1963 | |
| முன்னையவர் | எஸ். சிவபாலன், அஇதகா |
| பின்னவர் | எஸ், எம். மாணிக்கராசா, இதக |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 8 அக்டோபர் 1908 |
| இறப்பு | 27 August 1963 (aged 54) |
| அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
| முன்னாள் கல்லூரி | புனித யோசப் கல்லூரி ஆனந்தா கல்லூரி கொழும்பு பல்கலைக்கழகம் |
| இனம் | இலங்கைத் தமிழர் |
நவரத்தினசிங்கம் இரத்தினவரோதயம் இராசவரோதயம் (Navaratnasingam Ratnavarothiam Rajavarothiam, அக்டோபர் 8, 1908 - ஆகத்து 27, 1963) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை
இராசவரோதயம் கிழக்கிலங்கையில் திருகோணமலையில் நவரத்தினசிங்கம் என்பவருக்குப் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனித யோசேப்பு கல்லூரியிலும், பின்னர் கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் கற்றார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றார்.
அரசியலில்
இராசவரோதயம் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து அதன் தீவிர உறுப்பினரானார். கட்சியின் உப-தலைவராக இருந்தவர். 1952 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழ்க் காங்கிரசு வேட்பாளர் எஸ். சிவபாலனுடன் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[1]. இத்தேர்தலில் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் இருவர் மட்டுமே. இவர் 1956, மார்ச் 1960, சூலை 1960 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3][4]
மேற்கோள்கள்
- Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 155.
- ↑ "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2013-03-25.
- ↑ "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2013-03-25.
- ↑ "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-12. Retrieved 2013-03-25.
- ↑ "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2013-03-25.
வெளி இணைப்புகள்
- Panagoda days[தொடர்பிழந்த இணைப்பு], Memoirs of N.R.Rajavarothiam (நூலகம் திட்டம்)
- 1908 பிறப்புகள்
- 1963 இறப்புகள்
- இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள்
- திருகோணமலை மாவட்ட நபர்கள்
- இலங்கையின் 2வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 3வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 4வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 5வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கை இந்துக்கள்
- இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்