ஆறுமுகம் கனகரத்தினம்
ஆ. கனகரத்தினம் A. Canagaratnam | |
---|---|
இலங்கை சட்டவாக்கப் பேரவையின் வட மாகாணத்தின் தெற்குத் தொகுதியின் உறுப்பினர் | |
பதவியில் 1924–1928 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1871 |
இறப்பு | 1929 (அகவை 57–58) |
பெற்றோர் | விசுவநாதன் ஆறுமுகம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி உவெசுலி கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
ஆறுமுகம் கனகரத்தினம் (Arumugam Canagaratnam (1871 – 1929)[1] இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினரும் ஆவார்
வாழ்க்கைச் சுருக்கம்
கனகரத்தினம் யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த விசுவநாதன் ஆறுமுகம் என்பவருக்கு 1871 ஆம் ஆண்டில் பிறந்தார்.[2] இவர் வழக்கறிஞர் ஏ. கதிரவேலு, மருத்துவர் ஏ. பொன்னம்பலம் ஆகியோருடன் பிறந்தவர்.[3] யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, மற்றும் கொழும்பு உவெசுலி கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார்.[2] கல்கத்தாவில் உயர் கல்வி கற்றார்.[2],
இலங்கை அரசின் அமைச்சராக இருந்த கதிரவேலு சிற்றம்பலம் கனகரத்தினத்தின் மருமகன் ஆவார்.[4]
பணி
உயர் கல்வியை முடித்துக் கொண்ட கனகரத்தினம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[2] 1920களில் கிராமியக் கல்வி அபிவிருத்தி வாரியத்தின் தலைவராகப் பணியாற்றினார்.[2] அத்துடன் 1921 முதல் 1926 வரை யாழ்ப்பாண மாநகரசபைத் தலைவராகவும் இருந்தார்.[2][4] 1924 சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் வட மாகாணத் தெற்குத் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.[2][5]
சமூகப் பணி
இலங்கைப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு இவர் முன்னின்று உழைத்தார். த சிலோன் பேட்ரியட் என்ற ஆங்கிலத் தேசிய வாரப் பத்திரிகை ஒன்றை நடத்தினார்.[2] தனது சொந்த செலவில் யாழ்ப்பாணத்தில் ஸ்டான்லி கல்லூரி என்ற பெயரில் உயர்தரப் பாடசாலை ஒன்றை நிறுவினார். இப்பாடசாலைக்கு அதன் நிறுவனரின் நினைவாக கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் எனப் பின்னர் பெயரிடப்பட்டது.[2][4] இவரது நினைவாக யாழ்ப்பாணத்தின் சாலை ஒன்று கனகரத்தினம் வீதி என்ற பெயருடன் விளங்குகிறது.[2]
மேற்கோள்கள்
- ↑ வைரவிழா மலர்: யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் 1928-1988
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 2.9 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 28.
- ↑ Notes on Jaffna
- ↑ 4.0 4.1 4.2 "Stamp to honour Cathiravelu Sittampalam". டெய்லி நியூஸ். 26 பெப்ரவரி 2004 இம் மூலத்தில் இருந்து 2005-05-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050526121219/http://www.dailynews.lk/2004/02/26/new18.html.
- ↑ Rajasingham, K. T. "Chapter 5: Political polarization on communal lines". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2001-10-25. பார்க்கப்பட்ட நாள் 2014-07-12.