ஆதித்யன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆதித்யன்
ஆதித்யன்.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்டைட்டஸ்
பிறப்புஏப்ரல் 9, 1954
தமிழ்நாடு, தஞ்சாவூர்
இறப்புதிசம்பர் 6, 2017(2017-12-06) (அகவை 63)
ஆந்திரப் பிரதேசம், ஐதராபாத்து
தொழில்(கள்)இசையமைப்பாளர்[1]
இசைத்துறையில்1992–2003

ஆதித்தியன் (இயற்பெயர்: டைட்டஸ், 9 ஏப்ரல், 1954 - 6 டிசம்பர், 2017) என்பவர் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் இவர் தான் இசையமைத்த படங்களிலும், பிற இசையமைப்பாளர்கள் இசையமைப்பிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவர் இந்தியாவிலும், மலேசியாவிலும் பல தமிழ் பாப் & ரீமிக்ஸ் ஆல்பங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார். ஜெயா தொலைக்காட்சியில் இவரது சமையல் நிகழ்ச்சியான 'ஆதித்யன் கிச்சன்' என்ற நிகழ்ச்சியை 8 ஆண்டுகள் நடத்தினார்.[2] இவர் ஒரு ஓவியக் கலைஞராகவும் இருந்தார், இவரது ஓவியங்கள் பல வீட்டுச் சுவர்களை அலங்கரிக்கின்றன. இவர் 2017 திசம்பர் 5 அன்று உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் தன் 63 வயதில் காலமானார்.[3][4]

வாழ்க்கை

ஒலி வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையைத் துவங்கிய இவர், "வெத்தல போட்ட" மற்றும் "சந்திரரே சூரியரே" போன்ற பாடல்கள் இடம்பெற்ற அமரன் (1992) படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். மேலும் இவர் மாமன் மகள், லக்கிமேன், அசுரன், சீவலப்பேரி பாண்டி, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட 30 இக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.[5]

திரைப்படங்கள்

ஆண்டு படம் மொழி குறிப்பு
1992 அமரன் தமிழ்
1992 நாளைய செய்தி தமிழ்
1992 டேவிட் அங்கிள் தமிழ்
1993 மின்மினி பூச்சிகள் தமிழ்
1994 சீவலப்பேரி பாண்டி தமிழ்
1994 சின்னபுள்ள தமிழ்
1995 தொட்டில் குழந்தை தமிழ்
1995 உதவும் கரங்கள் தமிழ்
1995 லக்கி மேன் தமிழ்
1995 அசுரன் தமிழ்
1995 மாமன் மகள் தமிழ்
1996 அருவா வேலு

தமிழ்
1996 கிழக்கு முகம்

தமிழ்
1996 துறைமுகம்

தமிழ்
1997 மை இந்தியா

தமிழ்
1997 ரோஜா மலரே

தமிழ்
1998 கலர் கனவுகள்

தமிழ்
1998 ஆசைத் தம்பி

தமிழ்
1999 சிவன்

தமிழ்
1999 காமா

தமிழ்
2000 அதே மனிதன் தமிழ்
2001 சூப்பர் குடும்பம்

தமிழ்
2003 கோவில்பட்டி வீரலட்சுமி

தமிழ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஆதித்யன்&oldid=7906" இருந்து மீள்விக்கப்பட்டது