அர்த்தம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அர்த்தம் (ஆங்கிலம்: Artha; சமஸ்கிருதம்: अर्थ) என்பது இந்திய மெய்யியலில் மனித வாழ்க்கையின் நான்கு குறிக்கோள்களில் ஒன்றாகும்.[1] அர்த்தம் என்ற சொல், சூழலைப் பொறுத்து "பொருள், புரிதல், குறிக்கோள், நோக்கம், சாரம்" என பலவாறு பொருட்படும்.[2] இந்து மத நூல்களில் அர்த்தம் ஒரு பரந்த கருத்தாகும். கருத்தியலின் படி இச்சொல் பல பொருட்களை உள்ளடக்கியது. இவை அனைத்தும் "வாழ்க்கை வழிமுறைகளைக்" குறிப்பதாகும், அதாவது ஒரு நபரை வாழவேண்டிய நிலையில் இருக்க உதவும் செயற்பாடுகளையும் அதற்குத் தேவையான வளங்களையும் குறிக்கின்றன.[3]

அர்த்தம் என்பது தனிநபர், அரசு என இரண்டிற்கும் பொருந்தும் ஒரு கருத்தாகும். ஒரு தனிநபரின் சூழலில், அர்த்தம் என்பது செல்வம், தொழில், வாழ்க்கைக்கான செயற்பாடு, நிதிப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. அர்த்தத்தை முறையாகப் பின்பற்றுவது மனித வாழ்க்கையின் முக்கியமான குறிக்கோளாக இந்து மத மெய்யியலில் கருதப்படுகிறது.[1][4] அரசாங்க மட்டத்தில், அர்த்தம் என்பது சமூக, சட்ட, பொருளாதார மற்றும் உலக விவகாரங்களை உள்ளடக்கியது. முறையான அர்த்தசாஸ்திரம் என்பது ஓர் அரசாங்கத்தின் மிக அவசியமான நோக்கமாகக் கருதப்படுகிறது.[4][5]

இந்து மரபுகளில் அர்த்தம் மனித வாழ்க்கையின் மற்ற மூன்று அம்சங்களும் குறிக்கோள்களுமான தர்மம் (அறம்சார்ந்த, முறையான, நல்லொழுக்க வாழ்க்கை), காமம் (இன்பம், மகிழுணர்வு, நிறையுணர்வு), மோட்சம் (வீடுபேறு, ஞானம்) ஆகியவற்றோடு இணைக்கப்பட்டுள்ளது. ஒன்றோடொன்று இன்றியமையாத இந்நான்கு வாழ்க்கைக் குறிக்கோள்களும் கூட்டாகப் "புருஷார்த்தம்" என்று அழைக்கப்படுகின்றன.[6][7]

பரமை

தரவுகள்

  1. 1.0 1.1 James Lochtefeld (2002), The Illustrated Encyclopedia of Hinduism, Rosen Publishing, New York, ISBN 0-8239-2287-1, pp 55–56
  2. See:
  3. John Koller, Puruṣārtha as Human Aims, Philosophy East and West, Vol. 18, No. 4 (Oct., 1968), pp. 315–319
  4. 4.0 4.1 Bruce Sullivan (1997), Historical Dictionary of Hinduism, ISBN 978-0-8108-3327-2, pp 29–30
  5. Constance Jones and James Ryan (2007), Encyclopedia of Hinduism, ISBN 978-0-8160-5458-9, pp 45
  6. "Artha" in Encyclopædia Britannica, Chicago, 15th edn., 1992, Vol. 1, p. 601.
  7. see:
    • A. Sharma (1982), The Puruṣārthas: a study in Hindu axiology, Michigan State University, ISBN 978-99936-24-31-8, pp 9–12; See review by Frank Whaling in Numen, Vol. 31, 1 (Jul., 1984), pp. 140–142;
    • A. Sharma (1999), The Puruṣārthas: An Axiological Exploration of Hinduism, The Journal of Religious Ethics, Vol. 27, No. 2 (Summer, 1999), pp. 223–256;
    • Chris Bartley (2001), Encyclopedia of Asian Philosophy, Editor: Oliver Learman, ISBN 0-415-17281-0, Routledge, Article on Purushartha, pp 443

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அர்த்தம்&oldid=13950" இருந்து மீள்விக்கப்பட்டது