சாங்கியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சாங்கியம் இந்தியத் தத்துவங்களில் சிறப்பானதும் முன்னோடியான தத்துவம் ஆகும். கடவுள் வெளியே இல்லை உனக்குள்ளே இருக்கிறான் எனும் தத்துவக் கொள்கை. பிரகிருதி (இயற்கை), புருஷன் (அறிவுள்ள பொருள்) ஆகிய இரு பொருட்கள் பற்றி மட்டுமே பேசுகின்ற சடவாத தரிசனமாகும்.

பரம்பொருள் (இறைவன்) குறித்து எதுவும் கூறப்படவில்லை. சாங்கியத்தின் பிரகிருதி எனும் உலகத் தோற்றம் (படைப்பு) குறித்தான கருத்துக்களை மட்டும் அத்வைத வேதாந்திகள் ஏற்றுக்கொள்கின்றனர்.

புருடன் அறிவுள்ள பொருள் என்றும் பிரகிருதி அறிவற்ற சடப்பொருள் என்றும் கூறுகின்றது. உலகமானது முக்குணங்களின் சேர்க்கையினால் உருவானது என்பது இதன் கருத்து. இந்நூலில் தத்துவ விசாரணை அதிகம் உண்டு.

நாம் ஆதியில் பிரகிருதி, பிறகு மகத்துவம், பிறகு அகங்காரம், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், மனம், ஐந்து ஸ்தூல பஞ்சபூதங்கள், ஐந்து சூக்கும பஞ்சபூதங்கள், முக்குணங்கள் இறுதியில் புருடன் எனும் 28 சாங்கியத் தத்துவத்தில் படைப்பு பற்றி விளக்கமாக கூறுகிறது.

மேலும் ”மூலத்திற்கு மூலம் இல்லையாதலால், அதற்கு `அமூலம்` எனப்பெயர்” பஞ்ச அங்க யோகத்தால் ஞானம் தோன்றும். அது சுகத்தின் ஞானம்.

சாங்கியம்

மாறுதல், இயக்கம் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டவர்கள் சாங்கியவாதிகள். தொடக்க கால சாங்கியத்தில் ஆன்மீகத்தின் சாயல் கூட காணப்படவில்லை சாங்கியத் தத்துவத்தின்படி எல்லா மாறுதல்களுக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது பொருள்களின் முதன்மைத் தன்மைதான் என்று பூர்வ சாங்கியர்கள் விளக்கினார்கள்.

“அசித்து பொருள்களான பால் இளம் விலங்குகளுக்கு ஊட்டம் தருவதற்காக இயல்பாக சுரக்கிறது (சுபாவவென இவா). அசித்துப் பொருளான தண்ணீர் இயல்பாக மனிதகுல நன்மைக்காக ஓடுகிறது. அதே போன்று அசித்தாக இருப்பினும் பிரதானமாக - இயல்பில் (திவா வேணனேவா) இயங்குகிறது. இதன் நோக்கம் மனிதனை உயர்ந்த இறுதி நிலைக்கு எடுத்துச் செல்வதாகும் (புருசார்த்த சித்தி)” என்று சாங்கியக் காரிகை கூறுகிறது.

இங்கு முதன்மையானது பொருள். முதலில் உருவான பொருள், பிரகிருதி என்று பொருளின் முதன்மைத் தன்மையை விளக்கும் சாங்கியக் கொள்கை முதன்மை காரணவாதம் எனப்பட்டது. பொருளை முதன்மையானதாகவும், புருசனை இரண்டாவதாகவும் வைத்துக் கொண்டதாலும் முதன்மை காரணவாதம் எனப்பட்டது. மூல சாங்கியத்தில் கூறப்பட்ட ‘புருசன்’ என்பது முதன் முதலான பொருளின், மூலப் பொருளின் பெருக்கம் தான் எனக் கூறப்பட்டது. அதாவது மூலப் பிர கிருதி இயக்கமுற்று பலவாக வளர்ச்சியடைவது புருசன் ஆகும். மேலும் தொடக்க காலத்தில் முதன்மையற்றது, இரண்டாவதானது, உதாசீன மானது என்ற பொருளுடையதாக புருசன் என்ற சொல் இருந்திருக்கிறது. இதனை பிரதானம், பரிணாமம், புருஷ பஹுத்வம் என்று சுருக்கமாக கூறமுடியும். கண்களுக்குப் புலனாகும் உலகத்திற்கு அடிப்படை “பொருள்தான்”; புருசன் உலகத் தோற்றத்திற்கான காரணமல்ல; அது மிகை யானது; அது வெளித்தோற்றம்தான் என்று பூர்வ சாங்கியம் கூறியது.

தன்னிறைவு கொண்ட, இயங்கியல் தன்மை கொண்டதான முதல் நிலைப் பொருளாக அனைத் தையும் கண்ணுற்ற நிலையில், இரண்டாவதாக புருசனை ஏற்கவேண்டிய தேவை சாங்கியவாதி களுக்கு ஏன் ஏற்பட்டது? வேதாந்தவாதிகளை மறுக்கும் நோக்கத்தில் ஏற்பட்டது. வேதாந்தத்தில் உலக நிகழ்ச்சிகள் அனைத்தும் மாயை; புருசன் தான் இறுதியான உண்மை என்று கூறப்பட்டது. இது பிரம்மவாதம்; பிரம்ம காரணவாதம் எனப் பட்டது.

மேலும் இது அனைத்தும் உணர்வின் சாராம்சமே; உலகத் தோற்றத்திற்கான முதற் காரணமாக உள்ளது பிரம்மமே என்றது. எனவே நாம் அசேதன காரணவாதத்திற்கும், சேதன காரண வாதத்திற்கும் உள்ள தத்துவப் போராட்டத்தை சாங்கியத்திற்கும், வேதாந்தத்திற்கும் இடையிலான மோதலில் காண முடிகின்றது. மேலும் முதன்மை யற்ற, இரண்டாந்தரமான புருஷ் பலவாகும் என்று சாங்கியம் கூறியது. அதற்கேற்ப வேதாந்தமும் கருத்துமுதல்வாத நிலையில் விளக்கும்போது சத்துவம், ராஜசம், தாமசம் என்று புருச குணங்களை வகைப்படுத்தி பலவாக்கின.

இந்நிலையில், இறுதியாக புருசனைப் முதன்மைப் படுத்தி புருச சூக்தம் நூலெழுந்தது. வேதாந்தத்தின் வாரிசுகளாக சங்கரரும், மத்துவரும் தோன்றி இதனை வலுப்படுத்தினார்கள். சங்கரர் ‘பிரம்ம ஞானம்’ ஒன்றே என்றார். அவர் மேலே கண்ட சாங்கியக் காரிகையின் கூற்றை பிரம்ம சூத்திரத்தில் எடுத்தாள்வதுடன் புருசனின் உயர்ந்த இறுதி நிலை கட்டத்தை (புருசார்த்தசித்தி) கருத்து முதல் வாதத்துக்குரியதாக மாற்றியமைத்துக் கொள் கின்றார். இவ்வாறு சாங்கியத்தில் புருசனுக்கு இரண்டாவது இடத்தைக் கொடுத்ததன் பலனாக நாளடைவில் புருசன் முதலாவது இடத்துக்கு வந்துவிட்டான். பிற்கால சாங்கியம் வைதீக நிலையினை அடைந்தது.

ஆனால், பொருளை மட்டுமே உண்மை என்று ஏற்கின்ற உலகாயதம், பூதவாதம் ஆகிய கொள்கைகள் இன்றும் அதே நிலையில் அறியப் படுகின்றன என்பது அக்கொள்கைகளின் சிறப் பாகும். மேற்கண்ட சடங்குகள், அவைதீகர்கள், வைதீகத்திற்கு எதிராக நிகழ்த்திய சடங்குகள் என்பதே உண்மையாகும்.

தமிழர் புகழ் உலகமெங்கும் பரவியுள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணம் நமது பாரம்பரிய சடங்குகள் முறைதான் காரணமாகும். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நாம் அனைவரும் நமது வாழ்வில் எவ்வளோவோ விழாக்களையும் சடங்குகளையும் சந்திக்கின்றோம். ஆனால் பெரும்பாலும் அந்த நிகழ்ச்சிகள் மற்றும் சடங்குகள் எதற்கு நடத்தப்படுகிறது என்கிறது இன்றைய சமுதயாதுக்கு நிச்சயம் தெரியாது. வாட நாடுகளில் ஒவ்வொரு திருமணத்திலும் ஐயர் சொல்லும் மந்திரத்திற்கு அர்த்தங்களும் சொல்லுவார். ஆனால் அந்த பாரம்பரியம் நமது மண்ணில் இல்லை. இன்று நாம் தமிழர்களின் நிகழ்ச்சிகள் அதில் இருக்கும் சடங்குகள் பற்றி பார்க்க இருக்கிறோம்.

சாங்கிய தத்துவத்தை நிறுவியவர்

சாங்கிய தத்துவத்தை நிறுவிய கபிலர் எழுதிய நூல் எண்ணியம். அவர் காலம் கிமு ஐந்தாம் நூற்றாண்டுக்கும் முந்தியது. இவரை விஷ்ணுவின் அம்ச அவதாரமாக வைணவர்கள் போற்றுகின்றனர். இந்து மற்றும் பௌத்த மதத்தில் கபிலரின் சாங்கியச் சிந்தனைகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.

சாங்கியம் கூறும் தன்மாத்திரைகள் அல்லது தத்துவங்கள்

படைப்பிற்கு சாங்கியம் 25 தத்துவங்கள் அல்லது தன்மாத்திரைகளைக் காரணமாகக் கூறுகிறது. அவைகள் பின்வருமாறு:[1]

உபநிடதம் மற்றும் பகவத் கீதையில் சாங்கிய சிந்தனைகள்

உலக படைப்பு மற்றும் சீவராசிகளின் தோற்றம் குறித்தான சாங்கிய சிந்தனைகள் உபநிடதம் மற்றும் பகவத் கீதையில் அதிகமாக கையாளப்பட்டுள்ளன. பகவத் கீதையில் சாங்கியம் என்பதற்கு ஞான யோகம் என்று பொருள்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளி இணைப்பு

"https://tamilar.wiki/index.php?title=சாங்கியம்&oldid=132646" இருந்து மீள்விக்கப்பட்டது