வைசியர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வைசியர் எனப்படுவது , பண்டைக்கால வட இந்தியா வில் வழங்கிவந்த வருணம் எனப்பட்ட, படிநிலை இயல்பு கொண்ட நான்கு சமூகப் பிரிவுகளுள் ஒன்றாகும். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் வகுப்புக்களை உள்ளடக்கிய இவ் வருணப் படிநிலை அமைப்பில் வைசியர் மூன்றாம் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். [1]

வணிகரும், கைவினைஞரும் இவ்வகுப்பில் அடங்கியிருந்தனர். இம் முறையில் சூத்திரர் தவிர்ந்த ஏனைய வகுப்பினர் இருபிறப்பாளர் எனப்பட்டனர். இவர்கள் வேதக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான தொடக்கமாகக் கருதப்படும் பூணூல் அணியும் சடங்குக்கு உரிமை கொண்டிருந்தவர்கள் .

சொற்பிறப்பு

வைசியர் என்னும் சொல் வாழ்தல் எனப்பொருள்படும் விஷ் என்னும் சமக்கிருத வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்தது. அண்டம் என்னும் பொருள்தரும் விஷ்வ என்னும் வட இந்திய மொழிகளில் காணும் சொல்லும் இதே அடியைக் கொண்டதே. இலத்தீன் சொல்லான வில்லா (villa), கிரீனிச் (Greenwich) போன்ற இடப் பெயர்களில் காணப்படும் wich ஆகியனவும் இதே போன்ற வேரை உடையனவே.

வைசியர் இயல்புகள் மற்றும் கடமைகள்

  • இயல்புகள் :-வாணிபம் செய்தல், பயிரிடுதல்,ஏமாற்றாமை, கிடைத்த பொருளைக் கொண்டு மன நிறைவு அடைதல்.
  • வைசியர் கடமைகள் :- வைசியர்கள் வாணிபம் நடத்த இயலாத ஆபத்தான காலங்கள் நீங்கும் வரை, நெசவுத் தொழில் செய்தல் மற்றும் வேளாளர்களின் கடமைகளைப் பின் பற்றி, பாய் முடைதல் போன்ற சிறு தொழில்கள் செய்து பிழைத்துக்கொள்ளலாம்.

மேற்கோள்கள்

  1. "India Caste system, ancient India Caste System". Archived from the original on 2017-09-01. பார்க்கப்பட்ட நாள் 2017-09-29.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வைசியர்&oldid=132660" இருந்து மீள்விக்கப்பட்டது