சௌரம்
சூரிய தேவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுவது சௌர சமயமாகும். பேரொளி வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்று கூறுவது இச்சமய கருத்தாகும். ஏனெனில் பஞ்சாங்களில் சூரியனின் சஞ்சாரத்தை வைத்துக் கணக்கிடுவதை சௌரமானம் என்றும் சந்திரனின் நிலையை வைத்துக் கணக்கிடுவதை சாந்திரமானம் என்று கூறுவார்கள். நா.கதிரை வேற்பிள்ளை தமிழ் மொழி அகராதியிலும் சௌரம் என்ற வார்த்தைக்கு சூரியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சூரியனுக்கு உள்ள கோயில்களில் குறிப்பிடத்தகுந்தது கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோயில் தலம் தான் ஆகும். இந்த ஆலயத்தை கட்டுவித்தவர் முதலாம் குலோத்துங்க சோழன் (கிபி 1079-கிபி 1120). சூரியன் "கொடிநிலை" என்ற பெயரால் அழைக்கப்பட்டதாக தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் சூரிய கோயில்களை "உச்சி கிழான் கோட்டன்கள்" என்ற பெயரால் குறிக்கப் பெறுகிறது. உலகில் எழுந்த பழமையான நூலான இருக்கு வேதத்தில் சூரிய வழிபாடு குறிக்கப் பட்டிருக்கிறது. சௌராஷ்டிரம் என்ற பரத நாட்டின் ஐம்பத்தி ஆறு நாடுகளில் ஒன்று சூரிய வழிபாட்டின் அடிப்படையில் எழுந்த பெயராகும்.
சூரியனை குறித்த ஆதித்தியயிருதயம் பாடல் இராமாயணத்தில் உள்ளது. ஈசா வாஸ்ய உபநிடதம் சூரிய வழிபாடு குறித்த வேதத்தின் ஒரு அங்க நூல் ஆகும்.[1][2]
- ↑ A Brief Hostory of Suriyanar Koil, 3rd Edition 1999, Publisher : Thiruvavaduthurai Adeenam
- ↑ Religion in Sangam age. http://www.wthtjsjs.cn/gallery/13-whjj-june%20-5447.pdf/. பார்த்த நாள்: 2021-12-15.