அகம் புறம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அகம் புறம்
இயக்கம்திருமலை
தயாரிப்புதிருமலை
கதைதிருமலை
இசைசுந்தர் சி. பாபு
நடிப்புஷாம்
மீனாட்சி
ஒளிப்பதிவுஒய். என். முரளி
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்டி. கிரியேசன்ஸ்
வெளியீடு10 திசம்பர் 2010 (2010-12-10)
ஓட்டம்124 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அகம் புறம் (Agam Puram) என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இப்படத்தை திருமலை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் எல். ராஜா, ஷாம், மீனாட்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். 2008 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தயாரிப்புப் பணியைத் தொடங்கிய இப்படத்தில் நீண்ட கால தாமதத்துக்குப் பிறகு 10 திசம்பர் 2010 அன்று வெளியானது.[1]

சிறுவயதிலிருந்தே மார்ட்டின் பெர்னாண்டஸ் ( எல். இராஜா ) என்பவரால் வளர்க்கப்பட்ட திரு ( ஷாம் ) அவருக்கு வலது கையாக இருந்துவருகிறார். வயதாகும்போது பெர்னாண்டஸ் தனது சொத்துக்களை திருவிடம் ஒப்படைத்து மறைகிறார். அவர் காலமான பிறகு திரு போதை மருந்து வணிகத்திற்கு தலைமை தாங்குகிறார். அவரது கட்டுப்பாடான வேலை பாணியால் அவரது கூட்டாளர்கள் பெரும் எரிச்சலடைகின்றனர். மேலும் அவரது போட்டியாளர்கள் அவரை தாக்க திட்டமிடுகின்றனர். அவரது சட்டவிரோத வணிகத்தால் அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்த அவர் தனது தொழிலைத் தொடருகிறாரா இல்லையா என்பது படத்தின் எஞ்சிய பகுதியாகும்.

நடிகர்கள்

தயாரிப்பு

அகம் புறம் படத்தின் தயாரிப்புப் பணிகள் 2008 சனவரி இறுதியில் தொடங்கியது, ஷாமுக்கு ஜோடியாக கீரத் நடித்தார். பின்னர் அவருக்கு பதிலாக மீனாட்சி முன்னணி பாத்திரத்தில் நடித்தார். எம். கோபாலகிருஷ்ணன் படத்திற்கு நிதியுதவி செய்தார்.[3] கருப்புசாமி குத்தகைதரர் (2007) படத்தில் நடித்த மீனாட்சி பிறகு முன்னணி நடிகையானார்.[4] அவர் படத்தில் அனாதையாக நடித்தார்.[1] இயக்குனருக்கு உள்ள இலக்கிய ஆர்வத்தின் காரணமாகவும், "அகம் புறம்" என்று பெயரிட்டார். இது ஷாமின் பாத்திரத்தின் இரட்டை பக்கத்துடன் தொடர்புடையது என்பதாலும் இந்த படத்திற்கு அகம் புறம் என்று பெயரிடப்பட்டது. எம். கோபாலகிருஷ்ணன் இப்படத்தை விட்டு வெளியேறிய பிறகு 2010 ஆம் ஆண்டில் ஷாம் படத்தின் தயாரிப்பாளரானார்.[5][6] இருப்பினும், படத்தின் இயக்குனரான திருமலை தனது இந்த படத்தை தனது டி. கிரியேஷன்ஸ் என்ற பதாகையின் கீழ் தயாரித்தார்.[7] இப்படத்தில் ஷாம் ஒரு குண்டர் பாத்திரத்தில் நடித்தார்.[8][9] இப்படம் மலேசியா, ஸ்பெயின் போன்ற நாடுகிறல் படமாக்கப்பட்டது.[10][11] படத்தில் புதுமுகம் மேகா கான் நடித்தார்.[12]

இசை

இப்படத்தின் பின்னணி இசையை சுந்தர் சி. பாபு அமைத்தார்.[1] இப்படத்தில் "ஒண்ணு மணி ரெண்டு மணி" என்ற நாட்டுப்புற பாடல் இடம்பெற்றது.[13]

  • "ஒரே ஒரு ஊரு" - சங்கர் மகாதேவன்
  • "ஒரு மணி ரெண்டு மணி" - பி. பி வெங்கட்
  • "கண்களைப் பறித்திடும்" - கார்த்திக், ரஞ்சினி ஜோஷ்
  • "கண்கள் மோதி" - நரேஷ் ஐயர், விச்சித்ரா
  • "கட்டில் மேல் அடிதடியா" - ரஞ்சித், சயனோரா பிலிப்
  • "அகம் புறம்" கருப் பொருள் இசை - சுந்தர் சி பாபு [14]

குறிப்புகள்

  1. 1.0 1.1 1.2 "I’m passionate for literature: Thirumalai - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/regional/movie-details/news-interviews/Im-passionate-for-literature-Thirumalai/articleshow/5163688.cms. 
  2. "Kasethan Kadavulada is old wine in a new bottle". https://www.newindianexpress.com/cities/bengaluru/2011/sep/10/kasethan-kadavulada-is-old-wine-in-a-new-bottle-289547.html. 
  3. "Shaam gets action oriented with Agam Puram - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Shaam-gets-action-oriented-with-Agam-Puram/articleshow/3109823.cms. 
  4. "Meenakshi seduces the camera" இம் மூலத்தில் இருந்து 2022-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220316100059/https://www.sify.com/movies/meenakshi-seduces-the-camera-imagegallery-kollywood-jktptsdebegsi.html. 
  5. Kumar, S. r Ashok (18 March 2010). "Grill Mill — Shaam". https://www.thehindu.com/features/cinema/Grill-Mill-mdash-Shaam/article16576634.ece. 
  6. "It's action all the way for Shaam - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/Its-action-all-the-way-for-Shaam/articleshow/7087799.cms. 
  7. Kumar, S. R. Ashok (May 5, 2012). "Audio Beat: Nellai Santhippu". https://www.thehindu.com/features/cinema/audio-beat-nellai-santhippu/article3387504.ece. 
  8. "‘I don’t believe in dieting’ - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/I-dont-believe-in-dieting/articleshow/3760430.cms. 
  9. "Shaam strikes back - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Shaam-strikes-back/articleshow/3612367.cms. 
  10. "ஷாம் - மீனாட்சியின் அகம் புறம் : ஸ்பெஷல் ஹைலைட்ஸ் | Agam puram movie special Hi-Lites". 18 November 2009. https://cinema.dinamalar.com/cinema-news/1288/special-report/Agam-puram-movie-special--Hi-Lites.htm. 
  11. "மனசை எக்ஸ்ரே போட்டு பார்க்க முடியாது: இயக்குநர் திருமலை". https://www.dinamani.com/cinema/2010/jul/27/மனசை-எக்ஸ்ரே-போட்டு-பார்க்க-முடியாது-இயக்குநர்-திருமலை-217498.html. 
  12. "தமிழில் நடிக்கும் ஆப்கானிஸ்தான் அழகி - Kungumam Tamil Weekly Magazine". http://www.kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=1843&id1=43&issue=20120709. 
  13. "Sundar on a high". https://www.newindianexpress.com/entertainment/tamil/2009/sep/03/sundar-on-a-high-82921.html. 
  14. Agam Puram (Soundtrack from the Motion Picture) - EP by Sundar C Babu (in English), retrieved 2019-04-19

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அகம்_புறம்&oldid=29858" இருந்து மீள்விக்கப்பட்டது