ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி (Sri Raja Rajeshwari) என்பது 2001 ஆண்டு வெளியான தமிழ் பக்தி திரைப்படம் ஆகும். பாரதி கண்ணன் இயக்கிய இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், ராம்கி, சங்கவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பானுப்ரியா, நிழல்கள் ரவி, வடிவேலு, வினு சக்ரவர்த்தி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். புஷ்பா காந்தசாமி தயாரித்த இப்படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார். படம் 13 ஏப்ரல் 2001 அன்று வெளியிடப்பட்டது.

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
இயக்கம்பாரதி கண்ணன்
தயாரிப்புபுஷ்பா கந்தசாமி
கதைபாரதி கண்ணன்
இசைதேவா[1]
நடிப்புரம்யா கிருஷ்ணன்
ராம்கி (நடிகர்)
சங்கவி (நடிகை)
பானுப்ரியா (நடிகை)
ஒளிப்பதிவுஇராஜராஜன்
கலையகம்கவிதாலயா
வெளியீடு13 ஏப்ரல் 2001
ஓட்டம்143 நிமிடங்கள்
மொழிதமிழ்

நடிகர்கள்

தயாரிப்பு

ராம்கி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்த சில காட்சிகள் தென்காசிக்கு அருகிலுள்ள குற்றாலம் மற்றும் இஞ்சிமேடு சிவாலயம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தபட்டது. பாடலாசிரியர் காளிதாஸ் எழுதிய 165 அம்மன்களின் பெயர்களைக் கொண்ட ஒரு பாடல் படத்தில் உள்ளது. இந்த பக்தி பாடலுக்காக தமிழ்நாட்டின் 108 'அம்மன்' கோயில்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது, நளினி "மருவத்தூர் ஓம் சக்தி" பாடலில் இடம்பெற்றுள்ளார். இந்த பாடலை பிரபல பின்னணி பாடகி சித்ரா பாடினார்.[2]

இசை

இப் படத்திற்கு தேவா இசையமைத்தார். தேவா இசையமைத்த முதல் பக்தி படம் இது. இந்த படத்தின் பாடல் பதிவில் 6 பாடல்கள் உள்ளன. பாடல்களை காளிதாசன், விவேகா, பாரதிபுதிரன், சீர்காழி கோவிந்தராஜன் (ஸ்லோகம்), முரளிகிருஷ்ணன் (ஸ்லோகம்) ஆகியோர் எழுதியுள்ளனர்.[3]

எண். பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்
1 "சிந்தல காரையில்" சித்ரா காளிதாசன்
2 "காதிலே மான்" சீர்காழி கோ. சிவசிதம்பரம் பாரதிபுதிரன்
3 "மருவத்தூர் ஓம் சக்தி" சித்ரா காளிதாசன்
4 "ராசவே என்னை" (இருவர்) அனுராதா ஸ்ரீராம், கிருஷ்ணராஜ் விவேகா
5 "ராசவே என்னை" (பெண்) அனுராதா ஸ்ரீராம்
6 "திருச்சேந்தூர் கடல்" கோவை கமலா, கிருஷ்ணராஜ் காளிதாசன்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஸ்ரீ_ராஜ_ராஜேஸ்வரி&oldid=38108" இருந்து மீள்விக்கப்பட்டது