விருதுநகர் மாவட்டம்

விருதுநகர்
மாவட்டம்
Andal Temple.jpg
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
Virudhunagar in Tamil Nadu (India).svg.png
விருதுநகர் மாவட்டம்:அமைந்துள்ள இடம்
நாடு  இந்தியா
மாநிலம் TamilNadu Logo.svg.png தமிழ்நாடு
தலைநகரம் விருதுநகர்
பகுதி தென் மாவட்டம்
ஆட்சியர்
திரு.வி.பி.ஜெயசீலன்
, இ.ஆ.ப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

-
மாநகராட்சிகள்

நகராட்சிகள்

1

5

வருவாய் கோட்டங்கள் 3
வட்டங்கள் 10
பேரூராட்சிகள் 9
ஊராட்சி ஒன்றியங்கள் 11
ஊராட்சிகள் 450
வருவாய் கிராமங்கள் 600
சட்டமன்றத் தொகுதிகள் 7
மக்களவைத் தொகுதிகள் 1
பரப்பளவு 4241.0 ச.கி.மீ.
மக்கள் தொகை
19,43,309 (2011)
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இசீநே
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
626 xxx
தொலைபேசிக்
குறியீடு

04562
வாகனப் பதிவு
TN-67, TN-84, TN-95
பாலின விகிதம்
1007 /
கல்வியறிவு
80.15%
இணையதளம் virudhunagar

விருதுநகர் மாவட்டம் (Virudhunagar district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் விருதுநகர் ஆகும். இந்த மாவட்டம் 1985 மார்ச் 15-இல் உருவாக்கப்பட்டது.

எல்லைகள்

விருதுநகர் மாவட்டம், முந்தைய இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு அரசு ஆணை (பல்வகை) எண் 347 நாள் 08.03.1985 இல் புதிய மாவட்டமாக உருவானது. இம்மாவட்டம் தமிழ்நாட்டில் தென்பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கில் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களும், தெற்கில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களும், கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டம் மேற்கில் கேரள மாநிலமும் மற்றும் வடமேற்கில் தேனி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் நிர்வாகத் தலைமையிடம் விருதுநகர் நகருக்குள் அமைந்துள்ளது. இம்மாவட்டம் மூன்று வருவாய்க் கோட்டங்களையும், பத்து வட்டங்களையும், முப்பத்தொன்பது குறுவட்டங்(ஃபிர்க்கா)களையும் அறுநூறு வருவாய் கிராமங்களையும் கொண்டு உள்ளது.[1]

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி விருதுநகர் மாவட்டத்தில் 19,42,288 பேர் வசிக்கின்றார்கள். இவர்களில் 9,67,709 பேர் ஆண்கள், 9,74,579 பேர் பெண்கள் ஆவர். விருதுநகர் மாவட்ட மக்கள்தொகையின் பாலின விகிதம் 1007. அதாவது 1000 ஆண்களுக்கு 1007 பெண்கள் இருக்கிறார்கள். விருதுநகர் மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 80.15% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 87.71%, பெண்களின் கல்வியறிவு 72.69% ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.09% விட சற்று கூடியதே. விருதுநகர் மாவட்ட மக்கள் தொகையில் 1,97,134 (10.15%) பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[2]

நிருவாகம் - மாவட்டவருவாய் நிர்வாகம்

 
விருதுநகர் மாவட்டத்தின் வட்டங்கள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர் என மூன்று வருவாய் கோட்டங்களும், 10 வருவாய் வட்டங்களும், 39 உள்வட்டங்களும், 600 வருவாய் கிராமங்களும் கொண்டது.[3][4]

வருவாய் வட்டங்கள்

இம்மாவட்டம் 10 வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:

  1. அருப்புக்கோட்டை வட்டம்
  2. காரியாப்பட்டி வட்டம்
  3. இராஜபாளையம் வட்டம்
  4. சாத்தூர் வட்டம்
  5. சிவகாசி வட்டம்
  6. ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்
  7. திருச்சுழி வட்டம்
  8. விருதுநகர் வட்டம்
  9. வெம்பக்கோட்டை வட்டம்
  10. வத்திராயிருப்பு வட்டம்[5]

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி - சிவகாசி மாநகராட்சி ,

அரசியல் சட்டமன்றத் தொகுதிகள்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி என 7 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது.[7]

விருதுநகர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி சின்னம் பெற்ற வாக்குகள் பதிவான வாக்குகள் %
இராஜபாளையம் சௌ. தங்க பாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகம் உதயசூரியன்
திருவில்லிபுத்தூர் திரு. மான்ராஜ் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்]] 73,485 153739 48
சாத்தூர் ரகுராமன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உதயசூரியன் 88,918 1,52,115 58
சிவகாசி அசோகன் இந்திய தேசிய காங்கிரசு 87,333 1,47,647 65
விருதுநகர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் திமுக 70,441 1,34,546 52
அருப்புக்கோட்டை கே.கே.எஸ்.எஸ்.இராமச்சந்திரன் திமுக 76,546 1,49,640 51
திருச்சுழி தங்கம் தென்னரசு திமுக 81,613 1,48,867 55

விருதுநகர் மாவட்ட மக்களவை உறுப்பினர்கள்

சட்டமன்றத் தொகுதி மக்களவைத் தொகுதி மக்களவை உறுப்பினர் கட்சி சின்னம்
இராஜபாளையம் , திருவில்லிபுத்தூர் தென்காசி மக்களவைத் தொகுதி தனுஷ் எம்.குமார் திமுக உதயசூரியன்
சாத்தூர் , சிவகாசி , விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை விருதுநகர் மக்களவைத் தொகுதி மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் கை சின்னம்
திருச்சுழி இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி நவாஸ் கனி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஏணி

சுற்றுலா

திருச்சுழி திருமேனிநாதர் கோயில் என்ற தேவார பாடல் பெற்ற சிவாலயம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சஞ்சீவி மலை

இராஜபாளையத்திலிருந்து சத்திரப்பட்டி செல்லும் வழியில் சஞ்சீவி மலை உள்ளது. இங்குள்ள அமைதியும் எழிலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இராமாயணத்தில் இலங்கைப் போரின் போது மயங்கி விழுந்த இலக்குமணனைக் காப்பாற்ற அனுமன் இம்மலையைக் கொண்டு வந்ததாகவும் பின்னர் இங்கு வீசியெறிந்ததாகவும் உள்ளூர்க் கதைகள் கூறுகின்றன. ஆகவே இங்கு உயிர்காக்கும் மூலிகைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீவில்லிப்புத்தூர்

தமிழக அரசின் இலச்சினையில் இடம் பெற்றிருக்கும் 12 நிலை கோபுரம் இவ்வூரின் அடையாளமாக விளங்குகிறது. இந்தக் கோபுரம் 192 அடி உயரமுடையது. பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் வழிபட்ட கோவில் ஆகும். ஆடிப்பூரம் திருவிழாவின்போது ஓடும் தேர் புகழ் பெற்றது. ஸ்ரீவில்லிப்புதூரின் பால்கோவாவும் பிரசித்தமானது.ஶ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் மேகமலை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை இனைத்து ஶ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சராணாலயமாக மத்திய அரசு அறிவித்துள்ளது

செண்பகத்தோப்பு மரஅணில் வனவிலங்கு உய்விடம்

 
செண்பகத்தோப்பு மீன்வெட்டி பாறை அருவி

ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்துள்ள மலைத்தொடரில் பல அரிய தாவரங்களும் உயிரினங்களும் உள்ளன. 480 ச.கி.மீ பரப்பில் 1989ஆம் ஆண்டு செண்பகத்தோப்பு என்றவிடத்தில் மரஅணில் வனவிலங்கு உய்விடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தென்மேற்கில் பெரியார் புலிச் சரணாலயத்தினைத் தொடர்ந்தும் வடமேற்கில் மேகமலை காடுகளை அடுத்தும் அமைந்துள்ளது. இந்த உய்விடத்தில் அருகிவரும் மர அணில்களின்(arboreal - Grizzled Giant Squirrel -Ratufa macrora) வாழ்விடமாக உள்ளது. பழுப்பு நிற அணில்கள் ஓர் சிறு பூனையின் அளவில் 1 முதல் 1.8 கிலோவரை எடையுள்ளன. 735மிமீ வரை நீளமுள்ளன. மரக்கிளைகள் சந்திக்கும் பிரிவுகளில் கூடு கட்டுகின்றன. இதனால் ஆபத்து நேரங்களில் ஓர் கிளையிலிருந்து மற்றொன்றிற்குத் தாவிச் செல்வது எளிதாகிறது. இதனைப் பறக்கும் அணில் என்றும் கூறுவர்.

தேவதானம்

இராஜபாளையத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் தென்காசி செல்லும் வழியில் அமைந்துள்ளது, இங்கு சாஸ்தாகோவிலும் ஆறும், அணைக்கட்டும் அமைந்துள்ளது,

வேளாண்மை

கீழ் உள்ள தரவுகள் அனைத்தும் தமிழக அரசின் தளத்தில் இருந்து உருவாக்கியவை ஆகும்.[8] இவை வருடாவருடம் மாறக்கூடிய சூழ்நிலை உள்ளதால், புதிய செய்திகளைக் காண அத்தளங்களுக்குச் செல்லவும்.

நீா் மேலாண்மை

 
பிளவக்கல் அணை

நுண்ணீா் பாசனம் என்பது ஒரு மேம்பட்ட நீா் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை தொழில்நுட்பமாகும். இந்த நீா் பயன்பாட்டு திறனை 40 – 60சதவீதம் வரை அதிகரிக்கிறது. பயிர் உற்பத்தியும், உற்பத்தி திறனும் அதிகரிப்பதற்கு நீா்பாசனம் ஒரு முக்கிய காரணியாகும். நுண்ணீா் பாசனத் திட்டம் நீா் பயன்பாட்டில் பொருளாதார வழியாகவும் திறனாகவும் செயல்படுகிறது. நீரின் பயன்பாட்டுத் திறனை தவிர, உரங்களின் பயன்பாட்டு செயல்திறன் நேரடியாக வோ்ப்பகுதிகளில் நுண்ணீா்பாசன நீா் மூலம் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் உறுதிபடுத்தப்படுகிறது. இந்த நுண்ணீா் பாசனத்தின் மூலம் களைகளின் வளா்ச்சியும், மற்றும் வேலையாட்களின் தேவையும் குறைகிறது. நுண்ணீா் பாசனத்தின் மூலம் விவசாயத்தின் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதுடன் விவசாயியின் வருமானம் மூன்று மடங்காக அதிகரிக்கின்றது. தமிழ்நாட்டில் நுண்ணீா் பாசனத்திற்கு அரசாங்கம் பெரும் உந்துதலையும் வழங்கியதுடன், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும் மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்குகிறது. இந்த திட்டம் 50 : 50 என்ற விகிதத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும், 50 : 25 என்ற விகிதத்தில் மற்ற விவசாயிகளுக்கும் நடுவன் அரசுக்கும், மாநிலத்திற்கும் இடையே பகிர்வு மாதிரியாக செயல்படுத்தப் படுகிறது.

உற்பத்தி

விருதுநகா் மாவட்டத்தில் பயிரிடப்படும் முக்கியமான தோட்டக்கலைப் பயிர்கள் மா, கொய்யா, வாழை, நெல்லி, தக்காளி, கத்தரி, வெண்டை, வெங்காயம், கொத்தமல்லி, மிளகாய், மல்லிகை, அரளி, சம்பங்கி ஆகியவைகள் ஆகும். விருதுநகா் மாவட்டத்தில் மொத்த சாகுபடி பரப்பில் 13590 எக்டேர் பரப்பில் பல்வேறான தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்படுகின்றன. தோட்டக்கலை பயிர்களின் பரப்பை அதிகரித்து உற்பத்தியை இருமடங்காகவும் விவசாயிகளின் வருவாயை மூன்று மடங்காகவும் அதிகரிப்பதே இத்துறையின் முதன்மை நோக்கம் ஆகும். மரபு ரீதியான பயிர்வகைகள் பயிரிடுதல், தோட்டக்கலை உயா் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், உழவியல் தொழில் நுட்பங்களை மேம்படுத்துதல் மற்றும் அறுவடை பின்செய் நோத்தி போன்றவைகளை தோட்டக்கலை துறை ஊக்கப்படுத்துகிறது. தோட்டக்கலை துறையின் தொழில்நுட்ப உத்திகளான தோட்டக்கலை பயிர்களை விரிவுபடுத்துதல், உயா்ரக விதைகள் சாகுபடி, உயா் அடா்த்தி நடவு, உயா் மதிப்பு தோட்டக்கலைப் பயிர்களை பசுமைகுடில் வளா்ப்பதில் ஊக்குவித்தல், நுண்ணீா் பாசனத்தின் பயன்பாடு, உற்பத்தி அதிகரிப்பதற்காக தேனீ வளா்ப்பதுடன் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, பண்ணை இயந்திரமாயமாக்கல் மற்றும் மேம்படுத்தப்பட்ட இடுகை அறுவடை மேலாண்மை தோட்டக்கலை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலப்பின காய்கறி நாற்றுகள் மாநில தோட்டக்கலை பண்ணையில் வளா்க்கப்பட்டு விவசாயிகளுக்கு பயிர்சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தி அதிகரிக்க மானிய விலையில் அனைத்து வேளாண் மக்களுக்கும் தரப்படுகிறது.

கூட்டுத் திட்டங்கள்

தேசிய வேளாண்மை வளா்ச்சி திட்டம் என்பது நடுவன், மாநில அரசின் பங்கீட்டுத் திட்டமாகும். மத்திய மாநில அரசின் மூலம் 60 : 40 என்ற வகையில் பங்கீடு செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர்களை புத்தூட்டம் செய்யும் பொருட்டு முக்கனி வளா்ச்சித் திட்டம், பாரம்பரிய காய்கறிகளை பராமரித்தல், பழங்கள், காய்கறிகள், வாசனைப் பயிர்கள், பூக்கள் போன்ற பயிர்களில் பரப்பு விரிவாக்கத் திட்டம், வெங்காயம் பயிர் உற்பத்தி திட்டம், பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர்களை வளா்த்தலின் கீழ் பசுமைக்குடில், நிழல்வலைக் குடில் அமைத்தல் முதலான உபதிட்டங்களில் தோட்டக்கலை பயிர்களை அறிமுகம் செய்யும் பொருட்டு வீட்டுக் காய்கறித் திட்டம் அமைத்தல், மூலிகைப் பயிர்கள் உற்பத்தி திட்டம் மற்றும் அறுவடை பின்செய் நோ்த்தி தொழில்நுட்பத்தின் கீழ் காய்கறி கூடைகள் வழங்குதல் முதலான திட்டங்களும் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டம் என்பது வேளாண் விளைபொருட்களை மேம்படுத்துதல், பண்ணை வளா்ப்பு போன்ற பல்வேறு கூட்டு நடவடிக்கைகளுடன் கலப்பு பயிரிடுதல், இடைபயிர் பயிரிடுதல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த வேளாண்மை அமைப்பு மூலம் பண்ணை வருவாயை அதிகப்படுத்துதல் இத்திட்டத்தின் நோக்கமாகும். மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டமானது மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையே 60 : 40 பகிர்வு மாதிரியுடன் கூடிய நிலையான தேசிய வேளாண்மை செயல் திட்டத்தின் கீழ் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=விருதுநகர்_மாவட்டம்&oldid=101039" இருந்து மீள்விக்கப்பட்டது