விசில் (Whistle) என்பது 2003 ஆம் ஆண்டில் ஜே. டி. ஜெரி இயக்கத்தில் வெளியான தமிழ்-மொழி திகில் திரைப்படம் ஆகும். இது 1998 இல் வெளியான 'அர்பன் லெஜன்ட்' என்ற ஆங்கில திகில் படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[1] இந்த படத்தின் கதாநாயகனாக விக்ரமாதித்யா நடித்துள்ளார். முக்கோணக் காதல்கதை அமைந்த இந்தப் படத்தில் காயத்திரி ரகுராம் மற்றும் செரின் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

விசில்
இயக்கம்ஜே. டி. ஜெரி
தயாரிப்புசுஜாதா
கதைஜே. டி. ஜெரி
சுஜாதா (வசனம்)
இசைடி.இமான்
நடிப்புவிக்ரமாதித்யா
காயத்திரி ரகுராம்
செரின்
விவேக்
ஒளிப்பதிவுபோசியா பாத்திமா
விநியோகம்கலாசங்கம் பிலிம்ஸ்
வெளியீடு4 ஜூலை 2003
ஓட்டம்153 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விசில் படம் 4 ஜூலை 2003 ஆம் ஆண்டு வெளியாகி சராசரியாக வசூல் செய்தாலும், டி. இமான் இசையமைத்த அதன் இசை வெற்றி பெற்றது. மேலும் விவேக்கின் நகைச்சுவைவையும் படத்தின் வெற்றிக்கு முக்கியமானது.[2]

நடிகர்கள்

உற்பத்தி

இந்த படம் உல்லாசம் மற்றும் பாண்டவர்கள் படத்திற்கு பிறகு இயக்குனர் ஜே. டி. ஜெரியின் மூன்றாவது படம் ஆகும். இந்தி மொழி விளம்பரங்களில் நடித்த புதுமுக நடிகர் விக்ரமாதித்யா இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தமிழில் உருவாகும் முதல் கல்லூரி சார்ந்த முதல் திகில் படம் இதுவாகும்.[3] இது மீடியா ட்ரீம்ஸ் தயாரிக்கும் 6வது படம் ஆகும்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=விசில்&oldid=37591" இருந்து மீள்விக்கப்பட்டது